Monday, February 27, 2012

பல"சரக்கு"கடை - 3(27/02/2012)

டமாலுக்கா அடி டுமீலுக்கா... 

                          
                                              அம்பதுரூவா புல்லட் அதுவும் என் செலவுல முடிஞ்சுடுச்சு.

வங்கிக்கொள்ளையர்களின் என்கவுண்டர் சம்பவம் அஞ்சாதே பட கிளைமாக்ஸ் காட்சியை நினைவூட்டியது.இதைப்பார்த்து கொள்ளையர்கள் கொஞ்ச நாளைக்காவது டர்ர்ராகிப்போவார்கள் என்பதில் சந்தேகமில்லை.கொள்ளையர்களைக் கண்டுபிடிப்பதும் பணத்தை மீட்பதும் நோக்கம் என்றால் எல்லோரையும் சுட்டுக்கொன்றதால் அடுத்தகட்ட விசாரணையில் தொய்வு ஏற்படுமா?வீரப்பன் என்கவுண்டரில் அவிலா முடிச்சுகளைப்போலவே இங்கும்.


பூனையை மிரட்டி புலியாக்கும் முயற்சியா? 

                                           
தமிழகத்தையே ஆண்டுகொண்டிருக்கும் மின்வெட்டு மக்கள் மனதில் கூடங்குளம் கூடங்குளம் அணுமின் நிலையம் திறந்தால் தான் மின்வெட்டு குறையும் என்று மாயத்தோற்றத்தை உண்டாக்கியிருக்கிறது(அ)உண்டாக்கப்பட்டிருக்கிறது.திருப்பூரில் நடந்த அனைத்து வணிகர்களின் கடையடைப்பு நிகழ்வுகள்,ஆதரவு எதிர்ப்பு இல்லாத நடுத்தரதினர் ஆதரவுப்பக்கம் வருவதை பார்க்க முடிகிறது.


பொங்கி வழிந்த சேரன்

மெருகேற்றிய கர்ணன் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சேரனின் சிவாஜிகாதல் ரொம்பவே பொங்கி வழிந்தது.ரீமேக் படங்களின் மீதான கோபம் தெறித்தது.தில் இருந்தா ஏதாவது சிவாஜிப்படத்தை ரீமேக் பண்ணிப்பாருங்கன்னு சவால் விட்டிருக்கார்.அவரது பேச்சில்.தமிழ் திரையுலகுக்கு சிவாஜி நடிப்புப்பிச்சை போட்டிருக்கார்.ஆனா நடிக்கனுமே,என கேட்டிருக்கிறார்.நடிங்கப்பா,அட சினிமாவுலப்பா.


சக்தே இந்தியா

                     
கடந்த ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள தகுதி பெறாமலே வெளியேறி பணால் ஆனா இந்திய ஹாக்கி அணி இந்த முறை இதுவரை நடந்த தகுத்திச்சுற்றுப்போட்டிகள் எல்லாவற்றிலும் வெற்றி பெற்று எதிர்வரும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று எழுச்சி கண்டுள்ளது மகிழ்ச்சி.32 ஆண்டு கால கனவினை நனவாக்க நமது வாழ்த்துகளை சொல்லி வைப்போம்.ஒரு சின்ன வருத்தம் நமது மகளிரணி ஒலிம்பிக்கில் தகுதி பெற முடியாமல் போனது.ஆனால் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.(சிவகுமார் அண்ணனின் பதிவை பார்க்க )

லண்டன் ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி!!





 மரணமாக அரேங்கேறிய ஒத்திகை   
                               
                                     
பெங்களூருவில் ஒரு தனியார் ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் நடந்த தீ தடுப்பு ஒத்திகை நடத்திய தீயணைப்புத்துறையினர் அந்நிறுவனத்தில் பணியாற்றிய ஒரு இளம்பெண் அதிகாரியை மாடியில் தீயில் சிக்கியவர்களை காப்பாற்றுவது எப்படி என  demo காட்ட இணையும்படி அழைத்திருக்கிறார்கள்.ஆனால் அவர்கள் demoவுக்கு பயன்படுத்திய கயிறு அறுந்து கீழே விழுந்து அவர் மரணமடைந்திருக்கிறார்.மரணத்தை தடுக்க வேண்டிய ஒத்திகை மரணம் ஏற்படுத்தியிருப்பதும்,தீயணைப்புத்துறை இந்த அளவுக்கு இத்துப்போன உபகரங்களை பயன்படுத்துவதும் அதிர்ச்சியளிக்கிறது.

பார்லிமென்ட் விஞ்ஞானி

டெல்லியில் சமீபத்தில் குண்டு வெடித்தது பற்றி நமது உள்துறை அமைச்சரின் ஸ்டேட்மெண்ட்."டெல்லியில் குண்டு வைத்தவன் நன்கு பயிற்சி பெற்றவன்.அவன் பயங்கர தீவிரவாதியாக இருப்பான்.இதற்க்கு டிவிட்டரில் எனது கமெண்ட்# அவன் கருப்பா பயங்கரமா இருப்பான்.இன்னுமொரு டிவிட்டர் நண்பரின் கமெண்ட் நச்சுன்னு இருந்தது.அது" 
  • ·
#சேட்டு கடையில அடகு வைத்தவன் பயங்கர ஏழையா இருப்பான். போயா யோவ்!




27 comments:

தனிமரம் said... Reply to comment

நாட்டு நடப்பை அலசிவந்து நல்ல தகவலைச் சொல்லிவிட்டீர்கள் .எனக்கும் கரண்டு தட்டுப்பாடு கூடாங்குளம் அனல் மின் அவசியம் என்பதை மறைமுகமாக ஆதரிக்கும் செயல்பாடு போல தெரியுது.இவ்வளவுகாலமும் சரியாகத்தானே மின்சாரம் இயங்கியது. 

தனிமரம் said... Reply to comment

குண்டு வைத்தவன் பின்ன என்ன சேட்டுமாதிரியா இருப்பான்! செருப்பு எரிஞ்சவனிடம் கேட்கனும் உள்துறை அமைச்சர்.

தனிமரம் said... Reply to comment

சேரன் சொல்வதும் சரிதான் 

திண்டுக்கல் தனபாலன் said... Reply to comment

பல்சுவை பதிவு ! வாழ்த்துக்கள் !

Unknown said... Reply to comment

அது சரி அந்த சேர ஆளு நடிகரா..டைர டக்கரா டவுட்டு மாப்ள!

Kousalya Raj said... Reply to comment

பல செய்திகளை ஒரே இடத்தில் படிப்பது நன்றாக இருக்கிறது...அதுவும் சுவாரசியமாக எழுதப்பட்டிருப்பது ரசிக்க வைக்கிறது.

கவிதை வீதி... // சௌந்தர் // said... Reply to comment

பல சரக்கில் நாட்டு நடப்பு...

சுவாரஸ்யம்...

CS. Mohan Kumar said... Reply to comment

Bengalooru incident is a shock. Got to know this from ur post only.

:((

ரஹீம் கஸ்ஸாலி said... Reply to comment

பலசரக்கு காரமாக இருக்கிறது

Unknown said... Reply to comment

//தீயணைப்புத்துறை இந்த அளவுக்கு இத்துப்போன உபகரங்களை பயன்படுத்துவதும் அதிர்ச்சியளிக்கிறது//
அடப்பாவீங்களா? ஒருவேளை கயிறு சரியா இருக்குன்னுதான் ஒத்திகை பாத்தாங்களோ? நியாயமா இவங்களை என்கவுண்டரில் போடணுமா இல்லையா?

கவி அழகன் said... Reply to comment

Nalla sarakku

சத்ரியன் said... Reply to comment

கோகுல்,

நாட்டு நடப்பு பகிர்வு சிறப்பு.

தீ தடுப்பு ஒத்திகை சம்பவம்- துயரம்.

விச்சு said... Reply to comment

பலசரக்கு ரொம்ப குவாலிட்டியா இருக்குது.

K said... Reply to comment

பல செய்திகளின் தொகுப்பு அருமை கோகுல்! அந்த அதிகாரியின் மரணம் உலுக்குகிறது!

Anonymous said... Reply to comment

சக்தே இந்தியா...

தொகுப்பு சுவாரஸ்யம் கோகுல்...

கோகுல் said... Reply to comment

@தனிமரம் கேட்டாராம் சைஸ் சின்னதா இருக்குன்னு .

கோகுல் said... Reply to comment

@Kousalyaஊக்கப்படுத்தும் பின்னூட்டத்திற்கு நன்றி சகோ.

கோகுல் said... Reply to comment

@மோகன் குமார்
பலருக்கு தெரியல.செய்திகள்ல கூட அவ்வளவா சொல்லல.

கோகுல் said... Reply to comment

@ரஹீம் கஸாலி
ரொம்ப காரமோ?

கோகுல் said... Reply to comment

@ஜீ...ஜீ நீங்க ரொம்ப காரமாகிட்டீங்க போல.

கோகுல் said... Reply to comment

@சத்ரியன்நிச்சயமா,இனிமேலாவது நடக்காம பாத்துக்கிட்டா சரி.

கோகுல் said... Reply to comment

@விக்கியுலகம் ஆனா பெரிய அப்பாடாக்கரா இருப்பார் போல மாம்ஸ்

Unknown said... Reply to comment

மரணமாக அரேங்கேறிய ஒத்திகை
இது மிக கொடுமையாக தெரிகிறதே....

ராஜி said... Reply to comment

மரணமாக அரேங்கேறிய ஒத்திகை
>>>
ஒத்திகையே மரணத்திற்கு காரணமா? பாவம் அந்த பெண்

சென்னை பித்தன் said... Reply to comment

பல சரக்குக் கடையல்ல !சூப்பர் மார்க்கெட்!!

KANA VARO said... Reply to comment

கைவசம் ஏகப்பட்ட சரக்கு இருக்கும் போல

மதுரை சரவணன் said... Reply to comment

demo saavu parithaavaththirkku uriyathu.. varuththamalikkirathu.