வந்தாச்சு,வந்தாச்சு
வணக்கம்
நண்பர்களே,நலமா?திருமணமும்,வரவேற்பும் நல்லபடியா நடந்துச்சு,வந்திருந்து
வாழ்த்தியவர்களுக்கும்,வர வாய்ப்பில்லாமல் வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டவர்கள்
அனைவருக்கும் நன்றி.கொஞ்சம் நிறையவே இடைவெளி விட்டாச்சு,இனி அடிக்கடி எழுத முயற்சிக்கிறேன்.கல்யாணத்துக்கு
அப்புறம் எழுதறத விட்ராதீங்கனு வரவேற்புக்கு வந்த நண்பர்கள் சொன்னாங்க(விதி
வலியது).
ஏனிந்த அக்கறை?
திருவண்ணாமலையை சேர்ந்த
சமூக ஆர்வலர் திரு ராஜ்மோகன் சந்திரா என்பவர் இரு நாட்களுக்கு முன்பு வெட்டி கொலை
செய்யப்பட்டிருக்கிறார்.நிலா ஆக்கிரமிப்பு தொடர்பாக
அரசியல்வாதிகள்,உயர்(?)அதிகாரிகள்,ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு எதிராக வழக்கு
தொடர்ந்து வந்திருக்கிறார்.கிரிவலப்பாதையில் வைத்து கொல்லப்பட்டிருக்கிறார்.சமூக
விரோதிகள் சுதந்திரமாகவும்,சமூக ஆர்வலர்கள் பயந்து பயந்தும் வாழும் ஊரில் நாமும்
இருப்பது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது.சென்னை பதிவர் சந்திப்பில்
திரு.யோகநாதன் நான் இரவு நேரங்களில் செல்லும் போது அக்கம் பக்கம் பார்த்து தான்
போவேன் என சொன்னது நினைவுக்கு வருகிறது.கூடவே பராசக்தி வசனமும்.
காப்பாத்துங்க...
திருமண வரவேற்புக்கு
வந்தவர்களுக்கு ரோஜா செடிகளும்,மரக்கன்றுகளும் கொடுத்தோம்.ஆர்வமாக எல்லோரும்
வாங்கிச்சென்றனர்.வாங்கியதில் இருந்த ஆர்வம் நட்டு வளர்ப்பதிலும் இருந்தால் மிக்க
சந்தோசம்.ஒரிருவர் கன்றுகள் துளிர் விடுவது பற்றி கூறி மகிழ்வடைந்தனர்.கிட்டத்தட்ட
ஐநூற்றைம்பது கன்றுகள் வழங்கினோம்.எல்லா கன்றுகளும் வாடிவிடாமல்
காப்பாற்றப்படட்டும்.(படவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்)
கோக்கா?சரக்கா?
பாரீசில் உள்ள சர்வதேச
நுகர்வோர் கழகம் ஒன்று நடத்திய ஆய்வில் கோக்,பெப்சி உள்ளிட்ட பானங்களில் ஒரு
லிட்டருக்கு பத்து சதவீதம் வரை ஆல்கஹால் கலந்துள்ளது என தெரிவித்துள்ளது.அது மட்டுமல்லாமல்
அலர்ஜி ஏற்படுத்தும் டெர்பென்ஸ் எனும் பொருளும் சேர்க்கப்படுகிறதாம்.பதிலளித்த
நிறுவனங்கள் அமெரிக்காவில்(மட்டும்) இப்படி நடப்பதில்லை என
சொல்லியிருக்கின்றனவாம்.இனிமே யாராவது நான் சரக்கு அடிக்க மாட்டேன்னு சொன்னாலும் பொய் சொல்றாங்கன்னு தான் அர்த்தம்.
கிழடு தட்டிய சிறுத்தை
கல்யாணமானதும் ஏதாவது
படத்துக்கு கூட்டிட்டு போகனும்னு வேண்டுகோள் வந்ததால் சரி போவோம்னு போனா ஊரெல்லாம்
சகுனி தான்,வேற வழியில்லாமல் (விமர்சனங்களை தாண்டி) சிறுத்தையில் பாதியாகவாவது
இருக்கும் என போனால் இது கிழடு தட்டிய சிறுத்தையாகத்தான் இருந்தது.சந்தானம்
மட்டும் அங்காங்கே சலிப்பில் இருந்து விடுவிக்கிறார்.
Tweet | ||||||
14 comments:
நீதான் தம்பி ஐ ஆம் பேக் னு சொல்லணும்( பதிவுலக ரோஜர் பெடரர் ஆச்சே)
முர்ரே-வும் சாம்பியன் கனவில் இருக்கிறார்!!!
:))
புது மாப்பிளைக்கு வாழ்த்துகள்.....!
கொலை கொலையா முந்திரிக்கா ஊர்லையா இருக்கீங்க ஜாக்கிரதையா இருய்யா.
வெல்கம் கேக் ..ச்சே பேக் கோகுல் சார்! :)
பலசரக்கு வழக்கம் போல் அருமை!
பலே சரக்கு
wish you happy married life. nay god bless you.
புது மாப்பிள்ளை, வருக!வருக!
வளமுடன் வாழ்க! நலமது விளைக!
புலவர் சா இராமாநுச
புது மாப்பிளைக்கு வாழ்த்துகள்.....!
வாழ்த்துகள் கோகுல்.
இனிய இல்லறத்தில் இணைந்தபின்
இன்று வலைப்பக்கம் அடியெடுத்து வைக்கும் நண்பரே...
வருக வருக...
பலசரக்கு பலசுவைகளில் ....
வாழ்த்துகள் கோகுல் .
// திருமண வரவேற்புக்கு வந்தவர்களுக்கு ரோஜா செடிகளும்,மரக்கன்றுகளும் கொடுத்தோம்.//
மிக நல்ல விஷயம் வாழ்த்துகள்
சுவையான பதிவு! வாழ்த்துக்கள்!
Post a Comment