ஏம்பா,ஒரு பத்து பைசாக்கு ஆசைப்பட்டது குத்தமா?இல்ல குத்தமானு கேக்குறேன்.ஏதோ வயசுப்புள்ள ஆர்வக்கோளாறுல ஒவ்வொரு ஃப்ரண்டும் தேவை மச்சான்னு நினைச்சு நிமிசத்துக்கு பத்து பைசாக்கு பேசலாம்னு புதுசா நம்பர் வாங்கி சந்தோசமா பேசலாம்னு நினைச்சா அவன இப்படியா டார்ச்சர் பண்ணறது.
என்னய்யா பண்ணான் உன்
கஸ்டமரு,போன் பேசிட்டு அலுப்பா இருக்குன்னு தூங்கிட்டு இருந்தான் எழுந்து
பாக்கறதுக்குள்ள ஒரு மெசேஜ் அனுப்பியிருந்தீங்க,அதுக்கு பத்து ஓவாவையும்
அமுக்கிட்டீங்க,சரி எதுக்கு எடுத்தீங்கனு பாத்தா ஹாய்!மச்சான் உங்களுக்கு நமீதா
பேக் ஆக்டிவேட் ஆகியிருக்கு அப்டின்னு வந்திருக்கு. என்னய்யா பாவம் பண்ணான் இந்த
பச்சப்புள்ள,உன் மொகரகட்டைக்கு நமீதா கேக்குதானு கொமட்டுல குத்து வாங்க வைக்குற?
அப்புறம் ஒருநாளு மாச
கடைசியாச்சே பேலன்சே இல்லையேன்னு சம்பளம் வர வரைக்கும் தாக்கு பிடிச்சுடலாம்னு
ரீசார்ஜ் பண்ணான்,அம்பது ரூவாய்க்கு தான்யா பண்ணான்.அதையும் நீங்களா ஏதோ காலர்
டியூன் வைச்சு சுவாகா பண்ணிட்டிங்க,அந்தப்பையன் எவ்வளவு கெஞ்சுனான்,நான் ஒன்னும் பண்லனு,இரக்கம்
இல்லையா உங்களுக்கு.
அப்புறம் உங்க சேவை மைய
உயர்(?)(யாரு யாரு)அதிகாரிகளை தொடர்பு கொள்ள என்ன பாடு பட்டிருப்பான்,அவங்கள்ட
ஊர்ல இருக்கற சாமி மேல எல்லாம் சத்தியம் பண்ணானே அப்ப கூடவா நம்பிக்கை வர்ல அவன்
மேல,அதெல்லாம் கூட தாங்கிக்கிட்டான்யா,காசு போச்சேன்னு போன் போட்டு உங்கக்கிட்ட அழுவரத்துக்கும்
அவன்கிட்ட மூணு நிமிசத்துக்கு அம்பது காசு ஆட்டைய போட்டுடீங்களே.அத நினைச்சு நினைச்சு தேம்பி தேம்பி அழுதது உங்களுக்கு தெரியாது.
நல்லா இருங்கய்யா நல்லா
இருங்க.,பாவம் அந்த பச்சப்புள்ள ரூம் போட்டு அழுதுட்டு இருக்கு.இந்த பாவம் எல்லாம்,,,,,,,,,,வேணாம்யா
நல்லா இருங்க.
Tweet | ||||||
17 comments:
மாப்ள இவர்தான் எங்கையோ செமயாக் வாங்கியிருக்கார் ஆனா இங்க வந்து யாரோ மாதிரி பீலாவிடுறார்
ஹா.ஹா.ஹா.ஹா..... ஒரு சீரியஸ் மேட்டரை காமடியாக சொன்ன விதம் அருமை பாஸ் எல்லா ஊரிலும் ஒரே மாதிரிதான் போல
ஹா ஹா ஹா....
ஊரெல்லாம் இதே பிரச்சனைதான்...
இதையெல்லாம் தட்டிக்கேட்க ஒருவன் வரமாட்டானா..?
வருவான்...
சத்தியமா சொல்றேன், அவனுங்க எல்லாம் நல்லா வருவாங்க, நல்ல்ல்லா வருவாங்க...
Same Blood...
ஹா.. ஹா.. ரசித்தேன் ! பகிர்வுக்கு நன்றி ! (த.ம. 5)
Serious matterai sema kaamediyaa sollirukkeenga.
எல்லா நெட்வொர்க்கும் இப்படித்தானா? இவர்களை திருத்தவே முடியாதா?
சரவெடி தலைவா.... விழுந்து விழுந்து சிரிச்சுகிட்டு இருக்கேன் :D (TM 8)
:))))))))))))
ஹி ஹி சூப்பர்னே நல்லா எழுதுறீங்க..
ஹய்யோ.. ஹய்யோ.. but matter is serious..
ம்
இதையெல்லாம் தட்டிக்கேட்க ஒருவன்
வணக்கம் நண்பரே... தங்களது இந்தப்பதிவு "நண்பர்கள்" ராஜ் என்பவரால் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு கீழுள்ள முகவரிக்குச் சென்று காணவும்... வாழ்த்துக்கள், நன்றி...
http://blogintamil.blogspot.in/2013/04/blog-post_23.html
ஹா ஹா ஹா செம கலாய்... நல்லவேளை இப்படி ஒரு பிரச்சனை இப்ப வரைக்கும் வந்தது இல்ல. இந்த டேட்டா விசயத்தில தான் ஏமாந்திட்டேன் ... அல்லது ஏமாத்திட்டான்...
Post a Comment