Tuesday, July 24, 2012

பல"சரக்கு"கடை 9(24/07/12)




சல்யூட் கேப்டன்


நேதாஜி அவர்களின் இந்திய தேசிய ராணுவத்தில் ஜான்சி ராணியின் பேயை கொண்ட படையில் கர்ஜித்த தமிழச்சி,மருத்துவராக இருந்த போதிலும் நாட்டிற்காக போஸின் அழைப்பை ஏற்று அவரது படையில் இணைந்தவர்.மருத்துவராக,போராளியாக,மாநிலங்களவை உறுப்பினராக,2002 குடியரசு தலைவர் வேட்பாளராக என பன்முகம் கொண்ட கேப்டன் லட்சுமி செகால் நேற்று காலமாகியிருக்கிறார்,அவருக்கு நமது அஞ்சலிகள்.
________________________________________________________________________

"பிராந்தி"ய ஒதுக்கீடு

 போன வாரம் புதுவையில் “பிராந்தி”ய இட ஒதுக்கீட்டை எதிர்த்து முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது,நிற்க(சரி உக்காந்து இருந்தாலும் பரவால்ல விடுங்க இப்ப அது விஷயம் இல்ல)அது என்ன பிராந்திய இட ஒதுக்கீடு? புதுச்சேரியில் உள்ள மருத்துவ,பொறியியல் கல்லூரிகளில் படிப்பதற்கு புதுவையின் ஆளுமைக்குட்பட்ட காரைக்கால்,மாஹி,ஏனாம் பகுதிகளை சேர்ந்த மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு இருக்கும் இட ஒதுக்கீடால் புதுவை மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறதாம்.இதனை செயல்படுத்தக்கூடாது எனக்கோரி தான் இந்த முழு அடைப்பு நடைபெற்றது.

ஏனுங்க.,

புதுச்சேரில இருக்கவங்க அரசுபணியில் காரைக்கால்,மாஹி,ஏனாம் பகுதிகள்ல வேலை செய்றாங்க,இல்ல இதனால அங்கே இருக்கவங்க இதனால பாதிக்கப்பட்றாங்க அப்டின்னு விட்டு கொடுத்துட வேண்டியதுதானே.,
_____________________________________________________________________

மறக்க முடியாத ஒலிம்பிக் துவக்கம்


2012 ஒலிம்பிக் எந்த நாளில் துவக்கப்பட்டது என வரும்காலங்களில் என்றைக்காவது நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி,கையில் ஒரு கோடி ஆர் யூ ரெடி போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது ஒரு கோடிக்கான கேள்வியில் இந்த கேள்வியை கேட்டால் நிச்சயமாக ஜூலை 27 என சொல்லி அசத்திவிடுவேன்,சும்மாவா?மறக்கக்கூடிய நாளா அது? திருமதி.கோகுலோட பிறந்த நாள் அன்னிக்கு தான்.(மறந்துட்டு இருந்துட முடியுமா என்ன?)
________________________________________________________________________


யப்பா முடியல......

நேத்து பைக்ல போகும்போது ஒருதற்கு கழுத்து ஒடிஞ்ச மாதிரி வைச்சுக்கிட்டு வண்டி ஓட்டிட்டு போனாரு,ஆமாங்க காதுல அதேதான்.,சரி ஹாரனை அடிச்சு முந்திட்டு போலாம்னு ஹாரன் அடிச்சு முந்தறேன்,அவரோட(?) வண்டி அப்டியே இடதுல இருந்து வலதுக்கு வந்துட்டே இருக்கு நானும் ஓரமா முடிஞ்சா வரைக்கும் போய் கடைசில ரோட்டை விட்டு கீழயே இறங்கிட்டேன்.அப்ப தான் அந்த பிரகஸ்பதி திரும்பி ரோட்டை பாக்குறாரு.கொய்யால இதே பின்னால வந்தது பஸ்சாவோ,லாரியாவோ  இருந்திருந்தா அந்த போன்ல இருந்தே வீட்டுக்கு தகவல் சொல்லியிருப்பேன் அப்டின்னு சொல்லிட்டு போனேன்,.

____________________________________________________________________

வாங்கப்பூ பிரணாப்பு



இவருக்கு யாராரோ வாழ்த்து சொல்லிருக்காங்க முகநூல் நண்பர் பிசாசுவின் வாழ்த்து மிகவும் கவர்ந்தது,நாமும் வாழ்த்துவோம்,
“”அதாகப்பட்டது !!!!!!!

இந்த பரந்து விரிந்த பாரத நாட்டினிலே , மக்களை விலைவாசி ஏற்றத்தால் தவிக்கவிட்ட ஒரு கொடுங்கோலனை , அரிசியை கடலில் கொட்டும்போது வாய்த்திறக்காத ஒரு டோமரை , பொருளாதார நிபுநிபுநிபுணியை , ஒன்றுக்கும் உதவாத ஒரு பதவிக்கு இவ்வளவு அலப்பறை கொடுத்து அதிபராக அமர வைத்திருக்கிறார்கள் ........ புல்லரிக்கிறது ........ எத்தனை மக்களின் பிராணத்தை வாங்கப்போறாரோ ???????

#
செந்தமிழ் நாடெனும் போதினிலே ......””” @ Pisaasu Kutty Pk

___________________________________________________________________________

70 பைசா எல்லாம் ஒரு மேட்டரா?விடுங்க பாஸ்


பெட்ரோல் விலை 70 பைசா உயர்ந்திருக்காம்,விடுங்க பாஸ் 70பைசா எல்லாம் ஒரு மேட்டரா?நூறு ரூவாய்க்கு கோழி பிரியாணி,எண்பது ரூவாய்க்கு குவார்ட்டர்,நூறு ரூவாய்க்கு சினிமா பாக்குறீங்க பெட்ரோல் விலை 70 பைசா ஏத்துனா மட்டும் ஏன் கொதிக்கீக?(அப்டீன்னு நான் சொல்லலீங்க யாராவது சொன்னாலும் சொல்லுவாக)


23 comments:

திண்டுக்கல் தனபாலன் said... Reply to comment

பல"சரக்கு"கடை 9 - நல்லா இருந்தது...
யப்பா முடியல...... and 70 பைசா மேட்டர் அருமை....
நன்றி கோகுல் (த.ம. 1)

என் தளத்தில் : மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ?

நண்டு @நொரண்டு -ஈரோடு said... Reply to comment

ம் ...

Anonymous said... Reply to comment

//பெட்ரோல் விலை 70 பைசா ஏத்துனா மட்டும் ஏன் கொதிக்கீக?(அப்டீன்னு நான் சொல்லலீங்க யாராவது சொன்னாலும் சொல்லுவாக)//

ப.சி. வயித்த கிள்ளுது.

”தளிர் சுரேஷ்” said... Reply to comment

சிறப்பான பகிர்வு! அந்த வாழ்த்த படிச்சி சிரிப்பதா அழுவதா புரியலை!

கவிதை வீதி... // சௌந்தர் // said... Reply to comment

ம்..

சூடான நாட்டு நடப்பு...

sathishsangkavi.blogspot.com said... Reply to comment

பலசரக்கு கடையில் சரக்கெல்லாம் சூப்பருரு...

அனுஷ்யா said... Reply to comment

எலேய்... பொண்டாட்டி பொறந்தநாள மறந்த சோறு இல்ல ஊறுகா கூட கெடைக்காது... (நாங்கல்லாம் இப்பவே இப்புடி..இனிமே சொல்லாவா வேணும்,..)

CS. Mohan Kumar said... Reply to comment

கேப்டன் லட்சுமியை நினைவு கூர்ந்தது அருமை கோகுல்

MARI The Great said... Reply to comment

கேப்டன் லெட்சுமிக்கு எனது வீர வணக்கங்கள்!

MARI The Great said... Reply to comment

ஒலிம்பிக்ஸ்.. பர்த்டே

எனது வாழ்த்துக்களை சொல்லிருங்கன்னே (TM 5)

வெளங்காதவன்™ said... Reply to comment

ம்..


#சத்தியமா சொல்லுறேன் சாரே.... படிச்சிட்டுத்தான் போட்டேன்....

சொல்லிட்டேன்....

ஆங்...

Admin said... Reply to comment

சரக்கு தரமாய் இருந்தது கோகுல்..

நேரமிருந்தால் வாசிக்கவும்..

Admin said... Reply to comment

பிரபல பதிவர்கள் சங்கமிக்கும் சென்னை பதிவர் சந்திப்பு

கோகுல் said... Reply to comment

@திண்டுக்கல் தனபாலன்
நன்றி சார்

கோகுல் said... Reply to comment

@! சிவகுமார் !
ரொம்பவே கிள்ளுது

கோகுல் said... Reply to comment

@s suresh
சிரிச்சுட்டே அழ வேண்டியது தான்

கோகுல் said... Reply to comment

@சங்கவி
நன்றிங்கோ!

கோகுல் said... Reply to comment

@மயிலன்
பாத்து சூதானமா நடந்துக்கணும் அப்பு!

கோகுல் said... Reply to comment

@மோகன் குமார்
நன்றி சார்

கோகுல் said... Reply to comment

@வரலாற்று சுவடுகள்
சொல்லிடுவோம்

கோகுல் said... Reply to comment

@வெளங்காதவன்™
நம்பிட்டேனுங்க!அக்காங்!!!

கோகுல் said... Reply to comment

@மதுமதி
நன்றி தோழர்.

எனது கவிதைகள்... said... Reply to comment

கேப்டன் லெட்சுமிக்கு (தமிழச்சிக்கு) எனது வீர வணக்கங்கள்!



உண்மைவிரும்பி.
மும்பை.