Saturday, June 2, 2012

எதிர்பாராத முத்தம்- சென்னை யூத் பதிவர் சந்திப்பு




பதிவர்கள் ஒவ்வொருவராக(அணி அணியாகவும்,அணி திரண்டும்) வரத்துவங்கினர்,புலவர்.சா.இராமாநூசம் ஐயா வந்திருந்தது யூத் பதிவர்கள் சந்திப்பிற்கு சிறப்பு சேர்த்தது.சிறப்பு விருந்தினர்களான மரங்களின் இல்லை இயற்கை காவலர் திரு.யோகநாதன் மற்றும் IQ TOPPER சிறுமி விஷாலினியும் வந்தனர்.சத்யம் டி.வி.க்கு அவர்கள் பேட்டியளித்தபின் சிவகுமார் அண்ணன் என்கிட்ட்ட வந்து முன்னால போய் உக்காருங்க அப்டின்னு சொன்னாரு.

எனக்கு ஒன்னுமே புரியல.எதுக்குங்கனு கேட்டேன்,விஷயம் இருக்கு உக்காருங்கனு சொன்னாரு.நான் கூட சரி என்னோட திருமணத்தை பதிவர்கள் அனைவர் முன்னிலையில் அறிவித்து அழைப்பிதழ் கொடுக்கத்தான் போலிருக்கிறது என நினைத்து போய் அமர்ந்தேன்.

பின்னர்,விஷாலினி தன்னைப்பற்றி பேசி,அவரது தாயார் அவரைப்பற்றி பேசி,பதிவர்களின் சில பல கேள்விகளுக்கு IQ நிறைந்த பதில் சொல்லிய பின்னர் திரு யோகநாதன்,இந்த சிறுமி இந்த வயதிலேயே கணினி பற்றியும் பிற விசயங்களைப்பற்றியும் இவ்வளவு தெரிந்து வைத்திருப்பதையும் பார்த்து நமக்கு இந்த அளவுக்கு ஞானம் இல்லையென நினைத்து தமக்கு வெக்கமாக இருப்பதாக கூறினார்.


பிறகு கடந்து சுமார் 25 ஆண்டுகளுக்கும் இயற்கைக்கு காவலாகவும்,அழிந்து வரும் இயற்கையை மீட்டெடுப்பதில் அவராற்றி வரும் பங்களிப்பையும்,அதன் மூலம் அவர் அடைந்து வரும் இன்னல்களையும் பற்றி கூறினார்.இப்போது  வெக்கம் எனக்கு வந்து விட்டது.இப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில் நம்மை அமர வைத்து விட்டார்களே என நினைத்து.தர்மசங்கடத்தில் நெளிந்தேன்.

அவர் பேசி முடித்து பதிவர்களிடையே கருத்து பரிமாற்றம் முடிந்துவுடன் நிகழ்ந்தது அந்த நிகழ்வு.சிவகுமார் அண்ணன் சந்திப்பை தொகுத்து வழங்கிய கேபிளாரின் காதில் கிசுகிசுக்க கேபிள் அறிவித்தார்.இந்த வருடம் ஒரு புதிய முயற்சியாக சிறந்த இளம் பதிவர் என்ற ஒரு விருதினை இந்த சந்திப்பில் வழங்கப்போகிறோம்,அதை பெறுபவர் கோகுல் என்றார்.


காதலியிடம் கேட்டுப்பேரும் முத்தத்தை விட எதிர்பாராமல் கிடைக்கும் முத்தம் ஒரு எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக இருக்கும்,அப்படி அமைந்தது எனக்கு அந்த தருணம்.பேசச்சொல்லி மைக்கை கொடுத்ததும்,எழுத அமரும் போது டைப்ப வரும் தைகிரியம் எங்கே போச்சோ தெரியல,ஏதோ ஒரு மாதிரியா பேசி(?)சமாளிச்சேன்.புலவர் ஐயா,சென்னைபித்தன் ஐயா கைகளால் விருதும் பரிசும் பெற்றது நெகிழ்ச்சியான தருணம். இப்போ வீட்ல கணினி முன்னால உக்காரும் போது கொஞ்சம் மரியாதை கிடைக்குற மாதிரி தெரியுது.
நிகழ்ச்சி ஏற்பாடு செய்து சிறப்புற நடைபெற உறுதுணையாக இருந்தவர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல.




( நேரமின்மை காரணமாக சந்திப்பின் சில சுவாரஸ்யங்களை,தகவல்களை பகிர்ந்து கொள்ள முடியல)

டிஸ்கி-இன்று ஊருக்கு கிளம்புகிறேன் திருமணத்திற்கு இராசிபுரம் வரும் நண்பர்கள் 9791280127 & 9486146881 என்ற எண்களில் தொடர்பு கொள்ளுங்கள். அழைப்பு கிடைக்காத நண்பர்கள் இதனை அழைப்பாக ஏற்றுக்கொள்ளுங்கள்.நன்றி.சந்திப்போம்.

14 comments:

இராஜராஜேஸ்வரி said... Reply to comment

இனிய வாழ்த்துகள் !

rajamelaiyur said... Reply to comment

//காதலியிடம் கேட்டுப்பேரும் முத்தத்தை விட எதிர்பாராமல் கிடைக்கும் முத்தம் ஒரு எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக இருக்கும்
///

பாரடா .. திருமணம் என்றாதும் முத்தம்லாம் நாபகம் வருது .. ஹா. ஹா.

rajamelaiyur said... Reply to comment

வாழ்த்துகள் .. விருது சரியான நபர்க்குதான் வழங்கி உள்ளனர்

rajamelaiyur said... Reply to comment

மாணவர்களே ! பெற்றோர்களே !

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் முதல் முறையாக நமது பிளாக்கில் ...

Philosophy Prabhakaran said... Reply to comment

யாருய்யா அது உனக்கு கிஸ்ஸு கொடுத்தது...

MARI The Great said... Reply to comment

ஹி ஹி ஹி .., தலைப்பை பார்த்ததும் "சந்திப்பில்" ஏதோ 'சம்பவம்' நடந்திருக்குன்ன்னு நினைச்சு ஓடி வந்து மாங்குமாங்குன்னு படிச்சா கடைசில இப்பிடி ஆகிருச்சே தல :D

ஒரு மனிதனுடைய வாழ்க்கை இல்லறத்திற்குள் நுழைகையில் தான் முழுமையடைகிறது என்று நம் ஆன்றோர்கள் கூறியிருக்கிறார்கள்., அந்த முழுமையை சில நாட்களில் எட்ட காத்திருக்கும் நண்பருக்கு என் இனிய உளமார்ந்த வாழ்த்துக்கள் ..!

Unknown said... Reply to comment

வாழ்வில் எல்லா வளமும் பெற திருமணநாள் வாழத்துகள்......

பன்னிக்குட்டி ராம்சாமி said... Reply to comment

தலைவரு ரொமாண்டிக் மூடுல இருக்காருய்யா.........வாழ்த்துகள்.....!

Unknown said... Reply to comment
This comment has been removed by the author.
பால கணேஷ் said... Reply to comment

சந்தோஷமாப் போய் கல்யாணத்தை நல்லபடியா முடிச்சுட்டு வாங்க கோகுல்! புதுச்சேரியில சந்திக்கறேன். என்னோட இதயம் நிறைந்த அட்வான்ஸ் நல்வாழ்த்துக்கள்!

Anonymous said... Reply to comment

//Philosophy Prabhakaran said...
யாருய்யா அது உனக்கு கிஸ்ஸு கொடுத்தது...//

தம்பி கல்யாணத்த முடிக்க வுடுய்யா மொதல்ல...

Admin said... Reply to comment

பதிவர் சந்திப்பில் விருது பெற்றதற்கும், தங்கள் திருமணத்திற்கும் வாழ்த்துக்கள் நண்பா!

CS. Mohan Kumar said... Reply to comment

பரிசுக்கும் திருமணத்துக்கும் வாழ்த்துகள் கோகுல்

ArjunaSamy said... Reply to comment

ADD ON - Sim card வாங்கி கொடுத்தாச்சா? கோகுல்......

வாழ்த்துக்கள்.....