வணக்கம் நண்பர்களே!
கொஞ்சம்(நிறையவே)
தாமதமாகிவிட்டது,பொறுத்தருள்க,
அண்ணன் சிவகுமார் கடந்த
மாச கடைசியில்(மாமூல் கேக்கலைங்க),சாட்டிங்ல வந்து மே 2 week யூத் பதிவர்
சந்திப்பு ஏற்பாடு பண்ணியிருக்கோம் அப்டின்னாரு,அச்சோ அண்ணே,மே 2nd sunday
வரலயே,அப்டின்னா வர்றது கஷ்டம்தான் அப்படின்னேன்,தம்பி 2nd sunday அப்டின்னு தான்
சொன்னேன்,சரியா பாரு அப்டின்னாரு( நான் தெளிவாத்தான் இருந்தேன் நம்புங்க,ஏதோ சின்ன
குழப்பம் அவ்ளோதான்),அப்புறம் என்ன ஜமாய்ச்சுடலாம் அப்டின்னு சொன்னேன்.நம்ம
நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழை நேரில் பார்த்து கொடுக்க நல்ல வாய்ப்பாக அமையும்
என்ற மகிழ்ச்சி அப்போதே.
[ சந்திப்பை சிறப்புற நடத்தியதில் முக்கிய பங்காற்றிய சிவகுமார் அண்ணன் ]
அப்புறம் மே மூணாவது
வாரத்துக்கு சந்திப்பு மாற்றப்பட்டது இந்த சமூகம் நன்கு அறியும்.சிவகுமார் அண்ணன்
ரெண்டு நாளைக்கு முன்னதாகவே போன் போட்டு அழைத்தார்.தவறாமல் வருவேன் என
சொன்னேன்.சனிக்கிழமை மாலையே கிளம்பி சென்னை வந்தாச்சு.பஸ்ல வரும் போதே சிவகுமார்
அண்ணன் போன் பண்ணாரு,உங்க முழு பேரு என்ன,இனிசியல் என்ன அப்டின்னு
கேட்டாரு.ஒருவேளை நாம சொன்னமாதிரி பேனர் தான் அடிக்க கேக்குராறோனு
நினைச்சுக்கிட்டு சொன்னேன்.உடனிருந்த FOOD ஆபிசர் பேசினார் ,சந்திக்க ஆவலுடன் இருப்பதாகவும்
ஒரு SURPRISE இருப்பதாகவும் சொன்னார்,பேனர் கன்பர்ம் போல அப்டின்னு
நினைச்சுக்கிட்டேன்.
[ ஆபீசருடன் சென்னைப்பித்தன் சார் ]
ஞாயிற்றுக்கிழமை நண்பனோட சேப்பாக்கம் சென்னை பல்கலைக்கழகம் வரை அவரோட வேலைக்காக போயிட்டு(நாட்ல நிறைய பேர் படிக்கறாங்கப்பா),அப்டியே கே.கே.நகரை நோக்கி (ஓசி)பைக்கை போக சொன்னேன்.ரெண்டு மூணு இடத்தில் வழி கேட்டு(நன்றி –சுத்தல்ல விடாம சரியா சொன்னாங்க)சீக்கிரமாவே டிஸ்கவரி புக் பேலசை அடைந்தேன்.சிவகுமார் அண்ணனுக்கு போன் போட்டு எங்கண்ணே இருக்கீங்கனு கேட்டேன்,தோ அஞ்சு நிமிசத்துல வந்துடுவேன் அப்டின்னு சொன்னார்.ஓகே ஓகே,சந்திப்பில் முதலிடம் பிடித்த பதிவர் நாம தான்னு நினைச்சுக்கிட்டு காத்திருந்தேன்.சரியா மூணேமுக்கால் நிமிசத்தில ஆரூர் மூனா செந்திலுடன் வந்தார்.வந்து என்ன பண்ணார்.பைக் கண்ணாடியில் முகம் பார்த்து ,யூத் பதிவர் சந்திப்பில் யூத்தாக தெரியணும் அப்டின்னு சொல்லிட்டு எங்களுதும் பரட்டைத்தான்,சீப்பும் வைச்சிருக்கோம்,கலைச்சு விட்டு சீவுவோம்னு தலை சீவினார்.
ஞாயிற்றுக்கிழமை நண்பனோட சேப்பாக்கம் சென்னை பல்கலைக்கழகம் வரை அவரோட வேலைக்காக போயிட்டு(நாட்ல நிறைய பேர் படிக்கறாங்கப்பா),அப்டியே கே.கே.நகரை நோக்கி (ஓசி)பைக்கை போக சொன்னேன்.ரெண்டு மூணு இடத்தில் வழி கேட்டு(நன்றி –சுத்தல்ல விடாம சரியா சொன்னாங்க)சீக்கிரமாவே டிஸ்கவரி புக் பேலசை அடைந்தேன்.சிவகுமார் அண்ணனுக்கு போன் போட்டு எங்கண்ணே இருக்கீங்கனு கேட்டேன்,தோ அஞ்சு நிமிசத்துல வந்துடுவேன் அப்டின்னு சொன்னார்.ஓகே ஓகே,சந்திப்பில் முதலிடம் பிடித்த பதிவர் நாம தான்னு நினைச்சுக்கிட்டு காத்திருந்தேன்.சரியா மூணேமுக்கால் நிமிசத்தில ஆரூர் மூனா செந்திலுடன் வந்தார்.வந்து என்ன பண்ணார்.பைக் கண்ணாடியில் முகம் பார்த்து ,யூத் பதிவர் சந்திப்பில் யூத்தாக தெரியணும் அப்டின்னு சொல்லிட்டு எங்களுதும் பரட்டைத்தான்,சீப்பும் வைச்சிருக்கோம்,கலைச்சு விட்டு சீவுவோம்னு தலை சீவினார்.
[ அலை கடலென திரண்ட கூட்டத்தில் ஒரு பகுதி ]
அப்புறம் மூவருமாக புக் பேலசை அடைந்து வேடியப்பன் அவர்களை
பார்த்தோம்,சிவாவும்,செந்திலும் எப்படி சந்திப்பை நடத்தலாம் என
திட்டமிட்டார்கள்.நான் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தேன்.அங்கே எனது முதலிட பதிவர்
டைட்டிலுக்கு ஒருவர் வேட்டு வைத்தார்.அவர் வேறு யாருமல்ல கேபிளாரின் செட் அப் என்று
சொல்லப்படும் பால கணேஷ்.வியர்க விறுவிறுக்க ஒரு மணி நேரமாக காத்திருந்தாராம்( நம்ம
பதிவர்களோட டக்கு தெரியல போல-இனிமே தெரிஞ்சுக்குவீங்க)மறுநாள் எக்ஸாம்
இருந்துச்சாம் இருந்தாலும் நம்மை எல்லாம் சந்திக்கணும்னு வந்தேன்
அப்டின்னாரு.(குறிப்பாக கேபிளாரை சந்தித்து தனக்கு ஏன் பதிலளிக்கவில்லை என கேட்டு
போக வந்திருப்பத்தாக சொன்னார்.)
சற்று நேரத்தில் FOOD
ஆபிசர் வந்தார்,அவரோடு அறிமுகமாகி பேசிக்கொண்டிருந்தேன்,பிறகு மாஸ்சதீஷ் (எனக்கு
இப்டிதான் வருது சதீஷ் மாஸ்)வந்தவுடன் ஜாக்கி வராரா,ஜாக்கி வராரா என சிவகுமார்
அண்ணனை போட்டு தாளித்து கொண்டிருந்தார்.தமிழ்பேரன்ட்ஸ்
சம்பத்குமார்,வீடுசுரேஷ்குமார்,நாய்நக்ஸ் நக்கீரன் மூவரையும் குளிக்க
அனுப்பிவிட்டு வந்தேன் இவ்ளோ நேரமா குளிக்கறாங்க என ஆரூர் மூனா புலம்பினார்,கொஞ்ச
நேரத்தில் ஆட்டோவில் வருகிறோம் எங்கே பாண்டிச்சேரி கெஸ்ட்ஹவுஸ் என போன் போட்டு
விசாரித்துகொண்டிருந்தனர்.
[ மாஸ் காட்டிய சதீஸ் ]
நான் கீழே இறங்கி போய் பார்த்தேன்,நம்ம நக்ஸ் ஆட்டோல
இருந்து தலைய வெளிய நீட்டிக்கிட்டு சுத்தி சுத்தி பாத்துக்கிட்டு வந்தாரு.பாத்து
கூப்பிட்டதும் சென்னைல கூட நம்ம பேஸ் பிரபலம் ஆகிடுச்சு என புளங்காகிதம்
அடைந்தார்.ஒரு தாரை இல்லையா,தப்பட்டை இல்லையா,அட்லீஸ்ட் ஒரு பட்டாசு பேனர் கூட
இல்லையா?என அக்கப்போர் வராமலே அக்கப்போர் செய்தார்.பதிவர்கள் ஒவ்வொருவராக
சங்கமிக்க ஆரம்பித்தனர்.பிரபாகரும் அஞ்சாசிங்கமும் வந்தனர்.பிரபாகர்
சர்ச்சைக்குரிய TSHIRT அணிந்து வந்திருந்தார்.
சந்திப்பில் நடந்த
சுவாரஸ்யங்கள் பலரும் எழுதியிருப்பாங்க,இருந்தாலும் நானும் எழுதலைன்னா மனசு
தாங்காதுங்க,சந்திப்பின் நிகழ்வுகள் அடுத்த பதிவில் பார்க்கலாம்.(ம்ம்ம்,அதுக்கு இன்னும் எவ்ளோ நேரம் ஆகப்போகுதோ தெரியல.......)
Tweet | ||||||
12 comments:
வாழ்த்துக்கள் புது மாப்பிள்ளை கோகுல்...
யோவ்... பெஸ்ட் ப்லாகர்லாம் வாங்கிருக்க.. அதா பத்தி எதுவுமே எழுதலா...? அதுக்குதான் அடுத்த பதிவா? அது சரி...ஐயாவுக்கு டீ வட கூட இல்லையா?
வாழ்த்துகள் கோகுல்... உண்மையான முதலிட பதிவர் நீங்கதான்னுற டிவிஸ்டை எத்தனையாவது பாகத்தில் வெளியிடப் போகிறீர்கள்...
//அலை கடலென திரண்ட கூட்டத்தில் ஒரு பகுதி//
kusumbu jaasthi thambi unakku!!
ஸ்ஸ்ஸப்பா என்னா க்ரவுடு .. :D
‘சிறந்த’ யூத் பதிவர் முதலிடப் பரிசை வென்றதற்கும், புது மாப்பிள்ளை ஆகவிருப்பதற்கும் என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் கோகுல்!
வாழ்த்துகள் கோகுல்...For the award
வாழ்த்துகள் கோகுல்! என்னய்யா பிரபாகரன் பிபாஸாபாசுவா சர்ச்சைக்குறிய டிசர்ட் போட்டிட்டு வந்தாரு.....!
வாழ்த்துக்கள் பாஸ்
மாப்பிள்ளைக்கு மீண்டும் வாழ்த்துக்கள்!
வாழ்வாங்கு வளமுடன் வாழ்க!
புலவர் சா இராமாநுசம்
புது மாப்பிள்ளைக்கு பதிவு போடா நேரம் இருக்கா ?
மனமார்ந்த வாழ்த்துகள் தம்பி...!!!
Post a Comment