கடவுள் இருக்காரா
கொமாரு ......
கொஞ்ச நாளா பேப்பர
புரட்டுனா,நியூஸ் பாக்கும் போதெல்லாம் தினமும் ஏதாவது ஒரு கோவில் தேரோட்டத்துல
தேர் அச்சு முறிஞ்சு நாலு பேர் பலி,அஞ்சு பேர் கவலைக்கிடம் அப்டின்னு
வருது,ஊருக்கே மின்சாரம் இல்ல,அப்டி இருக்கும் போது சப்பரத்தில் மின்சாரம் பாய்ந்து
உயிரிழக்கும் சம்பவங்களும் நடக்கிறது,ஒருவேளை எப்படியும் கரண்ட் இருக்காதுங்கற
தைரியத்தில் போயிருப்பாங்களோ? கடவுள் இருக்காரு கொமாருனு புதுப்பேட்டைல ஒரு டயலாக் வருமே,இதெல்லாம் பாக்கும் போது மேல சொன்ன மாதிரி கேக்க தோணுது.
காத்து கொடுக்குது,நெருப்பு
கெடுக்குது
காற்றாலை மின் உற்பத்தி
அதிகரித்து மின்வெட்டு குறைந்த மகிழ்ச்சியை கொஞ்ச நாளைக்குள்,மேட்டூர் அனல்மின்
நிலையத்தீ மட்டுப்படுத்தி விட்டது.அப்புறமென்ன வியர்வைக்குளியலுக்கு தயாராக
வேண்டியது தான்,விடுங்க பாஸ்,இது என்ன நமக்கு புதுசா என்னா?
கார்த்திக்கும்,பிரபுவும்
கார்த்திக்கும்,பிரபுவும்
மணிரத்னதுடன் இணைந்து (இதுக்கு நீ அக்னி நட்சத்திரம்னே சொல்லியிருக்கலாம்) படுத்தும்
பாடு தாங்கலைங்க,ஒரு வாரமா,கண்ணெல்லாம் எரிச்சல்,கண்ணை சுத்தி கருப்பாகிடுச்சு(இந்த
நிலைமையில இப்போ பொண்ணு பாக்க போயிருந்தா கல்யாணம் இன்னும் கொஞ்சம்
தள்ளிப்போயிருக்கும்,விதி வலியது!),கால் ஷூவோட ஒட்டிக்கும் போல இருக்கு.பைக்ல
போகும் போது யாரோ நெருப்ப அள்ளி தூவுறது
போல இருக்கு.போன வருசத்தோட இந்த வருஷம் வெயில் ஜாஸ்தில்ல,ச்சே வருசா வருஷம் இப்டி
வெயில் அதிகமாகிட்டே இருந்தா எப்டிதான் மனுஷன் இருக்கிறதோ ,அப்டிங்கற வழக்கமான டயலாக்கை
சொல்லி தேத்திக்க வேண்டியதுதான்.
எல்லா டிரைவருக்கும்
ஓரே ஃபீலிங்
கொஞ்ச நாளா நான் போற
எல்லா தனியார் பஸ்லயும் பாத்து வியந்த ஒரு விஷயம் சொல்லி வச்ச மாதிரி ஒரு மணி
நேரப்பயணத்தில ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் பாட்டும் , வேணாம் மச்சான்
வேணாம் இந்த பொண்ணுங்க காதலு பாட்டும் தவறாம ஒலிக்குது,இல்ல இல்ல கதறுது.ஒவ்வொரு
மனுசனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்,எல்லா டிரைவருக்கும் ஒரே ஃபீலிங் போல,இதே போல நான்
கல்லூரி படித்த( ம்ம்ம்,சரி,சரி கல்லூரிக்கு போன அப்டினே வைச்சுக்கங்க)காலத்தில்
எங்கே போனாலும் வருஷமெல்லாம் வசந்தம்,உன்னை நினைத்து பாடல்கள் ஒலித்தது
நியாபகத்துக்கு வருது.
ஆ.ராசா வா ராசா
கிடைசாச்சுங்க இன்னும்
சில நாட்களுக்கு பத்திரிக்கைகளுக்கும்,செய்தி சானல்களுக்கும்,ஏன் நமக்கும் தான்
செம மேட்டர்.கடல்லயே இல்லேன்னு சொல்லிட்டு இருந்த ஜாமீனை எப்டியோ தேடி
கண்டுபிடிச்சு கொடுத்துட்டாங்க.இதுக்கு நம்ம மௌனகுரு கருத்து சொல்ல
விரும்பவில்லையாம்,என்னத்த சொல்லி என்னத்த பண்றதுனு நினைக்கிறார் போல(வழக்கம்
போல),என்னத்த கண்ணையா மாதிரி இவர என்னத்த பிரதமர்னு இனிமே கூப்டுக்கலாம்.
இதை பாத்துட்டு
ஆகிடாதிங்க டர்ர்ர்....
தானே தாங்கிய தானை
தலைவர்
Tweet | ||||||
17 comments:
//என்னத்த கண்ணையா மாதிரி இவர என்னத்த பிரதமர்னு இனிமே கூப்டுக்கலாம்.
//
பிரதமரா ? அப்படினா யாரு ?
//நான் கல்லூரி படித்த( ம்ம்ம்,சரி,சரி கல்லூரிக்கு போன அப்டினே வைச்சுக்கங்க//
உண்மையா ஒத்துகிரதுல நீங்க அரிச்சந்திரனுக்கு பக்கத்து வீடு
பேப்பர் மேட்டர் உண்மையில் கிர்ர் ..
பேப்பர் மேட்டர் உண்மையில் கிர்ர் ..
பேப்பர் மேட்டர் உண்மையில் கிர்ர் ..
தமிழ்மணத்துல குத்திடேன் பாஸ்
தேர் அச்சு முறிந்தால் அந்த தேர் எவ்வளவு எடையை தாங்கும் எவ்வளவு தூரம் ஓடத்தகுதியானது என்று சோதிக்காக மனிதனின் கவனக்குறைவினால் அன்றி வேரேதினால் இருக்க முடியும் ..?
இறைவன் எங்கும் இருக்கிறார், ஆனால் எப்போதும் நம்மை காத்துக்கொண்டிருப்பது அவர் வேலையல்ல ..!
கடவுள் இருக்கிறாரா? இல்லையா? பலசரக்கு நல்ல செய்திகளுடன் இருந்துச்சு. வாழ்த்துக்கள்.
பயனுள்ள சுவாரஸ்யமான பலசரக்கு
தொடர வாழ்த்துக்கள்
Tha.ma 3
(அப்புறம் அந்த பேனர்,பேனர் மறந்துடாதிங்க பொதுக்குழு உறுப்பினர்களே)
/////////////////
கடவுள் இருக்காரு கொமாரு!
சந்திப்போம் கோகுல் பதிவர் சந்திப்
பில்!
புலவர் சா இராமாநுசம்
பதிவு செம கிர்..... கிர்....
naalaiya pudhuvai thunai mudhalvar avargale varuga varuga...
அருமையான அலசல் கோகுல்.. யாதார்த்த நிகழ்வுகளில் உங்களின் கற்பனை வார்த்தைகளையும் கலந்து கொடுத்திருப்பது தித்திப்பு.. பதிவைவிட வீடு சுரேஷ் குமார் கொடுத்திரும் 'கமெண்ட்' நிறைய நேரம் சிரிக்க வைத்தது.. ஹா...ஹா...!!!
உங்க பலசரக்கு கடையில இருக்கும் பொருளெல்லாம் நல்ல தரமாதான் இருக்கு சகோ.
அது என்ன யூத் பதிவர் சந்திப்பு? யூத் மட்டும் தான் பதிவு எழுதுகின்றார்களா? யூத் மட்டுமே சந்திக்க தகுந்தவர்கள் என்றா?
Post a Comment