Wednesday, January 8, 2014

பல"சரக்கு"கடை 15- 08/01/2014

வணக்கம் நண்பர்களே,
   சற்று தாமதமான புத்தாண்டு வாழ்த்துகள்.வருஷமும்,பிகரும் கடந்து போனா திரும்பி பாக்குறது சகஜம் தானே?லைட்டா ரொம்பவே லைட்டா திரும்பி தான் பாப்பமேன்னு பாத்தேன்,எனக்கான வரையில் திருமணமானதும் கேட்கப்படும் டெம்ப்ளேட் கேள்விக்கான பதிலா இருந்தாலும் ஆமாங்க என்ற பதில் சொன்ன  போது ஒரு குறுகுறுப்பான அனுபவத்தை அளித்த ஆண்டு இதுதான்,அவ்வகையில் மறக்க முடியாத ஆண்டு.(வேற எதுவும் சொல்லிக்குற மாதிரி பண்ணல).
                                                நன்றி-வெங்கட் நாகராஜ் சார்
வலையுலகில்  கடந்த ஆண்டில் ஒன்பது பதிவுகள் மட்டுமே(சோம்பேறித்தனத்தின் உச்சம்).அதிலும் ஒன்று சீனுவினாலும் (காதல் கடிதம்)இன்னொன்று பதிவர் சந்திப்புக்கான அறிவிப்பும்.எப்பவும்,எல்லோரும் சொல்லும் பதிலைப்போலவே "இனிமே அடிக்கடி எழுத முயல்கிறேன்".ஆகஸ்டு புரட்சியில் கலந்து கொண்டது சிலிர்ப்பான அனுபவம்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

தனிப்பட்ட வாழ்க்கைக்கு அப்புறம் ஒரு காமன்மேன் வாழ்க்கைல அடுத்த இடம் என்னவா இருக்க முடியும்?absolutely சினிமா.

அனுபவித்து பார்த்த படங்கள்-ஓநாயும் ஆட்டுக்குட்டியும்,பரதேசி,சூது கவ்வும்,விஸ்வரூபம்
ரசித்து பார்த்த படங்கள்-நேரம்,மூடர்கூடம்,இ.தா.ஆ.பாலகுமாரா,ஆ.கா.செய்வீர்,சென்னையில் ஒரு நாள்

சினிமாவாக மட்டும் பார்த்து ரசித்த படங்கள்-வ.வா.சங்கம்,ஆரம்பம்,சிங்கம்2,பாண்டியநாடு,இவன் வேற மாதிரி,என்றென்றும் புன்னகை
பார்க்க(தவறவிட்ட)  நினைக்கும் படங்கள்-விடியும் முன்,6மெழுகுவர்த்திகள்,ஹரிதாஸ்,தலைமுறைகள்,பிரியாணி,இரண்டாம் உலகம்
நொந்த படங்கள்-வேணாம் விடுங்க பாத்து நொந்ததே போதும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கேட்பதற்கு மட்டுமல்லாமல் மேக்கிங்கிலும் அசத்தி திரும்ப திரும்ப பார்க்க வைத்த பாடல்கள் சில,

பார்க்காதே,பார்க்காதே-வ.வா.ச
காதல் என்னுள்ளே -நேரம்
என் வீட்டுல நான் - இ.தா.ஆ.பாலகுமாரா
என் ஃப்யூசும் போச்சே-ஆரம்பம்(இந்த பாட்டு எடுக்கும் போதும் பார்த்தேன் )
இன்னும்  கொஞ்ச நேரம்-மரியான்
உனை காணாத-விஸ்வரூபம்

                              இந்த ஒரு பார்வையால தானே நானும் பாழானேன்


இதுvise versa லிஸ்ட்

fy fy fy-பாண்டியநாடு(பாடிய வாயும் ஆடிய காலும் ஒன்றாயிருந்திருப்பின் இது முந்தையலிஸ்டில் வந்திருக்கக்கூடும்)
கடல் படத்தின் எல்லா பாடல்கள்
அவத்த  பையா-பரதேசி
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

போயிட்டு வாங்க தல


  நான் கிரிக்கெட் பார்க்க,விளையாட தொடங்கியதில் முழு முதல் காரணம் சச்சின்.அந்த வகையில் இந்த விஷயம் நடக்காமலிருந்திருக்கலாம் என உள்ளிருந்து ஒன்று சொல்லிக்கொண்டே இருக்கிறது.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

அஞ்சலி


                                                             Peace In Rest


நீங்கள் இந்த மண்ணிற்கு விட்டுச்சென்றதை விட
விதைத்து சென்றவை அதிகம்......,

நம்மை இயற்கையோடு இணைத்து
இயற்கையோடுஇணைந்த இயற்கையை வணங்குவோம்.


மற்றும்  வாலி ,மணிவண்ணன்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 அரசியல்
தமிழகத்திலிருந்து புதுவை வாக்காளர் பட்டியலுக்கு மாற்றலாகிவிட்டது,அப்புறமென்ன -அய்யய்யோ நீங்க நினைக்குற மாதிரி இல்ல வர்ற தேர்தலுக்கு ஓட்டு போட்டுற வேண்டியதுதான்.

அடிச்சான் பார்றா மொத பால்லயே சிக்சர் அவார்டு 
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

புத்தாண்டுன்னா resolution இல்லாமலா டெப்பனட்லி,
டெப்பனட்லி



                                   ஒரு சில செடிகளுடனாவது இந்த ஆண்டை கடப்போம்.
                                                                வாழ்த்துகள் 2014.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ 
2014 நிச்சயம் மறக்கவியலாத ஆண்டாக அமையும்,ஆம்,எனக்கான புது உலகம் இன்னும் சில நாட்களில் பிறக்கவிருக்கிறது.நினைத்துப்பார்க்கவே மனம் பரபரக்கிறது சொல்லவியலாத எண்ணங்கள் ,உணர்வுகளுடன் அந்நாளை எதிர்நோக்கியிருக்கிறேன்.பிரசவிக்கப்போவது நானில்லை,போதிலும் அடிவயிற்றில் விறுவிறுக்கிறதெனக்கு.
 சந்திப்போம்!!!
நட்புடன்,
ம.கோகுல் 



13 comments:

கார்த்திக் சரவணன் said... Reply to comment

இந்த வருஷம் நிறைய எழுதுங்க நண்பா....

Anonymous said... Reply to comment

வாழ்த்துக்கள், பெரிசா கையை குலுக்கிக்கிறேன். கலக்குங்க டாடி.

MANO நாஞ்சில் மனோ said... Reply to comment

ஒரு வருஷத்துல ஒன்பது பதிவா ? எடுங்கய்யா அந்த அருவாளை ஒரே போடா போட்டுருவோம்.

சரக்குகடை நல்லாத்தான் இருக்கு...

இனியாவது தொடர்ந்து எழுதுய்யா.

செங்கோவி said... Reply to comment

//வலையுலகில் கடந்த ஆண்டில் ஒன்பது பதிவுகள் மட்டுமே.//

புது மாப்பிள்ளைன்னு அப்படித்தான்யா!

திண்டுக்கல் தனபாலன் said... Reply to comment

இந்த ஆண்டு நிறைய பதிவுகளை எழுத வாழ்த்துக்கள்...

arasan said... Reply to comment

வணக்கம் தல ....

சோம்பேறித் தனத்தை தூக்கி தூர வீசிவிட்டு எழுத வாங்க ...அப்புறம் பாடிய வாயும் ஆடுன காலும் ஒன்றாக இருந்தால் எனக்கும் அதே தான் தோனுச்சி ... லச்சுக்கு குத்து பாட்டு செட்டு ஆகல தல .. ஓவர் ஆக்டிங் வேற ..

அடுத்து வரப்போகும் புது உலகத்துக்கும் உற்சாகத்துக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

arasan said... Reply to comment

புது மாப்பிள்ளைன்னு அப்படித்தான்யா!// இன்னுமா?

ராஜி said... Reply to comment

அன்புள்ள அப்பாவா மாறப் போகும் கோகுலுக்கு வாழ்த்துகள்

r.v.saravanan said... Reply to comment

கோகுலுக்கு வாழ்த்துகள்

சென்னை பித்தன் said... Reply to comment

2014 மிகச் சிறப்பான ஆண்டாக அமைய வாழ்த்துகள்

”தளிர் சுரேஷ்” said... Reply to comment

இந்த ஆண்டு இனிதாய் அமைந்திட வாழ்த்துக்கள்! நல்லதொரு பகிர்வு! நன்றி!

கோகுல் said... Reply to comment

நன்றி நன்பர்களே,பையன் பிறந்திருக்கான்.உங்கள் ஆசி எப்போதும் என்னுடன்.

திண்டுக்கல் தனபாலன் said... Reply to comment

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்

வலைச்சர தள இணைப்பு : தேனிலவு செல்ல அழகான இடங்கள்