Wednesday, October 30, 2013

பல"சரக்கு"கடை 14- 30/10/2013

வணக்கம் நண்பர்களே,

                           இந்த வலைப்பூ வழியே உங்களை சந்தித்து பல நாளாகுது.நேரம் சரி வர ஒத்துழைக்கவில்லை பதிவெழுத முன்பு போல.சோம்பேறித்தனம் வேற.அப்படியே எழுத உட்கார்ந்தாலும் நண்பர்களின் பதிவுகளை படித்தபடியேயும் facebook ல் மேய்ந்தபடியேயும் நேரம் கடந்துவிடுகிறது.நேற்றிரவு ஆரூர் மூனா கனவில் வந்து மிரட்டிய பிறகே எனக்குள் தூங்கிக்கொண்டிருந்த பதிவன் விழித்துக்கொண்டான்.தண்ணீர் தெளிக்காமல் கண்ணை உருட்டியே மிரட்டியதால் மிரண்டபடியே எழுத துவங்கிவிட்டேன்.

எழுதாதபோது ஏதேதோ தோன்றினாலும் டைப்ப உக்காந்தவுடன் பாதி மேட்ச்ல மழை பெஞ்ச மைதானம் மாதிரி வெறுமையா இருக்கு,இருக்கவே இருக்கு நம்மகடை பல "சரக்கு" கடை(அட!தே,,,,,,,,,னட!) இதோ திறந்தாச்சு.

**************************************************************************************************************

கடந்த  இரண்டு மாதம், மூன்று சம்பவங்கள் மூன்றும் ஸ்லிப் ஆன சிதறியிருப்ப  இரகம்.

சம்பவம் ஒன்று-பைக்கில் போய்க்கொண்டிருக்கிறேன்,ஒரு குறுக்குச்சந்திலிருந்து ஒரு புது மாப்பிள்ளை  பைக்ல ரோட்டுக்கு விருட்டுன்னு வந்தார்,அதுவும் சனத்திலிருந்து நேரா பாதி ரோட்டுக்கு வந்து லெப்ட்ல திரும்பி போயிட்டே இருந்தார் ,மழை பெய்து முடிந்திருந்தால் நாற்பதில் பிரேக் அடித்தும் டயர் லேசாக இழுத்துக்கொண்டு போய் எப்படியோ நடு ரோட்டில்  சில்லறை பொறுக்க விடாமல் காப்பாற்றியது.

சம்பவம் இரண்டு-பைக்கில் போய்க்கொண்டிருக்கிறேன்,முன்னால் ஒரு புது மாப்பிள்ளை போய்க்கொண்டிருக்கிறார் கிட்டத்தட்ட ஒரு கி.மீ தூரம் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் அவரை பின்தொடர்ந்தே போய்க்கொண்டிருக்கிறேன் திடீரென அவரது வண்டி வலப்பக்கம் பாதி ரோட்டைக்கடந்து போனது,சரி வலப்பக்கம் கடந்து போவாரென வேகம் குறைத்து இடது பக்கம் ஒதுங்கி போனால் பக்கி திடீரென இடம் திரும்பி குறுக்குச்சந்துக்குள் கரைந்து போனது.இம்முறையும் க்ரீரீரீரீரீச்.......திரும்பிப்பார்த்ததில் இரண்டடி தூரத்துக்கு டயர் தடம்,டயரின் ஆயுளில் சில நூறு கி.மீ தூரம் குறைவது நிச்சயம்.

சம்பவம் மூன்று-அதேதாங்க,பைக்கில் போய்க்கொண்டிருக்கிறேன் இது அதிகாலை ஐந்தரை மணி ஷிப்ட்க்கு போகும்போது எதிரில் வந்த ஒரு வண்டியின் ஹெட்லைட் ஹெல்மெட் க்ளாசில் பட்டு தெறிக்க ஒரு கையால் கிளாஸை தூக்கிவிட்டதும் அதிர்ந்தேன் பத்தடி தூரத்தில் திருட்டு மணல் மாட்டுவண்டி.அதிகாலை இருட்டில் எதிரே வந்த ஹெட்லைட் வெளிச்சத்தில் வண்டி இருந்தது தெரியவே இல்லை,மாட்டுவண்டியில் reflect sticker கூட ஒட்டியிருக்கவில்லை.இந்த தடவை கொஞ்சம் அதீத க்ரீரீரீரீரீச்.....thanks to my bike Tyre.தாண்டிப்போய் மாட்டுக்கிட்ட மணல தான் கொள்ளையடிக்குற ,எங்க உயிர ஏன் எடுக்குற ஸ்டிக்கர் ஒட்டிட்டு  ரோட்டுக்கு வான்னு சொல்லிட்டு போனேன்.மாட்டுக்கு ஒரச்சு இருக்குமா தெரியல. # நிறைய விபத்துகள் இந்த ஸ்டிக்கர்கள் ஒட்டப்படாததால் நிகழ்கிறது.
***********************************************************************************************************
பிழை
 நானொன்றும் பிழையில்லாமல் எழுதுபவனல்ல,என் பதிவுகளில் உள்ள பிழைகளை என்னாலே கண்டுபிடிக்க முடியாது(தெரியாது)என் கண்களுக்கே பிழை என்று பட்டது இரு இடங்களில்.பிழைதானா?
1.ஒரு செய்தி சேனலில் மாடு முட்டி முதியோர் பலி .
2.இங்கு ஆவின் பால்கள் கிடைக்கும் 
*********************************************************************************************************
Bye bye brothers
    சச்சின்,ட்ராவிட் இருவரின் இறுதி  20-20 போட்டி என்பதால் மெனக்கெட்டு சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டி பார்த்தேன்.இருவருமே க்ளீன் போல்ட் ஆகி ஆட்டமிழந்தது எனக்கு என்னமோ  மனநமகலபம(என்னாது)நெருடுதுங்க,சச்சினாவது  இரண்டு அற்புதமான பவுண்டரிகள் அடித்தார் ,அதில் ஒன்றை அடித்து விட்டு பந்து எல்லையை தொடும் வரை அடித்த பந்தை பார்த்துக்கொண்டே ஷாட் அடித்த போஸிலே நின்றார் பாருங்கள் கண்ணுலே நிக்குது ,


definitely we will miss you a lot sachin.

தொடரில் அவ்வளவாக பேட்டிங்கில் சோபிக்காவிட்டாலும் கேப்டனாக சூதாட்ட மேகங்கள் சூழ்ந்த அணியை இறுதிவரை இழுத்து வந்து வியக்க வைத்தார் .miss you dravid.பலரின் விருப்பம் என்னோடதும் ட்ராவிட்டும் இந்தியாவில் ஒரு டெஸ்ட் விளையாடிவிட்டு ஓய்வு பெற்றிக்கலாம்.that would be a great tribute to the great wall of indian cricket.
 ************************************************************************************************************
நெஞ்சுக்கு நீதி
   குறும்பட காய்ச்சல் பதிவுலகில் பரவி வருவது ஆரோக்கியமான வெளிப்பாடு.கலக்கப்போகும் நண்பர்களுக்கு வாழ்த்துகள்.நலன் குமாரசாமியின் இந்த குறும்படத்தின் இறுதியில் வரும் வெடிசிரிப்பை அடக்கமுடியவில்லை.
https://www.youtube.com/watch?v=b98kF_qxcLk
*********************************************************************************
Facebook updates
ரஷ்யா சென்ற பிரதமர் மன்மோகன்சிங் அங்கு அதிபர் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். கூடங்குளம் 3, 4வது அணு உலைகள் அமைத்தல் உள்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து இரு தலைவர்களும் பேச்சு வார்த்தை நடத்தினர்.# ஒருத்தனுக்கு எழுந்து நிக்கவே தெம்பில்லையாம் அவைக்கு ஒன்பது பொண்டாட்டியாம்
******************************************************************************* ***
கூகுள்ல தேடினாலும் கண்டுபுடிக்க முடியாது ஆனா நம்மாளுங்க கண்டுபுடிச்சுடறாங்கப்பா -எல்லா ஸ்பீட் ப்ரேக்கர்லயும் பைக் ஸ்பீட் குறைக்காம போறதுக்கு துக்குளியூண்டு இடம்.
**************************************************************************************
எண்ணெய் இல்லனா மயிறு கூட மதிக்காது போலிருக்கு
***************************************************************************************
எனக்கு தெரிந்து கம்யூனிசத்தை சரியாக உணர்ந்தவர்கள் பேருந்தில் தனது சைனா மொபைலில் பாட்டு கேட்பவரே!!! 
****************************************************************************************
 அப்புறம் இந்த சமூகம் கிளம்புது.நண்பர்கள்,குடும்பத்தார் அனைவருக்கும் தீபாவளி&விடுமுறை தின வாழ்த்துகள்.புது மொபைல் வாங்கணும் 10,000 மதிப்பில் பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.(xoloq700 or q800 நினைத்துள்ளேன்).சனி முதல் ஆறு நாள் வரை அலுவலுக்கு விடுப்பு,நிறைய ஊர் சுற்ற வேண்டியிருக்கிறது,திருப்பூரில் ஒரு திருமணம்,முடிந்தால் சந்திப்போம் வீடு மாம்ஸ்.புது மொபைல் வாங்கிவிட்டால் இணையசேவை தொடரும்.சந்திப்போம் நண்பர்களே!
*****************************************************************************************
 நட்புடன்,
ம.கோகுல்
 

14 comments:

நம்பள்கி said... Reply to comment

உங்கள் கடைக்கு முதல் போணி! தமிழ்மணம் +1.

கடையில் விற்கும் பொருள்களுடன் [செய்திகளுக்கு] உங்கள் கருத்துக்கள் இருக்கும்.

Angel said... Reply to comment

//சிங் அங்கு அதிபர் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்//

!!!!!அஸ்கு புஸ்க்கு :) தலையாட்டினதெல்லாம் பேச்சு வார்த்தைல சேர்த்தியாகாது :)


தீபாவளியை சந்தோஷமாக குடுமபத்தினருடன் கொண்டாடுங்கள்

Angelin .

Anonymous said... Reply to comment

வணக்கம்
பதிவு அருமை வாழ்த்துக்கள்

இனியதீபாவளி வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

aavee said... Reply to comment

Nenu ippude first vaatti vachchaavu. Meeru writing style baaga undhi. keep it up!

MANO நாஞ்சில் மனோ said... Reply to comment

குறும்பட காய்ச்சல் பதிவுலகில் பரவி வருவது ஆரோக்கியமான வெளிப்பாடு.//

பதிவர்கள் அடுத்த ஸ்டெப் நோக்கி முன்னேறுகிறார்கள் என்பது சந்தோசமான செய்தி....!

திண்டுக்கல் தனபாலன் said... Reply to comment

காரம் மணம் நல்ல சுவை...! அனைத்து தகவல்களுக்கும் நன்றி... தொடர்ந்து பகிர்ந்து கொள்ளுங்கள்...

இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்...

ராஜி said... Reply to comment

வண்டில போகும்போது ரோட்டை பார்த்து ஓட்டுங்க. அதிகமா ஆகிசிடெண்ட்ல சிக்குற மாதிரி இருக்கு.

ராஜி said... Reply to comment

தீபாவளி நல்வாழ்த்துகள் கோகுல்

r.v.saravanan said... Reply to comment

உங்களுக்கு எனது இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் கோகுல்

Unknown said... Reply to comment

ஆஹா..! நான் ஊருக்குப் போகலாம் என்று இருக்கின்றேன் சனி TO செவ்வாய்! புதன் கிழமைதான் திருப்பூர்ல இருப்பேன்...இங்க ஊரே வெறிச்சோடிக்கிடக்கும்.

”தளிர் சுரேஷ்” said... Reply to comment

சுவையான தகவல்கள்! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்! நன்றி!

கோகுல் said... Reply to comment

அனைவருக்கும் நன்றி!எல்லோருக்கும் வாழ்த்துகள்

செங்கோவி said... Reply to comment

ஒரு செய்தி சேனலில் மாடு முட்டி முதியோர் பலி .
2.இங்கு ஆவின் பால்கள் கிடைக்கும் //

முதியவர் - பால் பாக்கெட்கள்

எம்.ஞானசேகரன் said... Reply to comment

புத்தாண்டு வாழ்த்துக்கள்!