Tuesday, July 9, 2013

பல"சரக்கு"கடை 13- 09/07/2013




நோ கமெண்ட்ஸ்

இந்த படத்திற்கு வசனம் தேவை இல்லை என சில பழைய சஞ்சிகைகளில் துணுக்குறும் புகைப்படங்கள் இருக்கும்.அந்த வகையில் நோ கமெண்ட்ஸ் சொல்ல வைக்கும் சமீபத்திய செய்திகள் சில.

                                                           [ இதுக்கும் நோ கமெண்ட்ஸ்]

#மன்மோகன் சிங் போனை அமெரிக்க உளவுதுறை ஒட்டு கேட்டனர்.

# எங்கள் கட்சியின் வாக்குகளை வீணாக்க விரும்பவில்லை. அதனால் திமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கிறோம்-மனித நேய மக்கள் கட்சி&டாக்டர் கிருஷ்ணசாமி.

# 3900 ஏழைகளுக்கு போய் சேர வேண்டிய உதவிகள் போகவில்லை. அது ஒன்றுதான் எனக்கு மனதளவில் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது-விஜய்


எரிகிற வீட்டில்...

எந்த மாதிரியான சூழலில் வாழ்கிறோம் நாம் என நிறைய பேர் கேட்பதுண்டு,இந்த கேள்வி கடந்த சில நாட்களாக இயற்கை சீற்றத்தில் பாதிக்கப்பட்ட உத்ராகண்ட்டில் நிகழ்ந்த,அது தொடர்பான  சம்பவங்களை பார்க்கும் போது சற்று சத்தமாகவே கேட்கிறது.உட்சம்-சில ஆந்திர மக்களை மீட்டு அழைத்து செல்வதில் தெலுங்கு தேசத்துக்கும் ஆந்திர காங்கிரசுக்கும் குடுமிப்பிடி சண்டை.அதிர வைக்கும் உணவு,தண்ணீர் விலை,கொள்ளை,பாலிய; துன்புறுத்தல்கள் என ஊடகங்களில் வந்து கொண்டிருக்கையில் உரக்க கத்தி கேட்டுக்கொள்ளுங்கள் அந்த கேள்வியை
எந்த மாதிரியான சூழலில் வாழ்கிறோம் நாம்????????????????

டாக்டர்  பட்டம் தேடிப்பாத்து.............,

"டாக்டர் பட்டமா?எனக்கா? நான் என்னத்த பண்ணிட்டேன்னு என்கிட்டே வந்திருக்கீங்க.நாட்டுல எத்தனையோ விஞ்ஞானிகள்,அறிவாளிகள்,படிப்பாளிகள் இருக்காங்க அவங்களுக்கு பொய் கொடுங்க.எனக்கு குடுக்க நான் ஒத்துக்கவே மாட்டேன்"-காமராஜர்

# நீங்க யாரையாவது நினைச்சு படிச்சா நான் பொறுப்பேற்க முடியாது.

 
விளையாட்டா.....


பெடரர்,நடால்,ஷரபோவா,செரீனா ஆரம்ப சுற்றுகளிலே நடை கட்ட எதிர்பார்ப்பு சற்று குறைவாகத்தான் இருந்தது,ஜோகோவிச்சும்,லிசிக்கியும் அவ்வப்போது பார்க்க வைத்தார்கள்,இறுதியில் நான் எதிர்பார்த்திருந்த இருவரும் கோட்டை விட்டனர்,.இந்த நேரத்தில் எனக்கு சட்டென்று நினைவில் வந்தது ஆஸ்திரேலிய ஓபன்-2010 இறுதியில் அவர் தோற்றபோது பேச இயலா தருணம்,

https://www.youtube.com/watch?v=ZuSzqcdJkeM

அதற்கு முந்தைய ஆஸ்திரேலிய ஓபன்-2009-ல் பெடரர் தோற்றிருப்பார் அவரது தருணத்தையும் நினைவு கூர்ந்து ஜோகர் பேசியிருப்பார். நெகிழ்வான தருணங்கள்.,
https://www.youtube.com/watch?v=dCjw0Unm8OY
நேரமிருந்தால்  பாருங்கள்.


*கிரிக்கெட்  நான் பார்க்க ஆரம்பித்த காலங்களில் இந்திய அணியில்சிலர் முரட்டு மீசையுடன்இருப்பார்கள்,மீசையுடன் ஸ்ரீநாத்,கும்ப்ளே பந்து
,வீசுவதும்,அசாருதீன் பேட்டிங்( இதை டைப் செய்யும் போது பெட்டிங்னு தான் வந்தது முதலில்-காரணம் நானறியேன் பராபரமே) செய்வதும் நம்ம அப்பா,மாமா,சித்தப்பா விளாட்ற மாதிரி ஒரு ஃபீலிங் குடுக்கும்,அப்றமா ரொம்ப நாள் மீசை வழித்த அங்கிள்ஸ் விளையாடும் காலத்தில் மீசை முறுக்கி வந்திருக்கிறார்கள் ஷிகர் தவானும்(இப்போ இவர் இந்தியா டீம்ல ஸ்டிக்கர் தவான்),ரவீந்தர் ஜடேஜாவும்(மன்னிக்கவும்) சர்-ஐமறந்துவிட்டேன்.Take care that your mustache from soil( no bad words).

எனது ஆலோசனை

பதிவர் சந்திப்பு-2013ற்காக  ஆலோசனக்கூட்டங்கள் ஆர்வமாக முழுமூச்சில் நடந்து வருகின்றன,தூரம் காரணமாக கலந்து கொள்ள முடிவதில்லை.எனது யோசனை ஒன்று-வாய்ப்பிருந்தால் பரிசீலிக்கவும்.கடந்த வருடம் மூத்த  பதிவர்களுக்கு விருதளித்து பெருமைப்படுத்தியது போல,இவ்வருடம் அவர்களோடு சேர்த்து சிறந்த இளம்பதிவர் (அ) பதிவர்கள் விருது(கள்) வழங்கலாம் என்பதே அது.கடந்த வருடம் யூத் பதிவர் சந்திப்பில் எனக்கு வழங்கினார்கள்.இந்த வருடம் அது போல் இதுவரை யூத் பதிவர் சந்திப்பு நிகலாததால் இது எனக்கு தோன்றியது.பதிவுலகில் பதிவுகள் குறைந்து வரும் நேரத்தில் இளம் பதிவர்கள் தொடர்ந்து எழுத ஊக்கமாக இருக்கும் என நினைக்கிறேன்.

Facebook-ல் பகிர்ந்தவை

# நாம இந்த உலகத்துக்கு ஏதாவது சொல்ல நினைக்கும் போது இந்த உலகம் நம்மைப்பாத்து சொல்வது எல்லாந்தெரியும் மூடிட்டு படுங்கடா நொன்னைங்களா

# மகளைப் பெற்ற அப்பாவுக்குத்தான் தெரியும் பல்டியில் எத்தனை வகை உள்ளது என்று.

போத்தீஸ் மாதிரியான கடைகளில் இப்போ அன்பளிப்பா(?) மரக்கன்றுகள் கொடுத்துட்டு வராங்க,நல்ல விசயம் தான்,ஏதாவது குறை சொல்லலைன்னா நமக்குத்தான் தூக்கம் வராதே,

                                                              [நம்ம வீட்டு தக்காளி]

குறை என்னான்னா,இப்படி ஏப்ரல்,மே,ஜூன்ல கத்திரி வெயில் பட்டய கிளப்புற காலங்களில் கொடுக்காம மழை கண்ணைக்காட்டும் காலங்களில் கொடுத்தால் பிழைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.ஏன் சொல்றேன்னா வீட்ல இருக்க செடிங்களே ஒரு ரெண்டு நாள் ஊருக்கு போயிடு வந்து பாத்தா வள்ளலாரை நியாபகப்படுத்துதுங்க.இதுல புதுசா வைக்குற செடி தாக்குப்பிடிக்கும் வாய்ப்பு கொஞ்சம் கம்மிதான்.அதனாலதான்....‎#அப்பாடா இன்னிக்கு நிம்மதியா தூங்கலாம்.( இப்போ மழை பெய்யுது இவங்க ஆடி,ஆவணினு அவங்க வேலைய பாக்க ஆரம்பிச்சுட்டாங்க)



நட்புடன்
ம.கோகுல் 

16 comments:

Angel said... Reply to comment



போத்திஸ் !!!! ஐடியா அருமை ..நீங்க குறிப்பிட்ட பிரச்சினைக்கும் வழியிருக்கு தம்பி
பாருங்க DIY self watering planters Ideas ...


//எந்த மாதிரியான சூழலில் வாழ்கிறோம் நாம்????????????????//

:((


//டெலிபோன் ஒட்டு கேட்டல் .//.அதெல்லாம் வாய் திறந்து பேசறவங்களுக்கு தான் பிரச்சினை :))


Angelin..

சீனு said... Reply to comment

உங்கள் வேறு சில ஆலோசனைகள் உள்ளது... முறைப்படியான அறிவிப்பின் பொது வெளிவரும் என்று நினைக்கிறன்... உங்கள் ஆலோசனையையும் அவர்களிடம் சொல்லிப் பாப்போம் கோகுல்

MANO நாஞ்சில் மனோ said... Reply to comment

முதல் படத்தில் நிற்கும் கரடியை எங்கேயோ ஒரு ஜூ'வில் பார்த்ததாக நியாபகம் ஹி ஹி...

MANO நாஞ்சில் மனோ said... Reply to comment

என்னாது சிங்கிடி பேசுனானா கொய்யால அவன் பேசுனாதானே ஒட்டு கேக்க முடியும் ?

MANO நாஞ்சில் மனோ said... Reply to comment

போத்தீஸ் - பாத்திரம் அறிந்து பிச்சை போடுவது நல்லது...

சீனு சொன்னதுதான் சரி எதுக்கும் சொல்லிப்பாருங்க.

பால கணேஷ் said... Reply to comment

‘பல’ சரக்கு பலே கோகுல்! இளைய பதிவர்கள் தானப்பா இந்த முறை சந்திப்பையே முன்ன நின்னு நடத்தி கொண்டுபோகப் போறீங்க...! இளைய படைத்தளபதி சீனுட்ட சொல்லிட்டல்ல... அவர் பாத்துக்குவார் விடு! ஹா... ஹா....!

Unknown said... Reply to comment

காமராஜர் அவருக்கு நிகர் யாரும் இல்லை அவரையே தோற்கடிச்சதுக்கு தான் இப்போ தமிழக மக்கள் அவஸ்தை படுறாங்க

”தளிர் சுரேஷ்” said... Reply to comment

சிறப்பான பகிர்வு! போத்தீஸிற்கு வைத்த குட்டும் பதிவர் சந்திப்புக்குஅளித்த யோசனையும் நல்லதுதான்! நன்றி!

கோகுல் said... Reply to comment

@Cherub Crafts
நன்றி

கோகுல் said... Reply to comment

@சீனு

நன்றி சீனு

கோகுல் said... Reply to comment

@MANO நாஞ்சில் மனோ
நன்றி மக்கா!

கோகுல் said... Reply to comment

@பால கணேஷ்
எல்லாம் மேல இருக்கவன் பாத்துக்குவான்

கோகுல் said... Reply to comment

@சக்கர கட்டி

கொஞ்சமா பட்றோம்?
நன்றி

கோகுல் said... Reply to comment

@s suresh
நன்றி நண்பரே!

திண்டுக்கல் தனபாலன் said... Reply to comment

பதிவர் சந்திப்பு யோசனைகளும் நன்று...

ராஜி said... Reply to comment

போத்தீசை பத்தி குறை சொல்லியாச்சா?! அப்புறம் தக்காளி விக்குற விலையில உங்களுக்கு வீட்டுலயே காய்க்குதா?!