Thursday, February 21, 2013

தனியார் பள்ளிகள் முளைக்க காரணம்?


கல்விக்கரையில: கற்பவர் நாள் சில 

முதலிரு  பதிவுகள் வாசிக்க.,

1.கல்விக்கண் எல்லோருக்கும் தெரிகிறதா? 
நமது ஊரில் கல்வி என்பது பள்ளியில் சேர்ந்து கற்றால்தான் என ஆகிவிட்ட நிலையில் எந்த பள்ளியில் கல்வி வரையறையை நிர்ணயிப்பது பணம் என்றாகிவிட்டது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை பள்ளிப்படிப்பு என்றால் அது ஏறக்குறைய அரசுப்பள்ளிகளில் தான்,சில மேல்தட்டு(பணம் படைத்தவர்களை குறிப்பிடுகிறேன்) மக்களின் பிள்ளைகளைத்தவிர எல்லோரும் அரசுப்பள்ளிகளில் படித்தவர்களே.இன்றைய நிலை என்ன?ஊரின் மக்கள் தொகைக்கேற்ப கணிசமான அளவில் தனியார் பள்ளிகள் கல்வியில் தங்களது பங்களிப்பை(?) செய்து வருகின்றன.சரி அரசுப்பள்ளிகளில் இன்று படிப்பவர்கள் யார்?தனியார் பள்ளிகளின் கட்டணச்சுமையை  பொருளாதாரரீதியில் சுமக்க முடியாதவர்களின் பிள்ளைகள் படிப்பத்தற்கான இடம் அரசுப்பள்ளிகள் என்றாகிவிட்டது.அதுவும் கட்டணச்சுமையை சமாளிக்க முடியாததால் தான்,யாரும் விரும்பியும் தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டுவதில்லை.
சமீபத்தில் வெளிவந்த ஆய்வொன்று தெரிவிகிறது ஒவ்வொரு ஆண்டும் அரசுப்பள்ளிகளில் சேர்க்கைவிகிதம் குறைந்துகொண்டே வருவதைஅப்படியென்றால் தனியார் பள்ளிகளின் கட்டணச்சுமையையும் தாங்கி  அங்கே சேர்த்து பிள்ளைகளை படிக்க வைக்கும் அளவுக்கு மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்துவிட்டதா?இல்லை அரசுப்பள்ளிகளின் இன்றைய நிலை தரமிழந்திருக்கிறது.எப்பாடு பட்டாவது(தான்) தம் பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்க்க விழைகின்றனர்.


முரண் துவங்குவது இங்கேதான்.பள்ளிப்படிப்பை முடித்தபிறகு உயர் கல்வியில் எல்லோரும் சொல்லிவைத்தார் போல எப்பாடு பட்டாவது அரசு கல்லூரிகளில் இடம் கிடைத்துவிடாதா என முயற்சிக்கின்றனர்.தனியார் பள்ளிகள் அரசுக்கல்லூரிகளில் சேருவது எப்படி என்பதை தெளிவாக சொல்லிக்கொடுக்கின்றன.அரசுப்பள்ளிகளின் வீழ்ச்சிக்கும்,தனியார் பள்ளிகளின் வளர்ச்சிக்கும் அரசின் பங்கே முக்கியமானது என்பது உண்மையிலும் உண்மை.அது எப்படி?ஒரு ஊரில் தனியார் பள்ளி துவக்க அனுமதி கேட்டு விண்ணப்பிக்கும்போது என்னென்ன விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டுமோ அதனை எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டுமென,(நினைவிற்கொள்க விதிமுறைகளை மட்டுமே சமாளிக்க வேண்டுமே தவிர அதை எப்படி செயல்முறை படுத்துவது என்பதில் அல்ல) அதிகாரிகளே மேப் போட்டு காட்டுகின்றனர் போலும்.விளைவாக முளைத்தன ஏகத்துக்கும் தனியார் பள்ளிகள்.ஆனால் ஏதாவது விபரீதங்கள் நடக்கும்போது மட்டும் எங்கிருந்து தான் பொத்துக்கொண்டு வருகின்றனவோ உங்க டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கா என்கிற அளவிற்கான கேள்விகள்.கூடவே அதிரடி ஆய்வுகள்(மக்களும் ஊடகங்களும் சம்பவத்தை மறக்கும் வரை மட்டும்) காரணம்?அந்நியனில் ட்ரெயினில் டி.டி.ஆர் (மனோபாலா) சொல்வதுதான் பதில்.அரசாங்கம்,அதிகாரிகள்,ஆசிரியர்கள்,மாணவர்கள்,பெற்றோர்கள் என ஒருவர் ஒருவர் மாற்றி கைகள் காட்டும்.சரி தரமான கல்வியை அரசுபள்ளிகளில் கிடைக்கச்செய்ய என்ன தான் செய்வது??????


தொடரும்.....

நன்றி மாதேஷ் -புகைப்படங்கள்

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said... Reply to comment

அரசும், அதற்கு முன் பெற்றோர்களும் சிந்திக்க வேண்டிய விஷயம்...

ஆனால் ஆழ்ந்து படிப்பவர்களுக்கு... படிப்பை மட்டும் படிப்பவர்களுக்கு... எந்தப் பள்ளியும் பிரச்சனையில்லை என்று வருடா வருடம் சில தேர்வு முடிவுகள் சொல்கின்றன...

Anonymous said... Reply to comment

நல்ல அலசல்...தொடருங்கள்...

பெரும்பாலும் அரசு பள்ளி...கல்லூரியில்...முழுவதும் தமிழிலேயே படித்து ஓரளவு நல்ல நிலைக்கு வந்து திரும்பி பார்க்கையில் சந்தோசம் தான் என்றாலும்...இன்றைய நிலை எனக்கு மிகவும் வருத்தம் மட்டுமே அளிக்கிறது...

கோகுல் said... Reply to comment

@திண்டுக்கல் தனபாலன்

ஆழ்ந்து படிப்பவர்களாக இருந்தாலும் பள்ளியின் தரம் கல்வியில் முக்கியமானதாக இருக்கிறது,கருத்துக்கு நன்றி தனபாலன் சார்.

கோகுல் said... Reply to comment

@ரெவெரி
எனக்கும் அதே எண்ணம் தான்.,நன்றி .

சிவக்குமார் நேதாஜி said... Reply to comment

Today Education became a good business. Private schools 100% making result to run their business. But our people believe them that they are giving good education and they are having good teachers. But really some private schools are working hard and they are producing good fillers of Future India.

I would prefer private school:
1) Hard working teachers
Govt schools are having well experienced knowledgeable teachers. Private schools are having less experience average teachers. Private schools are having appraisal and assessment for their teachers every year. govt school teachers are not having such things. Most of govt school teacher are feeling teaching their job. Very of them feeling it is not a JOB. It is Service to build future India.

2) Resources

Private schools will have all required resources.

3) Infrastructure
Still I remember My Govt school buildings. Inside, It will rain after rain stopped.
No play ground
Common lab for all subjects.
I heard, recently they integrated computer lab with that.
But private schools are giving good infrastructure.
All parents will give preference to their child safety first.


TRUE FACTOR : NONE OF OUR SCHOOL IS TEACHING HOW TO GET KNOWLEDGE. EVERY ONE TEACH HOW TO SCORE MARK.


“They can produce 1000 * 1000 engineers who work for Bill Gates. No one will produce person like Bill Gates”


Note : I don't have access tamil typing website at this point. thats why I was not bale to give my comment in Tamil.

Visit : http://kavithaikkalam.blogspot.com/

NAGARJOON said... Reply to comment

I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
Spoken English self learning
Spoken English home Study materials
Best home study courses for spoken English
Distance learning spoken English
Spoken English training books