மனிதன் முழுமையாக(?)
பரிணாம வளர்ச்சி பெற்ற பிறகு அவனது அடிப்படை தேவைகள் ஒவ்வொன்றாக அதிகரித்தே
வருகிறது.ஆரம்பத்தில் உணவு நாகரீகம் பற்றிய அறிவு தோன்றியவுடன் உடை பிறகு
இருப்பிடம்.அந்த வரிசையில் ஆறாம் அறிவின் இருப்பை உணர்ந்து கொள்ள ஏதாவது
கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து இன்றைக்கு அடிப்படைத்தேவைகளில்
ஒன்றாக கல்வியும் இணைந்திருக்கிறது.
ஆரம்ப காலங்களில் கண்
போன கால் போன போக்கில் கற்றுக்கொள்ள ஆரம்பித்தவன் பிற்பாடு கல்விக்கான
வரைமுறையையும் வகுத்துக்கொண்டான்.(அப்படி செய்யாமலே இருந்திருக்கலாம்).யாரெல்லாம்
கற்க வேண்டும் என்ற வரைமுறையும் தோன்றியது.இப்போது அனைவருக்கும் கல்வியின் தேவை
இவர் அவர் என்றில்லாமல் எல்லோருக்கும்
அவசியமாகி இருக்கிறது.தமிழகத்தை பொறுத்தமட்டில் கல்வியை அனைவருக்கும் கொண்டு
சேர்க்கும் முயற்சியில் முக்கிய பங்காற்றி இன்றுவரை நினைத்து பார்க்க வைத்தவர்
கர்ம வீரர் காமராஜர் என நான் சொல்லி தெரியவேண்டியது இல்லை.
இப்படி இன்றியமையாத
கல்வி இன்றைக்கு எங்கே கிடைக்கிறது என்பதை விட எங்கே விற்கப்படுகிறது என்றே கேட்க
தோன்றுகிறது.இங்கே சாப்பாடு எந்த ஹோட்டல்ல நல்லா இருக்கும்னு கேட்பது போல இங்க
எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்,எங்க நல்லா சொல்லி தருவாங்க அப்படின்னு கேட்கு நிலை
சாதாரணமாகிவிட்டது.இப்படியிருக்க அரசுபள்ளிகளின் நிலை என்னவாக இருக்கிறது?
அடிப்படையில் தனியார்
பள்ளிகளுடன் ஒப்பிடுகையில் அரசுப்பள்ளிகளுக்கு அரசு செலவிடும் அளவுக்கு
விளைச்சல்(output) இருக்கிறதா என்றால் ?????????????
இத்தனைக்கும்
அரசுப்பள்ளிகளுக்கு அரசிடம் இருந்து கிடைக்கும் வசதிகள் ஏராளம்.அரசுப்பள்ளிகளுக்கு
இருக்கும் இட வசதியில் பாதியையாவது பெரும்பாலான தனியார் பள்ளிகளின் பார்க்க
முடியுமா?ஆனால் இந்த வசதிகள் மாணவர்களுக்கு சென்று சேர்வதில்தான் சிக்கல்.
அடுத்த பதிவில் .....
அரசு தரும் உதவிகளை
மாணவர்களுக்கு கிடைக்காமல் செய்வது யார்?
அரசு பள்ளிகளுக்கு இட
ஒதுக்கீடு தரலாமா?
அரசுப்பள்ளி
மாணவர்களுக்கு உள்ள போக்குவரத்து சிக்கல்....
Tweet | ||||||
8 comments:
இப்படி இன்றியமையாத கல்வி இன்றைக்கு எங்கே கிடைக்கிறது என்பதை விட எங்கே விற்கப்படுகிறது என்றே கேட்க தோன்றுகிறது
சரியாய் சொன்னீங்க கோகுல் இது தான் உண்மையும் கூட
// எங்கே கிடைக்கிறது என்பதை விட எங்கே விற்கப்படுகிறது என்றே கேட்க தோன்றுகிறது.// அருமை
அற்புதமான இரு பதிவை ஆரம்பித்து இருகிறீர்கள் ... அரசு பல்லை மாணவர்கள் படும் அவஸ்தை கொஞ்சம் நஞ்சம் அல்ல
Please continue. This is a topic where I also know something. Looking forward...
நலமா கோகுல்! நல்ல பதிவு! விலையில்லா கல்வி விலைபொருளாகி விட்டது!அது ஏழைகளுக்கு எட்டாக் கனியே! தொடரத் தொடர்வேன்!
நல்லதொரு பதிவு தொடர்ந்து எழுதுங்கள் பின் தொடர்ந்து வருகிறோம்.
நல்ல அலசல் கோகுல்..தொடருங்கள்.
ரொம்ப நல்ல பதிவு ...படிக்கும் பொது தனியார் பள்ளியில்தான் படிக்கணும்னு படிக்கவைக்குறதும்
வேலைக்கு போகும்போதுமட்டும் அரசு பணியில சேரணும்னு நினைக்குறதும் நடக்குதுதானே?!!!
ஆமாங்க. விருப்பப்பட்ட படிப்பை படிப்பதற்கு போராடத்தான் வேண்டி இருக்கிறது.ரொம்ப சரியா சொல்லி இருக்கீங்க.
Post a Comment