Wednesday, September 12, 2012

ஒரு தொண்டனின் கதைஒரு ஊர்ல ஒரு வேலை வெட்டி இல்லாத பயபுள்ள,நாமளும் எவ்ளோ நாளைக்குத்தான் இப்படி வெட்டியாவே பொழுது போக்குறது,நாமளும் நாலு பேருக்கு தெரியவேண்டாமா?நம்மளையும் நாலு பேரு மதிக்க வேண்டாமா அப்படின்னு திடீர்னு ஞானோதயம் வந்து என்ன பண்ணலாம்னு யோசிச்சுக்கிட்டு இருந்தப்போ அவனது கபாலத்தில் கபாலென உதித்தது தான் ஏதாவது அரசியல் கட்சியில் உறுப்பினராக சேருவது என்ற யோசனை.
முடிவு பண்ணியதோடு மட்டுமல்லாமல் முன்னாள் வேலைவெட்டி இல்லாத,இந்நாள் உள்ளூர் கட்சி பிரமுகர் ஒருத்தரிடம் போய் தனது யோசனையை  சொல்ல,அவரும் கட்டியணைத்து வாடா தம்பி உன்னைப்போன்றவர்களைத்தான் கட்சி தேடிக்கொண்டிருக்கிறது,வா தம்பி வா,களப்பணியாற்ற  வா என இணைத்துக்கொண்டார்.


இன்னாளும்,அடிக்கடி முன்னாளை சந்தித்து சீக்கிரத்துல நாலு பேருக்கு தெரியணும் அப்டின்னு சொல்லிட்டே இருக்க ,அதுக்கு நேரம் வரும் சொல்றேன்னு சொல்லிட்டே இருந்தாரு முன்னாள்.

ஒருநாள் முன்னாள் இந்நாளை கூப்டு "தம்பி,நீ கேட்டுட்டே இருப்பியே நாலு பேருக்கு தெரியணும்னு அதுக்கு நேரம் வந்துடுச்சு,தலைவருக்கு பிறந்தநாள் வருது,நீஎன்ன பண்ற ஒரு இருவதுக்கு நாப்பது பிளக்ஸ் பேனர் அடிச்சு அதுல தலைவர் அப்டியே புயலை எதிர்கொண்டு நடந்து வர்ற மாதிரி,பில்லால அஜித் உக்காந்து இருப்பாரே அது மாதிரி ஸ்டைலா,கட்டபொம்மன் மாதிரி,கர்ணன் மாதிரி உனக்கு எப்டியெல்லாம் தோணுதோ அப்டி டிசைன் பண்ணி அடிச்சுடு,அப்டியே எங்களின் சுவாசமே,இதயமே,எதிர்காலமே ,வரலாறே,புவியியலே அப்டின்னு போட்டு வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்,அப்டின்னு ரெடி பண்ணி முச்சந்தில வச்சுடு".

அண்ணே,முச்சந்தி மெயின் ரோடு சேற்ற இடம் அங்கே வச்சா போற வர்ற வண்டிங்களுக்கு இடைஞ்சலா இருக்குமே.

"தம்பி நீ நாலு பேருக்கு தெரிய வேண்டாமா?சரி விடு அப்புறம் உன் இஷ்டம்".

"பரவால்லணே பண்ணிடலாம்".

"ம்.சொல்ல மறந்துட்டேன்,அதுல அப்டியே அண்ணனோட போட்டோ தலைவர் போட்டோவ விட ஒரு மூணு இல்ல,இல்ல ரெண்டு செ.மீ கம்மியா தலைவர்ட ஆசிர்வாதம் வாங்குற மாதிரி இருக்கணும்".


"அப்புறம் அண்ணனின் விழுது அப்டின்னு ஓரமா உன்னோட போட்டோ போட்டினா ஒரே நாள்ள நீ உலக பேமஸ் ஆகிடலாம்ல".,"எல்லாம் சர்தாண்ணே ,சுவாசமே,இதயமே,உயிர்மூச்சேனு சொல்றீங்களே தலைவரோட பெயர் என்னண்ணே?"


அட ஏம்பா,அது தெரிஞ்சா நான் போட மாட்டேனா?போன பிறந்தநாளுக்கு நான் விழுதா இருந்தேன் அப்ப இருந்த அண்ணன் எனக்கு சொன்னத நான் உனக்கு சொல்றேன்.நீ அடுத்த பிறந்தநாளுக்கு இன்னொரு தம்பிக்கு சொல்லுவ ,அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா"தம்பி,இங்க பாருப்பா,என்னாச்சு?அட ,யாரப்பா அங்கே,இந்த தம்பி மயக்கம் போட்டுடுச்சு யாராவது சோடா கொண்டு வாங்கப்பா......
17 comments:

Ramani said... Reply to comment

அப்பாவித் தொண்டன் நிலமை நிஜமாக
இங்கு இப்படித்தானே இருக்கிறது
படங்களுடன் சொல்லிப்போனவிதமும் அருமை
தொடர வாழ்த்துக்கள்

Ramani said... Reply to comment

tha.ma 1

மனசாட்சி™ said... Reply to comment

இதுதான் உண்மை நிலையோ

திண்டுக்கல் தனபாலன் said... Reply to comment

இப்படி தாங்க இருக்கு... ஆனா இன்னும் மோசம்...

காப்பிகாரன் said... Reply to comment

ஹிஹிஹி அரசியல்லுலே இதெல்லாம் சாதரணமப்பா

r.v.saravanan said... Reply to comment

அரசியல்லே இதெல்லாம் சாதாரணமப்பா

K.s.s.Rajh said... Reply to comment

எதிர்காலமே சுவாசமே,இதயமே,உயிர்மூச்சே பதிவு அருமை

இப்படிக்கு
அண்ணனின் விழுது

s suresh said... Reply to comment

நல்ல காமெடி! இன்னிக்கு அரசியல் இப்படித்தான் போகுது!

இன்று என் தளத்தில்
ரேசன் கார்டில் பெயர் சேர்த்தகதை!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_12.html

குட்டன் said... Reply to comment

சூப்பரப்பு!

அரசன் சே said... Reply to comment

படத்தோட குத்து செம குத்து கோகுல் ...

வரலாற்று சுவடுகள் said... Reply to comment

தக்காளி சட்னி சாப்பிடுரதுக்குத்தானே இவரு ஏன் மூஞ்சில கொட்டிகிட்டு திரியிராறு! :D

நண்டு @நொரண்டு -ஈரோடு said... Reply to comment

ரைட்டு.

Anonymous said... Reply to comment

ஹீ ஹீ...

அது சரி..//ஒரு ஊர்ல ஒரு வேலை வெட்டி இல்லாத பயபுள்ள,நாமளும் எவ்ளோ நாளைக்குத்தான் இப்படி வெட்டியாவே பொழுது போக்குறது,நாமளும் நாலு பேருக்கு தெரியவேண்டாமா?நம்மளையும் நாலு பேரு மதிக்க வேண்டாமா அப்படின்னு திடீர்னு ஞானோதயம் வந்து என்ன பண்ணலாம்னு யோசிச்சுக்கிட்டு இருந்தப்போ///

அப்புடின்னா அவன் ஒரு பிளாக் தொறந்து பிரபலா பதிவர் ஆயிருக்கலாமே.. நாங்க பண்ணல...நீங்க இது மாதிரி பண்ணதே இல்லையா கோகுல்?

தனிமரம் said... Reply to comment

இந்த அரசியல் இப்படி சீரழிச்சது பலரை !ம்ம் தொண்டன் பாவம்!

மகேந்திரன் said... Reply to comment

வணக்கம் கோகுல்,
நலமா??

தன்னிலை உணர மறந்து
தொண்டன் எனும் போர்வைக்குள்
சிக்கிப்போகும் ஒரு சாமானியனின்
நிலையை அழகாக சொல்லிப்போகும் பதிவு

சீனு said... Reply to comment

ரசித்து சிரித்தேன் கோகுல்

ராஜி said... Reply to comment

அரசியலே கமெடியா போச்சே?! அவ்வ்வ்வ்வ்