Friday, November 11, 2011

அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........



நேற்று சாலையில் போய்க்கொண்டிருக்கும்போது கூட்டமாக சில பள்ளி 


சிறுவர்கள் பள்ளியிலிருந்து திரும்பிக்கொண்டிருந்தனர் நானும் அவர்கள் 


பேசுவதை கவனித்துக்கொண்டே நடந்தேன்.அவர்கள் அநேகமாக எட்டாவது 


அல்லது ஒன்பதாவது படிக்கலாம்.


அதில் ஒரு சிறுவன் டேய் நேத்து மேட்ச்ல அவன் மட்டும் சதம் 


அடிக்கலன்னா கண்டிப்பா நாம தோத்து இருப்போம்ன்னான்.இன்னொருவன் 


ஆமாம் வர்றவன் எல்லாம் ஒரு ஓவர் ரெண்டு ஓவர்ல 


அவுட்ஆயிடரானுங்க ன்னான்.






அப்போதுதான் யோசித்தேன் இவர்கள் மட்டுமல்ல இவர்களுக்கு உலகத்தை 


கற்றுக்கொடுக்க,சமுதாயத்தை அடையாளம் காட்ட வேண்டிய 


பெரியவர்களான(நான் சின்னவன் தாங்க) நாமும் இப்படித்தான் பல சமயங்களில் 


பேசுகிறோம்.

அன்றாடம் நமக்கு அத்தியாவசிய 


பணி செய்யும் பணியாளர்களை நாம் 


மரியாதையாக பெரும்பாலும் 


அழைப்பதில்லை.துணி 


தேய்க்கிறவன் இன்னம் வரல,பேப்பர்காரன் வர வர சரியான டைம்க்கு 


வரமாட்டேங்கறான்,பால்காரன் போய்ட்டானா?, முடியை கொஞ்சம் 


விட்டு வெட்ட சொன்னேன் ரொம்ப ஷார்ட்டா வெட்டிட்டான்,துணியை 


நேத்தே குடுக்கறேன்னான் இன்னும் கொடுக்கல.

ச்சே!இந்த நேரம் பாத்து கரண்ட்ட 


கட் பண்ணிட்டானே,ஆட்டோ 


ஒட்றவன்கூட,மாடு மேய்க்கிரவன் 


கூட நிம்மதியா இருக்கான்,
அதே போல் அலுவலகங்களில் நமக்கு கீழ பணிபுரியும் 


பணியாளர்களையும் நாம் மரியாதையோடு அழைப்பதோ வேலை 


வாங்குவதோ கிடையாது.ஏய் இங்க வா! இதை கிளீன் பண்ணு!இப்படி 


ஒருமையில் தான் அவர்களை அழைக்கிறோம்.ஒரு சிலர் தம்மை விட 


வசதி குறைந்தவர்களை ஒருமையில் பேசுவதுண்டு.






இவர்கள் மட்டுமல்ல .பிரபலங்களும் நம்மிடம் தப்புவதில்லை.நேத்து ஒரு 


படம் பாத்தேன் அதுல ஹீரோ என்னமா டான்ஸ் ஆடுறான்,செமையா 


பைட்பண்றான்,இவன எப்படி டீம்ல செலக்ட் பண்ணாங்க,போன சீரிஸ்ல 


ஒரு மேட்ச்லகூட இவன் ஒழுங்கா விளையாடல,போன எலக்சன்ல 


ஜெயிச்சவன் நிக்கல இப்ப வேற ஒருத்தன் நிக்கறான்.






நம்மைப்பார்த்து தான் நம் குழந்தைகளும் கற்றுக்கொள்கிறார்கள் நாம் தான் 


அவர்களுக்கு முன்மாதிரியாய் இருந்து நம்மை விட வயதில் 


மூத்தவர்களை மரியாதையோடு அழைக்கவும்,பேசவும் கற்றுக்கொடுக்க 


வேண்டும்.அதுக்காக கவுண்டமணி சொல்றது போல அவர்ர்ர் 


,இவுர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு சொல்ல சொல்லுல .நம்ம விட வயசு அதிகமா இருந்தா 


பெரியவரே ன்னும்,வயசு கம்மியா இருந்தா தம்பின்னோ கூப்பிடுங்கோ.


(இது அவர்கள் நேரில் இல்லாத போது அவர்களைப்பற்றி பேசும் போதும்)  


சுருக்கமா நான் என்னை சொல்ல வர்றேன்னா


அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும் வயசுக்கு மரியாதை 


குடுங்க!!!  


                                                          - மீள்வு

42 comments:

Unknown said... Reply to comment

மாப்ள இந்த பதிவனுங்க தொல்ல தாங்கலன்னு இன்னும் யாரும் சொல்லலியா ஹிஹி...அறிவுரைகளுக்கு மிக்க நன்றிங்கோ!

கவிதை வீதி... // சௌந்தர் // said... Reply to comment

சரியாக சொன்னீர்கள்...



உண்மையில் நமக்கு கீழ் உள்ளவர்கள் நாம் எப்போதும் நாம் மதிப்பு அளித்து பேசுவதில்லை..

மேலும் நமக்கு மேலுல்ல மேலோறையும் நாம் மதிப்பளிப்பதில்லை...


நடிகர்கள்... அரசியல்வாதிகள்... போன்றோருக்கும் நாம் மதிப்பளிப்பதில்லை...

இது உண்மையில் வெட்கப்பட வேண்டிய விஷயம்தான்..

கவிதை வீதி... // சௌந்தர் // said... Reply to comment

அனைவருக்கும் மதிப்பளிக்க பழகுவோம்...

சக்தி கல்வி மையம் said... Reply to comment

அவர்களும் மனிதர்கள் தானே..

அனைவரையும் மதிப்போம்..

rajamelaiyur said... Reply to comment

//அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும் வயசுக்கு மரியாதை


குடுங்க!!!


//
நிச்சயமா ..

rajamelaiyur said... Reply to comment

நடிகர்களையும் இப்படிதான் சொல்கின்றனர் (M.G.R ஐ தவிர )

rajamelaiyur said... Reply to comment

இன்று என் வலையில்

உங்கள் பள்ளி புகைபடங்களை தரும் ஒரு இனையதளம்.

Unknown said... Reply to comment

கோகுல், அதில் சில சமூக அவலத்தின் தொடர்ச்சி ...

அப்புறம்...
இன்னைக்கு பின்னிட்டான்யா -ன்னு எழுதலாம்னு நினைச்சேன்.
இந்தப் பதிவுக்கு அப்படி எழுத முடியாதுங்கிறதால,
சூப்பரா சரியா எழுதியிருக்கிங்க - அப்படின்னே பதிவு செய்திக்குறேன்.

கோகுல் said... Reply to comment

@விக்கியுலகம்
வாங்க மாம்ஸ்,இன்னுமா சொல்லாம இருப்பாங்க?ஹா ஹா

கோகுல் said... Reply to comment

@கவிதை வீதி... // சௌந்தர் //

வருக சௌந்தர்!நிச்சயம் பழகுவோம்!

கோகுல் said... Reply to comment

!* வேடந்தாங்கல் - கருன் *! said...
அவர்களும் மனிதர்கள் தானே..

அனைவரையும் மதிப்போம்..
//

புரிதலுக்கு நன்றி!
//
"என் ராஜபாட்டை"- ராஜா said...
//அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும் வயசுக்கு மரியாதை


குடுங்க!!!


//
நிச்சயமா ..

"என் ராஜபாட்டை"- ராஜா said...
நடிகர்களையும் இப்படிதான் சொல்கின்றனர் (M.G.R ஐ தவிர )//

அவருக்காவது கொடுக்கறாங்களா பரவாயில்லையே!

கோகுல் said... Reply to comment

அப்பு said...
கோகுல், அதில் சில சமூக அவலத்தின் தொடர்ச்சி ...

அப்புறம்...
இன்னைக்கு பின்னிட்டான்யா -ன்னு எழுதலாம்னு நினைச்சேன்.
இந்தப் பதிவுக்கு அப்படி எழுத முடியாதுங்கிறதால,
சூப்பரா சரியா எழுதியிருக்கிங்க - அப்படின்னே பதிவு செய்திக்குறேன்.//

பின்னிட்டான்யா ன்னே போடலாம் நான் சின்னப்பையன் தானே !ஹிஹி

சசிகுமார் said... Reply to comment

தம்ம்பின்னு கூப்பிடுறதா இல்ல அண்ணன்னு கூப்பிடுறதா உங்கள தெரியலையே... சரி தம்பின்னே கூப்பிடுவோம்.... நல்லா சொல்லி இருக்கீங்க தம்பி...

மகேந்திரன் said... Reply to comment

வயதில் குறைந்தவராயினும் மரியாதை கொடுத்தலால்
நாமொன்றும் குறைந்துவிட மாட்டோம்.
பணியிடங்களில் இந்த அவலம் மிகுந்து காணப்படுதல்
இன்னும் இருக்கிறது நண்பரே.....
காவல் துறையில் இது மிக அதிகம்..

மரியாதை கொடுத்து பழகுவோம்...
நமக்கு மரியாதை தானாக வரும்...

செங்கோவி said... Reply to comment

நல்ல கருத்து தான்..சிறுவயதிலேயே போதிக்கப்பட வேண்டிய விஷயம்..

அம்பாளடியாள் said... Reply to comment

அருமையான சிந்தனைப் படைப்பு சிறந்த படங்களுடன் வாழ்த்துக்கள் சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு ......

ராஜா MVS said... Reply to comment

முதல் மரியாதை...பார்த்துட்டேன்...
காதலுக்கு மரியாதை...பார்த்துட்டேன்...
வயசுக்கு மரியாதை...இன்னும் பார்க்கல... வந்தோனே பார்த்துடுரேன்...
வேற வேளை... ஹா..ஹா..ஹா...

MANO நாஞ்சில் மனோ said... Reply to comment

நம்மைப்பார்த்து தான் நம் குழந்தைகளும் கற்றுக்கொள்கிறார்கள் நாம் தான்


அவர்களுக்கு முன்மாதிரியாய் இருந்து நம்மை விட வயதில்


மூத்தவர்களை மரியாதையோடு அழைக்கவும்,பேசவும் கற்றுக்கொடுக்க


வேண்டும்.//

ஆயிரத்தில் ஒரு வார்த்தை சும்மா நச்சுன்னு சொன்னீங்க...!!!

ராஜா MVS said... Reply to comment

முதலில் அவர் அவர் குழந்தைகளையே மதிப்பதில்லை...
பல இளைஞர்கள் ஏன் தவறான பாதையில் சென்றுவிடுகிறார்கள்?

குழந்தையிலிருந்தே அவர்களுக்கு ஒரு மதிப்பு கொடுத்து, குடும்பத்தில் எடுக்கும் முடிவுகளை அவர்களோடு ஒருமுறை கலந்து ஆலோசித்தாலே அவர்கள் வழித் தவறமாட்டார்கள்.

காரணம் நம் பெற்றோர் நம்மை மதிக்கிறார்கள். தன் குடும்பத்தில் நம்முடைய முடிவும் ஒரு பங்கு வகிக்கிறது என்ற எண்ணமே அவர்களின் வாழ்க்கை முன்னேற்றம் அடைய உறுதி அளிக்கும்.

ராஜா MVS said... Reply to comment

நல்ல ஆலோசனை... கோகுல்

பகிர்வுக்கு நன்றி... நண்பா...

Yoga.S. said... Reply to comment

நல்ல கருத்து,சிறுவயதிலேயே போதிக்கப்பட வேண்டிய விஷயம்.///copy comment!

நிரூபன் said... Reply to comment

இனிய மாலை வணக்கம் பாஸ்,

நல்லதோர் பதிவு,
உண்மையிலே சிறார்களின் மனதில் ஆரம்பக் கல்வியினைப் போதிக்கும் போது இத்தகைய விடயங்களையும் நற் சிந்தனைகளாக ஊட்டப் பழகிக் கொள்ள வேண்டும்.
அப்போது தான் நாளைய சமுதாயத்தில் அனைவரும் சரி சமனாக மதிக்கப்படும் நிலமை உருவாகும்!

ஆமினா said... Reply to comment

என் மகன் முன் பலவேளைகளில் பேச பயப்படுவேன். சில பேச்சுவார்த்தைகளை அவன் வயதுக்கு கற்பூரம் போல் பிடித்துக்கொள்வதை கண்டு....
நிச்சயமாக குழந்தைகளுக்கு நல்லபழக்கங்களை கற்று கொடுப்பதோடு அந்நியரிடம் எப்படி பேச வேண்டும் என்பதையும் கற்பிக்கவேண்டும்

Unknown said... Reply to comment

கோகுல் நீங்க புதுச்சேரியை சேர்ந்தவர் கோவை மாவட்டம் வந்திருக்கிர்களா
உங்க பெயரை கூட ஏனுங்க கோகுல்ங்க அப்படின்னு சொல்லுவாங்க
ஆனா நடிகர்கள் பற்றி பேசும்போது அவன் என்று ஒருமையில் அழைப்பது எல்லா மொழியிலும் உண்டு

arasan said... Reply to comment

சொல்லி இருக்கீங்க ,.,. முதல்ல நான் மாறுகிறேன் பிறகு அடுத்தவரிடம் சேர்க்க முயல்கிறேன் .

Anonymous said... Reply to comment

இலங்கைத் தமிழர்களிடம் இருந்து நாம் படிக்க வேண்டியது இது...

Angel said... Reply to comment

என் மகள் ஊரில் ஆட்டோ ஓட்டுனர் /இளநீர் விற்பவர் /பூக்காரம்மா இவங்களிஎல்லாம் அங்கிள் ஆன்டி என்றுதான் கூப்பிட்டா .
சிறு வயது முதல் சொல்லி வளர்த்தல் அவசியம்

சென்னை பித்தன் said... Reply to comment

நன்று.மாற்றப்பட வேண்டிய பழக்கம்தான்.

SURYAJEEVA said... Reply to comment

சரியாக தான் இருக்கிறது பதிவு.... ஆனா அம்பானியா இருந்தாலும் கலக்டரா இருந்தாலும் என்று தலைப்பு தான் புரியல... ரெண்டு பெரும் கிட்ட தட்ட ஒரே லெவல் தானே.. அம்பானியா இருந்தாலும் பால்கார அன்னாச்சியாய் இருந்தாலும் என்று சொல்லியிருந்திருக்கலாமோ என்று ஒரு உறுத்தல்...

தமிழ்வாசி பிரகாஷ் said... Reply to comment

அதானே, யாரா இருந்தாலும் மரியாதை கொடுத்து பேசணும்...
மாப்ளே, வரிக்கு வரி எதுக்கு இம்புட்டு இடைவெளி? சும்மா கேட்டேன்...


நம்ம தளத்தில்:
மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! சிஎன்சி (CNC PROGRAMMING & OPERATIONS) PART- 11

Unknown said... Reply to comment

கீழோ ராயினும் தாழ உரை
என்பதை உணர்த்தும் அருமையான
பதிவு!
நன்றி!

புலவர் சா இராமாநுசம்

M.R said... Reply to comment

நல்ல கருத்து நண்பரே

K.s.s.Rajh said... Reply to comment

பாஸ் எனக்கு என்னமோ தெரியவில்லை நான் அப்படி சொல்வது இல்லை....விஜய் என்றால் விஜய் என்னமா நடித்திருக்கார்,பிரகாஸ்ராஜ் என்னமா நடிச்சிருக்கார்...என்றுதான் சொல்வேன்..அதே போல கிரிக்கெட்டிலும் ஓருவீரரைகூட அவன் இவன் என்று இதுவரை சொல்லியது இல்லை....மரியாதையுடன் தான் சொல்வதுண்டு..

ஆனால் நீங்கள்சொல்வது போல என் நண்பர்கள் பல சொல்வார்கள் நான் அப்போது எல்லாம் அவர்களுடன் சண்டைபிடிப்பதுண்டு.....

K.s.s.Rajh said... Reply to comment

உங்கள் கருத்து மிகவும் சிறப்பானது யாராக இருந்தாலும் வயதுக்கு மரியாதை கொடுக்கவேண்டும்

vetha (kovaikkavi) said... Reply to comment

நாங்கள் எப்போதும் நீங்கள் வாங்க ;போங்க என்றே பேசுவோம். பெற்றோர் எப்படிப் பிறருடன் பழுகுகிறார்களோ, அப்படித்தான் பிள்ளைகளும் பிறருடன் பழகுவார்கள். நல்ல அறிவுரை தரும் ஆக்கம் வாழ்த்துகள் சகோதரா.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

உணவு உலகம் said... Reply to comment

சூப்பர்.

அம்பலத்தார் said... Reply to comment

பெரியவரோ சிறியவரோ அனைவருக்கும் உரிய மரியாதை கொடுத்துப் பேசவேண்டியது அவ்சியம். இந்தவிடயத்தில் இலங்கைத்தமிழர்கள் பெரும்பாலும் நல்லபடியாகவே பேசுகிறார்கள். வயதுவித்தியாசமின்றி அனைவரையும் யாரையும் ஒருமையில் பேசுவது குறைவு .வாருங்கள் சாப்பிடுங்கள்,செய்யுங்கள் இப்படித்தான் உரையாடுகிறார்கள்.

சம்பத்குமார் said... Reply to comment

//நம்மைப்பார்த்து தான் நம் குழந்தைகளும் கற்றுக்கொள்கிறார்கள் நாம் தான்
அவர்களுக்கு முன்மாதிரியாய் இருந்து நம்மை விட வயதில்
மூத்தவர்களை மரியாதையோடு அழைக்கவும்,பேசவும் கற்றுக்கொடுக்க
வேண்டும்.//

மிகச் சரியான வரிகள் நண்பரே..குழந்தைகள் மரியாதையை கற்றுக்கொள்வது பெற்றோர்களிடமிருந்துதான்

விழிப்புணர்வு பகிர்விற்க்கு நன்றி

Anonymous said... Reply to comment

கோகுல் சார், உங்கள தம்பின்னு கூப்புட்டது தப்புதான் சார். சாரி சார். சார்.

மனோ சாமிநாதன் said... Reply to comment

நல்லதொரு பதிவு!

மரியாதை செலுத்துவதும் மரியாதையுட‌ன் அழைப்பதும் இன்றைய சமுதாயத்தில் நிறைய குறைந்து விட்டது. அந்தக் குறையைக் களைவதற்கான சிற‌ந்த முயற்சி இந்தப் பதிவு!

வலையுகம் said... Reply to comment

சமயத்தில் குடும்பத்தாரை கூட
(எங்க இராமநாதபுரத்தில்)
அவளே கட்டி வச்சு புட்டாய்ங்கே
என்ன மாப்ளே பாத்தாய்ங்கே
என்று விளிப்பது உண்டு

அது போன்றே வார்த்தைகளை கேட்கும்போதே எனக்கு லேசாக உறுத்தியது உண்டு

நீங்கள் பதிவாக போட்டு விட்டீர்கள்
நன்றி சகோ

இராஜராஜேஸ்வரி said... Reply to comment

அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும் வயசுக்கு மரியாதை


குடுங்க!!!

அருமையான பகிர்வு.
மரியாதையான பாராட்டுக்கள்