Showing posts with label பேச்சிலர். Show all posts
Showing posts with label பேச்சிலர். Show all posts

Thursday, March 8, 2012

கலையும் பேச்சிலர் விரதம்...


வணக்கம் ,

செய்திகள் தொடர்கின்றன...

கோகுல் மனதில் என்ற வலைத்தளத்தில் எழுதி வரும் கோகுல் தனது பேச்சிலர் விரதத்தை கலைக்கப்போவதாக வந்த தகவலை அடுத்து நாங்கள் உண்மை நிலவரத்தை அறிய எங்கள் குழுவுடன் விபரம் அறிய புறப்பட்டோம்.விசாரித்ததில் கோகுலின் பெற்றோர் பார்த்த ஒரு பெண்ணை மணமுடிக்க சம்மதம் தெரிவித்ததாக தெரிகிறது.அப்போ திரிசா வாழ்க்கை என்னாகுறது எனக்கேட்ட நண்பர்களிடம் திரிசா கிடைக்குலன்னா திவ்யா  என சொன்னதாக தெரிகிறது.ஆனால் பெண்ணின் பெயர் திவ்யா இல்லை என்பதால் அவரின் மேல் சின்ன சந்தேகம் எழுகிறது.

                   
ஜூன் முதல் வாரத்தில் திருமணம் என பரவலாக பேச்சு.எல்லாம் செய்யும் இந்த காதல் என அனுபவிக்காமலே எழுதிய இவர் இந்த இடைப்பட்ட காலங்களில் காதலை அனுபவித்து வெல்வாரா?இல்லை இல்லை சொதப்புவாரா?பொறுத்திருந்து பார்ப்போம்.

இது குறித்து கோகுல் என்ன கூறுகிறார்?அவரிடமே கேட்போம்.

எனக்கே இது எதிர்பாராத அதிர்ச்சியாதாங்க இருக்கு, டக்கு டக்குனு திரும்பி பாக்கறதுக்குள்ள என்னென்னமோ நடந்துடுச்சு.ஒரே ஒரு பொண்ணை பார்த்து அந்த பொண்ணையே ஓகே சொல்லிட்டதுல கொஞ்சம்,இல்ல இல்ல நிறையவே வருத்தம் இருக்கத்தாங்க செய்யுது.(செய்தியாளர் மனசுக்குள்- அந்த பொண்ணு தான வருத்தப்படணும்).அப்புறம் எங்கேயோ கேட்ட டயலாக் ஞாபகம் வந்துச்சு ஃபோன்,பைக்,கல்யாணதுக்கு வரன் இதெல்லாம் செலக்ட் பண்ணிட்டு கொஞ்ச நாள் கழிச்சு இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணியிருக்கலாமோனு தோணுவதை தடுக்கவே முடியாது.`அதை மனசில வைச்சிக்கிட்டு மனசை தேத்திக்கிட்டேன்ங்க.

அப்புறம் நம்மளையும் ஒரு பொண்ணு ஓகே சொல்லிடுச்சேனு ரொம்ப சந்தோசமா இருக்கு.என்ன இது வரைக்கும் காதலை வேறு பக்கங்களில் திசை திருப்பி விட்டிருந்தேன்.இப்ப கொஞ்சம்,இல்ல,இல்ல நிறையவே திசை திருப்பனும்.காதலில் சொதப்புவது எப்படின்னு படம் எடுத்தவங்க,கல்யாணம் வரை சொதப்புவது எப்படின்னு படம் எடுத்திருந்தாங்கன்னா எனக்கு கொஞ்சம் யூஸ் புல்லா இருந்திருக்கும்.பாப்போம்ங்க.நடப்பதெல்லாம் நல்லதுக்கேன்னு மனசை தேத்தி வைச்சிருக்கேன்.

                    

இது குறித்து அவரது மனசாட்சி சொல்வது என்ன கேட்போம் வாருங்கள்.


வாழ்க்கை ஒரு வட்டம்னு இளைய தளபதி சொன்னதை இப்ப இவன் நல்லா அனுபவிக்க போறான்.கூட இருக்குற பிரண்ட்ஸ்,லவ் பண்ணும போது அப்படி என்னடா இவ்வளவு நேரம் போன்ல பேசுறிங்க,இப்பதாண்டா மணிக்கணக்குல பேசுனிங்க அதுக்குள்ளே லொட்டு லொட்டுனு எஸ்.எம்.எஸ் அனுப்புறிங்கன்னு ஏகத்துக்கு ஓட்டிட்டு இருந்தான் இப்போ அவங்க டர்ன்.உங்களுக்கெல்லாம் ஒரு உண்மை சொல்றேன் இப்ப இவன் எல்லா ரீசார்ஜ் கடைலயும் போய் பாஸ் (எ) பாஸ்கரன் படத்துல வர்ற ஆர்யா மாதிரி ரெண்டு பேரு பேசணும்,கேப் விடாம 24 மணிநேரமும் பேசணும்,ஆனா ஃப்ரீயா பேசணும் அதுக்கு ஏதாவது ஸ்கீம் இருக்கானு நச்சரித்து கொண்டிருக்கிறான்.அப்படியெல்லாம் ஒன்னுமில்லைங்கனு கடைக்காரர்கள் துரத்தியடிக்காத குறைதான்.

                      
இனி இவனது மொபைல்க்கு வரும் கால்கள் எல்லாம் வெயிட்டிங்கில் இருக்கும் எனவும்,இன்பாக்ஸ்,சென்ட்பாக்ஸ் நிரம்பி வழியும் எனவும் எதிர்பார்க்கிறேன்.ஐயோ பாவம் யார் பெத்த புள்ளையோ இப்படி புலம்பிக்கிட்டு திரியுதேன்னு பல பேர்க்கிட்ட பேர் வாங்க போறான்.அதெல்லாம் போகட்டும்ங்க இவனுக்கு வரப்போகும் இந்த புதிய உறவுகளும்,வாழ்க்கையும் சிறப்பாக அமையட்டும்னு வாழ்த்தறேன்ங்க..
நேயர்களே,
                    

கோகுலும்,அவரது மனசாட்சியும் நாம் கேள்விப்பட்ட செய்தியை உறுதி செய்து விட்டார்கள்.இதுவரை பேச்சிலர் விரதம் பூண்டிருந்த கோகுல் விரதம் கலைக்கப்போவது உறுதியாகிவிட்டது.அவருக்கு நமது வாழ்த்துகளை சொல்லி விடைபெறுவோம் நன்றி. 

படங்கள்-கூகுள் தேடலில்.....


மேலும் வாசிக்க "கலையும் பேச்சிலர் விரதம்..."