Wednesday, February 29, 2012

இந்திய ஒரு நாள் கிரிக்கெட்டின் அடுத்த கேப்டன் யார்?


இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கிடையே இருக்கும் கருத்துவேறுபாடு சமீபமாக தலைதூக்கியிருப்பது ஊடகங்களில் வாயிலாக தெரிகிறது,மேட்சுகளிலும் தெரிகிறது.குறிப்பாக மூத்த வீரர்கள் கேப்டன் தோனிக்கிடையேயும்,சேவாக் தோனிக்கிடையேயும் பிளவிருப்பதாக அவ்வப்போது செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.
                  தூக்கிப்பிடிப்பது கீழே போட்டு அமுக்குவதற்க்கே என்று தெரியாமல் சிரிக்கிறார்   

தோனி வேறு ஓய்வெடுப்பதைப்பற்றி பேசி வருகிறார்.(சச்சினை ஓய்வெடுக்க சொல்லி மறைமுகமா சொல்றாரா?) இந்த சூழலில் அடுத்த கேப்டனாக வர வாய்ப்பிருக்கும் வீரர் யாராக இருக்கமுடியும்.நேத்து கட்சி ஆரம்பிச்சு அடுத்த தேர்தல்ல ஆட்சியை நாங்க தான் பிடிப்போம்னு சொல்ற மாதிரி நேத்து டீம்ல சேந்தவங்க எல்லாருக்குமே கேப்டன் கனவு இருக்கும் ஆனா ஆசை இருக்கு தாசில் பண்ண அம்சம் இருக்கு கழுதை மேய்க்க அப்படின்னு பழமொழி சொல்வாங்க. அதனால கேப்டனாகும் அம்சம் யாருக்கு இருக்குன்னு ஒரு அலசல் எனது பார்வையில்.(நாங்க எல்லாம் கடன் வாங்கியா பாக்குரோம்னு கேக்கப்படாது ..ரைட்!).சச்சினை தவிர்த்து.
                               
                                     
சேவாக்-தோனி இல்லாத சமயங்களில் கேப்டன் பொறுப்பு இவர் மீது விழுந்தாலும் அணியில் இடம் பிடிப்பதே இப்போதைய சூழலில் இவருக்கு கேள்விக்குறியாகிறது.அது மட்டுமல்லாமல் வந்தமா நாலு போர் ரெண்டு சிக்ஸ் அடிச்சமா,போனமா இதுதான் இவரது பாலிசி அதனால அந்த வேலைக்கு இவர் சரிப்பட்டு வரமாட்டாரு.


                              ( நமக்கு ஊஊ ........தானா?  )      

காம்பிர்- இவரும் சில மேட்சுகளில் காப்டனாக வலம் வந்திருக்கிறார்.கடந்த நியூசிலாந்து தொடரில் அந்த அணிக்கு வெள்ளை பூசி அனுப்பினார்.டெல்லி டேர் டெவில்ஸ் க்கும் கேப்டனாக இருந்து வருகிறார்.ஆனால் தேர்வுக்குழுவின் மனதில் இவர் தற்காலிக கேப்டனாக மட்டுமே நினைவுக்கு வருவார்.
                          
யுவராஜ்சிங்-திறமையான ஆல்ரவுண்டர்.முன்பு கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கும் இப்போது புனே வாரியர்சுக்கும் கேப்டனாக இருப்பவர்.இந்த இரு அணிகளின் கேப்டனாக ஐ.பி.எல் ல அந்த அளவுக்கு இவரது பொறுப்பு சிறப்பா இல்ல.அதுமட்டுமில்லாம இப்ப நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.திரும்பி வந்து மீண்டு பழைய நிலையை அடைய கொஞ்ச காலம் எடுத்துக்கும்(சீக்கிரம் வாங்க யுவி,மிடில் ஆர்டர்ல ரொம்ப சொதப்புறாங்க நம்மாளுங்க வந்து என்னன்னு பாரருங்க).அதனால இவருக்கும் வாய்ப்பு குறைவுதான்.

இவங்களுக்கு அடுத்த படியா சீனியர்கள் யாரும் ஜாகீர்கான் தவிர டீமில் இல்லை.இவருக்கு கேப்டன் பதவி கிடைக்க வாய்ப்பே இல்லைன்னு நான் சொல்லி தெரிய வேண்டியதில்ல.(யார் கண்டா எது வேணும்னாலும் நடக்கலாம்).

சரி,யாருக்குத்தான் அந்த வாய்ப்பு பிரகாசமா இருக்கு அப்படின்னு பாத்தா,ராகுல்டிராவிடின் ஒருநாள் போட்டி ஓய்வுக்கு பின் அவரது இடத்துக்கு விராட்கோக்லி,ரோகித்சர்மா,சுரேஷ் ரெய்னா இவங்கமூணு பேருக்கிடைய பலத்த போட்டியிருப்பதாக தெரிகிறது.(யுவராஜ் இல்லாததால் ரெய்னாவும்,ரோஹித்தும் மாறி மாறி ஆடறாங்க)
                             
ஆனா விராட்கோக்லி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.மேட்சின் தன்மைக்கு ஏற்ப தனது ஆட்டத்தை மாற்றியமைத்து ஆடிவருவது வியப்பளிக்கிறது.இதனால்அணியில் இடம் பெற்றிருந்தாலும் விளையாடும் ப்ளேயிங் லெவனில்  தனது இடத்தை தொடர்ந்து தக்க வைத்து வருகிறார்.நேற்றைய போட்டி (இந்தியா இலங்கை இடையே 133 runs in just 86 ) இவரது ஆட்டங்களின் மாஸ்டர் பீஸ்னே சொல்லலாம்.ஒவ்வொரு மேட்சுலையும் இவருடைய போராடும் குணம் பாராட்டத்தக்கது. Under 19 அணிக்கு கேப்டனாக செயல்பட்டு உலகக்கோப்பையை வாங்கிய சிறப்பும் இவருக்கு உண்டு.ஃபீல்டிங்லயும் கலக்குறார்.அப்பப்போ பவுலிங்லயும் கை கொடுக்குறார்.இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது.
              
தோனிக்கு அடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டனாக யார் வருவது என கேள்வி எழுந்ததால் விராட்கோக்லியின் பக்கம் அனைவரது கவனமும் திரும்பும் என்பதில் சந்தேகமில்லை.


மேலும் வாசிக்க "இந்திய ஒரு நாள் கிரிக்கெட்டின் அடுத்த கேப்டன் யார்?"

Tuesday, February 28, 2012

இந்த வண்டிக்கு கியர் இல்லைங்க (கியர் வண்டி -2)



நந்தனுக்கு கல்லூரி முடியும் தருணத்தில் அவனது அக்கா வீட்டு புதுமனை புகும் நிகழ்வு வந்தது.இந்த மாதிரி குடும்ப நிகழ்வுகளில் ஒவ்வொருவருக்கும் ஒரு வேலை இருக்குமே.அக்காவின் புது வீடு அந்த ஊர் பஸ்ஸ்டாண்டிலிருந்து ரெண்டு கி.மீ.தூரம்.அதனால நிகழ்ச்சிக்கு வருபவர்களை பஸ்ஸ்டாண்டுல இருந்து டூ வீலர்ல கூட்டிட்டு வரணும்.இந்த பொறுப்பை மாமாட்ட சொல்லி எப்படியாவது வாங்கிடம்னு மாமாக்கிட்ட,”மாமா நான் வர்றவங்கள பஸ்ஸ்டாண்டில இருந்து வண்டியில கூட்டிட்டு வந்துடறேன்” அப்படின்னான்.டே,உனக்கு வண்டி ஓட்ட தெரியுமா?அப்படின்னு மாமா கேக்க,என்ன மாமா இப்படி சொல்லிட்டீங்க,பாருங்க லைசென்ஸ் வைச்சிருக்கேன்.அப்படின்னான் நந்தன்.என்னடா ஆட்சி பிடிக்க கட்சி ஆரம்பிச்சா போதும்ங்கற மாதிரி சொல்ற.சரி ஓகே.சரி,சரி நீயும் செல்வாவும் இந்த வேலையை பாத்துக்கங்க.இந்தா சாவி.இன்னொரு சாவியை அவன்கிட்ட கொடுத்துடு.அவன்கிட்ட கொடுத்துடு.

                                                         
சந்தோசமாக சாவியை வாங்கிக்கிட்டு வண்டியை ஸ்டார்ட் பண்ணிட்டு திருதிருன்னு முழிச்சான்.என்னடா முழிச்சுக்கிட்டு நிக்கறன்னு மாமா கேக்க ஒண்ணுமில்ல மாமா கியர் விழல அப்படின்னான்.பாத்தா பின்னாடி காலை வைச்சு அமுக்கு அமுக்குன்னு அமுக்கிகிட்டு இருந்தான்.டே,டே,கியர் லிவர ஓடச்சுடாதடா,இந்த வண்டியில கியர் முன்னால அமுக்கனும் அப்படின்னார்.டே,வண்டி ஒட்டுவியாடா?ஆரம்பமே சரியில்லையேனு மாமா பதற ,அதெல்லாம் ஒண்ணுமில்லை மாமா நான் ஓட்டுன வண்டியில கியர் பின்னால அதான் சின்ன குழப்பம்.அப்படின்னு சமாளித்து கிளம்பினான்.


போயிட்டு வந்ததும்,ஒரு வழியா போயிட்டு வந்துட்டியாடா,பரவால்லியே,சரி சரி வேற யாரும் வந்து போன் பண்ணா போய் கூட்டிட்டு வா நான் பந்தல்காரங்களை பாத்துட்டு வரேன் அப்படின்னு வண்டியை எடுத்துக்கிட்டு கிளம்பினார்.இப்ப இருந்தது செல்வாக்கிட்ட கொடுக்க சொன்ன வண்டி.நமக்கு அடிச்சதுடா அதிர்ஷ்டம் ஒரே நாள்ல ரெண்டு வண்டி ஓட்ட வாய்ப்புனு பூரிப்படைந்தான்.சின்னதாத்தா வந்திருப்பதாக போன்வர போய் கூட்டி வந்தான்.வருவதற்குள் மாமாவும் வந்திருக்க என்னடா இந்த வண்டியில கியர் ஒழுங்கா போட்டு ஒட்டுனியா?அப்படின்னார்.ஒன்னும் பிரச்சினையில்ல மாமா ஆனா நாளாவது கியர்ல போகும் போது கூட வண்டி முக்குது என நந்தன் கேக்க,அடப்பாவி இதுல அஞ்சு கியர் இருக்குடா.பெட்ரோல் விக்குற விலையில இப்படி ஒட்டுனா லிட்டருக்கு முப்பது கி.மீ.கூட கொடுக்காதுடா அப்படின்னு மாமா எகிற விடுங்க மாமா அடுத்தமுறை பாத்துக்கலாம்னு சமாதானப்படுத்தினான்.
                                              

                                                         

இந்த முறை செல்வா ஒரு வண்டியும்,மாமாவின் தம்பி இன்னொரு வண்டியும் எடுத்துக்கொண்டு எங்கோ சென்றுவிட,சித்தி வந்திருப்பதாக அழைப்பு வந்தது.பெரியப்பா வந்திருந்த வண்டியை கொடுத்து போய் கூட்டி வருமாறு சொன்னார்.நந்தனுக்கு சந்தோசமோ சந்தோசம் பின்னே கியர் வண்டியே ஓட்ட வாய்ப்பு இல்லாமலிருந்தவனுக்கு இன்றைக்கு மூணாவது வண்டி.ஸ்டார்ட் பண்ணிட்டு கொஞ்ச தூரம் போயிட்டு திரும்பி வந்தான்.மாமா என்னடா என்ன ஆச்சுனு கேக்க,மாமா இந்த வண்டியில பர்ஸ்ட் கியருக்கு மேல விழமாட்டேங்குது என்னன்னு பாருங்க அப்படின்னான்.ஒரு முறை முறைச்சுட்டு டே உன்ன கொல்லப்போறேன்,இந்த வண்டியில முத கியர் பின்னாடி மத்ததெல்லாம் முன்னாடினு கத்தினார்.ஹிஹி சரி மாமா விடுங்க மாமா.போயிட்டு வந்துடறேன்.( எவண்டா ஒவ்வொரு வண்டிக்கும் ஒவ்வொரு மாதிரி கியர் வைச்சான்).


ஒரு வழியா நிகழ்ச்சி முடிஞ்சுது.ஊர்ல இருந்து அத்தை கொஞ்சம் லேட்டா வந்து போன் பண்ணாங்க.அந்த நேரம் பாத்து எந்த வண்டியும் இல்ல.மாமா பக்கத்து வீட்டுல ஒரு வண்டி வாங்கி வந்து போடா போய் அத்தையை கூட்டிட்டு வா,எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு அப்படின்னு நந்தன்கிட்ட சொன்னார்.(இன்னமுமா இந்த உலகம் நம்மை நம்புது)சரி மாமா இதோ போய் வந்துடறேன் சாவி கொடுங்க.கொஞ்ச நேரம் வண்டியை சுத்தி சுத்தி பாத்துட்டு கேக்கலாமா வேணாமான்னு கொஞ்ச நேரம் யோசிச்சுட்டு இருந்தான்.நந்தன் தயங்கி தயங்கி நிக்குறத பாத்தா மாமா டே என்னடா இன்னும் நின்னுக்கிட்டு இருக்க?இந்த வண்டியில கியர் இல்ல மாமா?அப்படின்னான்,டே என்னடா இந்த இளநில தண்ணி வரலன்னு சொல்ற மாதிரி சொல்ற இது ஸ்கூட்டி பெப்டா இதுக்கு கியர் கிடையாது.அத சொல்லலாம்ல ரொம்ப நேரமா தேடிக்கிட்டு இருக்கோம்ல னு சொல்ல அத்தைக்கு போன் போட்ட மாமா ,நீங்க கொஞ்சம் சிரமம் பாக்காம நடந்தே வந்துடுங்க அப்படின்னு போன் வைச்சுட்டு நந்தனை ஒரு பார்வை பார்த்துட்டு போய்விட்டார்.



என்னங்க நந்தனுக்கு அவங்க அப்பா கியர் வண்டி வாங்கி கொடுத்திருப்பாரா?


மேலும் வாசிக்க "இந்த வண்டிக்கு கியர் இல்லைங்க (கியர் வண்டி -2)"

Monday, February 27, 2012

பல"சரக்கு"கடை - 3(27/02/2012)

டமாலுக்கா அடி டுமீலுக்கா... 

                          
                                              அம்பதுரூவா புல்லட் அதுவும் என் செலவுல முடிஞ்சுடுச்சு.

வங்கிக்கொள்ளையர்களின் என்கவுண்டர் சம்பவம் அஞ்சாதே பட கிளைமாக்ஸ் காட்சியை நினைவூட்டியது.இதைப்பார்த்து கொள்ளையர்கள் கொஞ்ச நாளைக்காவது டர்ர்ராகிப்போவார்கள் என்பதில் சந்தேகமில்லை.கொள்ளையர்களைக் கண்டுபிடிப்பதும் பணத்தை மீட்பதும் நோக்கம் என்றால் எல்லோரையும் சுட்டுக்கொன்றதால் அடுத்தகட்ட விசாரணையில் தொய்வு ஏற்படுமா?வீரப்பன் என்கவுண்டரில் அவிலா முடிச்சுகளைப்போலவே இங்கும்.


பூனையை மிரட்டி புலியாக்கும் முயற்சியா? 

                                           
தமிழகத்தையே ஆண்டுகொண்டிருக்கும் மின்வெட்டு மக்கள் மனதில் கூடங்குளம் கூடங்குளம் அணுமின் நிலையம் திறந்தால் தான் மின்வெட்டு குறையும் என்று மாயத்தோற்றத்தை உண்டாக்கியிருக்கிறது(அ)உண்டாக்கப்பட்டிருக்கிறது.திருப்பூரில் நடந்த அனைத்து வணிகர்களின் கடையடைப்பு நிகழ்வுகள்,ஆதரவு எதிர்ப்பு இல்லாத நடுத்தரதினர் ஆதரவுப்பக்கம் வருவதை பார்க்க முடிகிறது.


பொங்கி வழிந்த சேரன்

மெருகேற்றிய கர்ணன் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சேரனின் சிவாஜிகாதல் ரொம்பவே பொங்கி வழிந்தது.ரீமேக் படங்களின் மீதான கோபம் தெறித்தது.தில் இருந்தா ஏதாவது சிவாஜிப்படத்தை ரீமேக் பண்ணிப்பாருங்கன்னு சவால் விட்டிருக்கார்.அவரது பேச்சில்.தமிழ் திரையுலகுக்கு சிவாஜி நடிப்புப்பிச்சை போட்டிருக்கார்.ஆனா நடிக்கனுமே,என கேட்டிருக்கிறார்.நடிங்கப்பா,அட சினிமாவுலப்பா.


சக்தே இந்தியா

                     
கடந்த ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள தகுதி பெறாமலே வெளியேறி பணால் ஆனா இந்திய ஹாக்கி அணி இந்த முறை இதுவரை நடந்த தகுத்திச்சுற்றுப்போட்டிகள் எல்லாவற்றிலும் வெற்றி பெற்று எதிர்வரும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று எழுச்சி கண்டுள்ளது மகிழ்ச்சி.32 ஆண்டு கால கனவினை நனவாக்க நமது வாழ்த்துகளை சொல்லி வைப்போம்.ஒரு சின்ன வருத்தம் நமது மகளிரணி ஒலிம்பிக்கில் தகுதி பெற முடியாமல் போனது.ஆனால் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.(சிவகுமார் அண்ணனின் பதிவை பார்க்க )

லண்டன் ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி!!





 மரணமாக அரேங்கேறிய ஒத்திகை   
                               
                                     
பெங்களூருவில் ஒரு தனியார் ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் நடந்த தீ தடுப்பு ஒத்திகை நடத்திய தீயணைப்புத்துறையினர் அந்நிறுவனத்தில் பணியாற்றிய ஒரு இளம்பெண் அதிகாரியை மாடியில் தீயில் சிக்கியவர்களை காப்பாற்றுவது எப்படி என  demo காட்ட இணையும்படி அழைத்திருக்கிறார்கள்.ஆனால் அவர்கள் demoவுக்கு பயன்படுத்திய கயிறு அறுந்து கீழே விழுந்து அவர் மரணமடைந்திருக்கிறார்.மரணத்தை தடுக்க வேண்டிய ஒத்திகை மரணம் ஏற்படுத்தியிருப்பதும்,தீயணைப்புத்துறை இந்த அளவுக்கு இத்துப்போன உபகரங்களை பயன்படுத்துவதும் அதிர்ச்சியளிக்கிறது.

பார்லிமென்ட் விஞ்ஞானி

டெல்லியில் சமீபத்தில் குண்டு வெடித்தது பற்றி நமது உள்துறை அமைச்சரின் ஸ்டேட்மெண்ட்."டெல்லியில் குண்டு வைத்தவன் நன்கு பயிற்சி பெற்றவன்.அவன் பயங்கர தீவிரவாதியாக இருப்பான்.இதற்க்கு டிவிட்டரில் எனது கமெண்ட்# அவன் கருப்பா பயங்கரமா இருப்பான்.இன்னுமொரு டிவிட்டர் நண்பரின் கமெண்ட் நச்சுன்னு இருந்தது.அது" 
  • ·
#சேட்டு கடையில அடகு வைத்தவன் பயங்கர ஏழையா இருப்பான். போயா யோவ்!




மேலும் வாசிக்க "பல"சரக்கு"கடை - 3(27/02/2012)"

Sunday, February 26, 2012

நிறம்,மனம்,இதயம்,அரேங்கேற்றம்



நிறம்


தோலில் பார்க்காதவரையில் 
எல்லோர்க்கும் ப்ரியமே!


மனம்


சிலருக்கு
 முகம் பார்க்கும் கண்ணாடியாய் 
சிலருக்கு 
ஊடுருவும் கண்ணாடியாய்!



இதயம்


இருக்கிறதா என்றாய் 
இருந்தது என்றேன்!


அரங்கேற்றம்


உன்னிடம் பேச வேண்டியதை 
நன்கு ஒத்திகை பார்க்கிறேன்
ஆனால் அரங்கேற்றம் 
வேறு விதமாகத்தான் நடக்கிறது!



பேஸ்புக்கில்,டிவிட்டரில் பகிர்ந்தது.
படங்கள்-கூகுள் தேடலில்.......


மேலும் வாசிக்க "நிறம்,மனம்,இதயம்,அரேங்கேற்றம்"

Friday, February 24, 2012

கியர் வண்டி



கியர் வண்டி ஓட்டுவது ஒருகலை அப்படின்னே சொல்லலாம்.ஸ்டார்ட் பண்ணி க்ளர்ட்ச் புடிச்சு முதல் கியர் போட்டு மெதுவா க்ளர்ட்ச் ரிலீஸ் பண்ணி  அதே நேரத்துல ஆக்சிலேட்டர் கொடுத்து வண்டியை கிளப்பனும்.கிளர்ட்ச் விடுரத்துக்கும் ஆக்சிலேட்டர் கொடுக்குறத்துக்கும் டைமிங் ரொம்ப முக்கியம்.ஒண்ணு கிளர்ட்ச் வேகமா விட்டா வண்டி ஆப் ஆகிடும்,ஆக்சிலேட்டர் வேகமா கொடுத்தா வண்டி கவுத்து விட்டுடும்.அது மட்டுமில்லாம வண்டியின் வேகத்துக்கு ஏத்த மாதிரி கியர் குறைக்கனும்,கூட்டணும்.இப்படி பல டெக்னிக்குகள் இருக்கு கியர் வண்டி ஒட்றதுல.

நந்தனுக்கு சின்ன வயசுல இருந்தே கியர் வண்டி என்றாலே அப்படி ஒரு இஷ்டம்.அவங்க வீட்டுப்பக்கத்துல ஏதாவது வண்டி வந்து நின்னாலே போதும் கிட்டப்போய் நின்னு தொட்டுப்பாத்து பரவசமடைவான்.அவனே ஓட்டுவது போல பாவனை செய்து கற்பனை வானில் மிதப்பான்.திப்பி வியாபாரம் செய்யும் பழனிசாமி ஒரு பழைய மாடல் ராஜ்தூத் வைத்திருந்தார்.அதுல ஸ்டார்ட் பண்ணும் ஸ்டையில் அவனுக்கு ரொம்ப பிடிக்கும்.ரெண்டு மூணு தடவை படக்,படக்குன்னு மிதிச்சு வேகமா உதைச்சா தான் அது ஸ்டார்ட் ஆகும்.சில சமயம் அப்படியும் ஸ்டார்ட் ஆகாது அவர் என்னென்னமோ பண்ணுவார் ஏதேதோ பாகங்களை அமுக்கிவிட்டும்,வயர்களை இழுத்துவிட்டும் எப்படியோ ஸ்டார்ட் செய்து போவதை வியப்புடன் பார்ப்பான்.

சொசைட்டியில வேலை செய்யுற செல்வம் வைச்சிருந்தது டபுள் சைலன்சர்  இருக்கும் ஜாவா பைக்.அதுல ஸ்டார்ட் பண்ற கிக்கர்,கியர் லிவர் ரெண்டும் ஒண்ணுதான்.ஸ்டார்ட் பண்ணுனப்பறம் அந்த கிக்கரையே முன்னால தள்ளிவிட்டு கியர் போடணும்.செல்வம் வண்டியை சீமண்ணை போட்டு தான் வண்டி ஓட்டுவார்.இதுக்காக வண்டியில ஒரு செட் அப் பண்ணியிருப்பார்.வண்டி ஸ்டார்ட் பண்ண மட்டும் பெட்ரோல் அதுக்கப்பறம் இன்னொரு டேப் திறந்து சீமண்ணைல ஓட்ட ஆரமிப்பார்.ஊருக்கு இலவச கொசு மருந்துதான்.தூரத்துல வரும் போதே செல்வம் வரார்னு ஊருக்கே தெரியும்.


இப்படியெல்லாம் பார்த்து பார்த்து நந்தனுக்கு கியர் வண்டிகள் மீதான காதல் பெருகிக்கொண்டே இருந்தது.ஆனா இந்த கனவுகளை நிஜமாக்கும் வாய்ப்பு அவ்வளவு சீக்கிரத்தில் கிடைத்துவிடவில்லை.நந்தன் கல்லூரியில் சேர்ந்த போதும் தங்கிய ஹாஸ்டலில்இருந்து கல்லூரி பக்கம் என்பதால் அங்கே யாரும் கியர் வண்டி வைத்திருக்கவில்லை.டே ஸ்காலர்  பசங்க ரெண்டு பேர் வைச்சிருந்தாங்க.ஆனா எப்பவுமே டேஸ்காலர் பசங்க ஹாஸ்டல் பசங்க கூட ஒட்ட மாட்டாங்கஅதனால அவ்வளவு சீக்கிரம் நந்தன் அந்த பசங்ககிட்ட வண்டி ஓட்ட கத்துக்கும் ஆர்வத்தை சொல்லல.கல்லூரிப்பருவத்தில பசங்ககிட்ட இதுபோன்ற வேறுபாடுகள் ரொம்ப நாள் நிலைக்காது.முதலாமாண்டு கடந்ததும் எல்லா பசங்களும் ஒண்ணோட ஒண்ணா பழக தொடங்கிட்டாங்க.

அதான் எல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணாகியாச்சே இப்ப நம்ம ஆசையை நிறைவேத்திக்கலாம்னு ஸ்ப்லண்டர் வைச்சிருந்த கிருஷ்ணாகிட்ட சொன்னான்.கிருஷ்ணா “அதுக்கென்ன மச்சி தாராளமா கத்துக்கோ அப்படின்னு கத்துக்கொடுத்தான்.தன் வாழ்நாள் லட்சியம் நிறைவேறிய மகிழ்ச்சியை அடைந்தான் நந்தன்.


எரிகிற தீயில் எண்ணெய் விட்டது போல ரெண்டு நாள் ஒட்டியது அவனுக்குள்ளிருந்த கியர் பைக் தாகத்தை அதிகமாக்கியது.கிருஷ்ணா வண்டியை வைச்சே டூ வீலர் லைசன்சும் வாங்கிட்டான்.அந்த வண்டியைத்தவிர வேறு வண்டி ஓட்ட வாய்ப்பும் கிடைக்கவில்லை.வீட்டில் பைக் வாங்கித்தர சொல்லி நச்சரிக்க ஆரம்பித்தான்.வீட்டில் படிப்பு முடிந்ததும் வாங்கித்தருவதாக அப்பா ஆசைக்கு அணை போட்டதும் காவிரிக்காக,முல்லைப்பெரியாருக்காக ஏங்கும் தமிழகம் போல படிப்பு முடியக்காத்திருந்தான்.

கதையை ஒரே பதிவில் முடிக்கலாம் என்றிருந்தேன் கொஞ்சம் நீளமாக செல்வதால் அடுத்த பதிவில் முடிக்கலாம் கதையின் போக்கை கொஞ்சம் கற்பனை செய்து காத்திருங்கள்.


படங்கள்-கூகுள் இமேஜ்.
மேலும் வாசிக்க "கியர் வண்டி"

Thursday, February 23, 2012

தளபதி,கேப்டன்,ஜூனியர் ப.சி. நடுவானில் களேபரம்


ஸ்டாலினும்,விஜயகாந்தும்,கார்த்தி சிதம்பரமும் கடந்த வாரம் விமானப்பயணத்தில் சந்தித்த போது நடுவானில் நடந்தது என்ன?ஒரு கற்பனை ரிப்போர்ட்......

                       
விமானப்பணிப்பெண் ஜூனியர் ப.சி.யிடம்(கார்த்தி சிதம்பரம்) வந்து,சார் இதே பிளைட்ல தளபதியும் வந்திருக்காரு அப்படின்னாங்க.இளைய தளபதியா,புரட்சிதளபதியா இல்ல சின்ன தளபதியா எந்த தளபதி அப்படின்னு கேட்டாரு நம்ம ஜூனியர் ப.சி.ஜெர்க்கான பணிப்பெண்(இவரு சின்ன பகவதி க்ரூப் போல அப்படின்னு நெனைச்சுக்கிட்டு)சார் கலைஞரின் இளைஞன், திமுக இளைஞரணி(!) பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் வந்திருக்காரு சார் அப்படின்னாங்க.

ஓ!அப்ப நிச்சயமா அவர சந்திச்சே ஆகணுமே அப்படின்னு கிளம்புறாரு.(கண்டிப்பா இத்தனை வயசுலயும் இளைஞரணியில் இருப்பது பற்றி கேட்டு தெளிவு பெற்றுவிட வேண்டுமென்று முடிவுடன்.பின்னே நம்ம இளைய தளபதிக்கே நோ சொல்லிட்டாரே ராகுல்ஜி)

ஜூ.ப.சி—வணக்கம் தளபதி,நலமா?

தளபதி – (யாரு இவரு வாண்டடா வந்து என்ட்ரி ஆகுறாரு,ஒரு வேளை இளைஞரணி பொறுப்பு கேட்டு பாலோ பண்றரோன்னு நினைச்சுக்கிட்டு)இளைஞரணி பொறுப்பாளர் பேர் தெரியுமா?இளைஞரணியில் சேர எத்தனை வயதுக்குள் இருக்க வேண்டும்?

ஜூ.ப.சி—சார்,சார் என்னை தெரியலையா நான் தான் கார்த்தி.

தளபதி-ஓ!வாங்க கார்த்தி,நல்லாயிருக்கீங்களா?அண்ணன் சூர்யா,அப்பா சிவகுமார் எல்லாம் எப்படி இருக்காங்க?கேட்டதா சொல்லுங்க.அப்புறம் போன படத்துல பாத்தத விட கொஞ்சம் வெயிட் போட்டுட்ட மாதிரி இருக்கு.அடுத்த படத்துக்காகவா?

ஜூ.ப.சி.—(கிழிஞ்சது)தளபதி நான் கார்த்தி சிதம்பரம்.மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் மைந்தன்.

தளபதி—ஹா,ஹா, வாங்க தம்பி,நல்லாருக்கீங்களா?அப்பா எப்படியிருக்காரு?டெல்லியில குண்டு வெடிச்சதை யாரோ திட்டமிட்டு செய்த சதின்னும் குண்டு  வைச்சது நன்கு பயிற்சி பெற்ற பயங்கர தீவிரவாதியா இருப்பார்னு கண்டுபிடிச்சிட்டாராமே?எப்படி இப்படியெல்லாம்?பெரிய விஞ்ஞானியா இருப்பாரு போல,அவருக்கு என் வாழ்த்தை சொல்லிடுங்க.
இருவரும் பேசிக்கொண்டிருக்க பணிப்பெண் இவர்களிடம் வந்து சார்,ரெண்டு சீட் தள்ளி கேப்டன் உக்காந்து இருக்காரு அப்படின்னாங்க(ஜூ.பசி.ஏதோ சொல்ல வாயெடுக்க ஐயோ சார் கேப்டன் தோனி இல்ல கேப்டன் விஜயகாந்த் அப்படின்னு தெளிவா சொல்லிட்டாங்க)இருவரும் கேப்டன் இருக்கும் இடத்திற்கு செல்கிறார்கள்

கேப்டன் அங்கே நாக்கைத்துறுத்தி,கையை நீட்டி,மடக்கி கையில் வைத்திருந்த பேப்பரில் இருந்த வசனங்களை ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தார்.இருவரும் டரியலாகி பதுங்க பார்த்து விடுகிறார் கேப்டன்.
                      

கேப்டன்-யார்ரா அது அங்கே,புயலடிச்சுகூட பொழச்சவன் இருக்கான் ஆனா இந்த பூபதி அடிச்சு பொழச்சவன் கிடையாது வாங்க இங்கே,

இருவரும்-கேப்டன் நாங்கதான்,சட்டமன்றத்தில் உங்க அரங்கேற்றத்தை பார்த்து பிரமிச்சு போய் பாராட்டு சொல்ல வந்தோம்.

கேப்டன்- வாங்க வாங்க,நானும் நாகர்கோவில் சட்டமன்ற இடைதேர்தல் கூட்டணி பத்தி உங்களை சந்திச்சு பேசனும்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன்,வந்துட்டீங்க.(கார்த்தி கேப்டன் அது நாகர்கோவில் அல்ல சங்கரன் கோவில்னு சொல்லவர தளபதி அவரது தொடையில் கிள்ளி எச்சரிக்கிறார்..கேப்டனின் வேட்பாளர் நிலைமை நினைவுக்கு வர கமுக்கமாகிறார் கார்த்தி )

தளபதி-போன சட்டமன்ற தேர்தல்ல அம்மா தயவால தான் உங்களுக்கு இத்தனை சீட்டு ஜெயிச்சிங்கன்னு சொல்லியிருக்காங்களே?
கேப்டன்-மக்கலு(!)க்கு தெரியும் யார் தயவால யார் ஜெயிச்சாங்கன்னு.என்னோட பிரச்சார யுக்தியை பார்த்த வாக்காளர்கள் எங்கள் கூட்டணியை ஜெயிக்க வைத்தார்கள் இதை தவிர வேறு காரணமில்லை.

ஜூ.ப.சி-வர்ற நாடாளுமன்ற இடைதேர்தல்ல(தளபதி-ஐயோ பாவம் இவரும் கன்பியூஸ் ஆகிட்டாரே)பொது வேட்பாளர் நிறுத்துவது பத்தி உங்க கருத்து என்ன?

கேப்டன்- அதெல்லாம் முடியாது,யாருடனும் இனி கூட்டணி இல்லை நான் ஆரம்பத்தில் சொன்னது போல மக்கலுடன் தான் இனி கூட்டணி.வேண்டுமானால்,யாருக்காவது திராணிஇருந்தால் ஒபாமாவின் ஆட்சியை இங்கே கொண்டு வர சொல்லுங்கள் அப்போது காட்டுகிறேன் நான் யாரென்று.....
                           
மறுபடியும் கேப்டனின் கண்கள் சிவக்க ஆரமிக்கிறது,நாக்கைத்துருத்த ஆரம்பிக்கிறார் கையைத்தூக்கி ஏதோ சொல்ல ஆரமிக்க விமான நிலையம் வந்துவிடுகிறது.விழுந்தடித்து ஓடுகிறார்கள் தளபதியும்,ஜூனியர்.ப.சியும்......

மேலும் வாசிக்க "தளபதி,கேப்டன்,ஜூனியர் ப.சி. நடுவானில் களேபரம்"