Sunday, July 31, 2011

தீப்பெட்டி எங்கேடா




மூன்று பேரை குற்றம் செய்ததற்காக 10 ஆண்டுகள் சிறையில் அடைக்க 
உத்தரவிட்டார் ஒரு அரசர்

 சலுகையாக அவர்கள் விரும்பும் ஒன்றை 10 வருடம் தேவையான அளவிற்கு 
கொடுப்பதாகவும் சொன்னார்.
ஒருவர்  10 வருடம் தேவையான அளவிற்கு மது கேட்டார்.
இரண்டாமவர்  10 வருடம் தேவையான அளவிற்கு நல்ல சாப்பாடு கேட்டார்.
மூன்றாமவர்  10 வருடம் தேவையான அளவிற்கு சிகரெட் கேட்டார்
அனைத்தும் அளிக்கப்பட்டது

பத்து ஆண்டு கழித்து மூவரையும் அரசர் பார்த்து நீங்கள் விரும்பியதை வைத்து 
இவ்வளவு நாள் சந்தோசமாக இருந்தீர்களா என கேட்டார்


மூன்றாமவர்-- போடாங்கொய்யால சிகரெட் கொடுத்தியே தீப்பெட்டி எங்கேடா?




பி.கு-இது ஒரு ரீமேக் பதிவு(என்னுதுதான்)
மேலும் வாசிக்க "தீப்பெட்டி எங்கேடா"

துரோணர்கள் தொலைந்துவிட்டார்கள்!!!






அன்று!
விவேகானந்தர் கேட்டார்
நூறு வலிமையான
இளைஞர்களைத்தாருங்கள்
வலிமையான பாரதத்தைப் படைக்கிறேன் என்று!



இன்று!
நூறு லட்சம் இளைஞர்கள் கேட்கிறோம்
ஒரு விவேகானந்தரை காட்டுங்கள்
வலிமையான பாரதத்தை
படைத்துக்காட்டுகிறோம்!





ஆம்!
இன்று ஏகலைவன்களுக்கு
பஞ்சமில்லை துரோணர்கள் தான்
தொலைந்துவிட்டார்கள்!!




மேலும் வாசிக்க "துரோணர்கள் தொலைந்துவிட்டார்கள்!!!"

Friday, July 29, 2011

வருங்காலத்துக்கு வசந்தத்தை விட்டுச்செல்வோம்!குப்பைகளை அல்ல !!!



சமீப காலமாக நம்மிடையே ஒரு கலாச்சாரம் வேகமாக பரவி வருகிறது.  அது என்னன்னா,

நீங்க கூட பாத்திருப்பிங்க, முன்பெல்லாம் கல்யாணம்,காதுகுத்து,வளைகாப்பு,வரவேற்ப்பு இப்படி சுபகாரியங்களின் போது நடக்கும் விருந்துகளில் தண்ணீர் குடிக்க எவர்சில்வர் டம்ளர் வைப்பர்.(சிறு வயதில் நான் இது போன்ற விசேசங்களில் ஜக்கில் தண்ணீர் எடுத்து ஊற்ற அப்போது என் வயது பொடுசுகளோடு போட்டியிட்ட ஞாபகம்)

(யாராவது டம்ளரை திருப்பி தண்ணி ஊத்துங்க )


ஆனா இப்ப என்னை நடக்குது,கொஞ்ச நாள் முன்னாடி வரை சில்வர் தம்ளருக்கு பதில் பிளாஸ்டிக் டம்ளர் பயன்படுத்தினர்,
இப்ப உலகம் ரொம்ப வேகமா சுத்துதோ என்னமோ தெரியலசாப்பிட போறத்துக்கு முன்னாலேயே இலையப்போட்டு எல்லா பதார்த்தங்களையும் வைத்துவிட்டு(நமக்கு பிடிக்குதோ இல்லையோ சாப்பிடுறமோ இல்லையோ.இதில் கொடுமை என்னான்னா குழந்தைகள் உட்காரும் இலைகளிலும் பெரியவர்கள் சாப்பிடும் அளவுக்கு பரிமாறப்பட்டிருக்கும்.ஒக்கே.இதைப்பற்றி இன்னொரு பதிவு போடலாம் இப்ப மேட்டேருக்கு வரேன்)கூடவே தண்ணியை ஒரு பெட் பாட்டிலில் வைத்து விடுகிறார்கள்.நாமும் குடித்துவிட்டு வந்துவிடுகிறோம்.


நாம்குடித்துவிட்டு பாட்டிலை விட்டுவிட்டு வருங்காலத்திற்கு என்னத்த எடுத்து சென்று விடப்போகிறோம்.இது போன்ற பிளாஸ்டிக் குப்பைகளின் கூடாரத்தையா?

சமீபத்தில் ஒரு மண்டபத்தில் ஒராமாக காலியிடத்தில் இது போன்ற பாட்டில்களின் குவியல் இருந்தது.இதை என்னை செய்ய போகிறீர்கள் என்று நிர்வாகிகளிடம் கேட்டேன்.அவர்களிடமிருந்து தெளிவான பதில் இல்லை.(யார் கண்டா அடுத்த கல்யாணத்தில் நீங்கள் முன்பு குடித்த பாட்டிலிலே மீட்டும் தண்ணீர் குடிக்க நேரிடலாம்)


இது இல்லாமல் நாம் சுற்றுலா செல்லும்போது அங்குள்ள இயற்க்கை வளங்களை  நம்மால் முடிந்த வரை இந்த பாட்டில்கள் மூலம் அழித்து வருகிறோம்.இந்த பத்திவின் மூள அனைவருக்கும் விடுக்கும் வேண்டுகோள் என்னன்னா அடுத்த முறை நம்ம வீட்லயோ,நண்பர்கள் வீட்லயோ விருந்து நடக்கும் போது இது போன்ற பாட்டில்களை பயன்படுத்த மாட்டோம்னும்,சுற்றுலா செல்லும் போது பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்போம்னும் உறுதி எடுத்துக்குவோம்.
வருங்காலத்துக்கு வசந்தத்தை விட்டுச்செல்வோம.குப்பைகளை அல்ல !!!


மேலும் வாசிக்க "வருங்காலத்துக்கு வசந்தத்தை விட்டுச்செல்வோம்!குப்பைகளை அல்ல !!!"

Thursday, July 28, 2011

எல்லாம் செய்யும் இந்த ________காதல்!!!




ஊனை உருக்கும்
உயிரைக் கரைக்கும்
காலம் மறக்கும்
காத்திருக்கச் சொல்லும்

உறக்கம் அகலும்
உணவு கசக்கும்
கவிதை எழுதச் சொல்லும்
கனவு காணச் சொல்லும்


ஹார்மோன்களைத்
தூண்டிவிட்டு
ஹார்மோனியம் வாசிக்க விட்டு
வேடிக்கை பார்க்கும்

தனிமை பிடிக்கும்
தானாய்ப் பேச வைக்கும்
சிந்திக்க வைக்கும்
சிறகு முளைக்கும்

எதுவுமே இல்லாமல்
ஏதேதோ எண்ணச்சொல்லும்
ஒன்றுமே இல்லாமல்
ஒரு மணிநேரம் கூட பேசச் சொல்லும்


இவை எல்லாம் செய்யும் இந்த_______________ காதல்

டிஸ்கி-எனக்கு போதிய அனுபவம் இல்லாததால் கோடிட்ட இடத்தை தாங்களே நிரப்பிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.(அப்பா தப்பிச்சுட்டேன்)





மேலும் வாசிக்க "எல்லாம் செய்யும் இந்த ________காதல்!!!"

அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........


நேற்று சாலையில் போய்க்கொண்டிருக்கும்போது கூட்டமாக சில பள்ளி சிறுவர்கள் பள்ளியிலிருந்து திரும்பிக்கொண்டிருந்தனர் நானும் அவர்கள் பேசுவதை கவனித்துக்கொண்டே நடந்தேன்.அவர்கள் அநேகமாக எட்டாவது அல்லது ஒன்பதாவது படிக்கலாம்.
அதில் ஒரு சிறுவன் டேய் நேத்து மேட்ச்ல அவன் மட்டும் சதம் அடிக்கலன்னா கண்டிப்பா நாம தோத்து இருப்போம்ன்னான்.இன்னொருவன் ஆமாம் வர்றவன் எல்லாம் ஒரு ஓவர் ரெண்டு ஓவர்ல அவுட்ஆயிடரானுங்க ன்னான்.
அப்போதுதான் யோசித்தேன் இவர்கள் மட்டுமல்ல இவர்களுக்கு உலகத்தை கற்றுக்கொடுக்க,சமுதாயத்தை அடையாளம் காட்ட வேண்டிய பெரியவர்களான(நான் சின்னவன் தாங்க) நாமும் இப்படித்தான் பல சமயங்களில் பேசுகிறோம்.

அன்றாடம் நமக்கு அத்தியாவசிய பணி செய்யும் பணியாளர்களை நாம் மரியாதையாக பெரும்பாலும் அழைப்பதில்லை.துணி தேய்க்கிறவன் இன்னம் வரல,பேப்பர்காரன் வர வர சரியான டைம்க்கு வரமாட்டேங்கறான்,பால்காரன் போய்ட்டானா?, முடியை கொஞ்சம் விட்டு வெட்ட சொன்னேன் ரொம்ப ஷார்ட்டா வெட்டிட்டான்,துணியை நேத்தே குடுக்கறேன்னான் இன்னும் கொடுக்கல.

ச்சே!இந்த நேரம் பாத்து கரண்ட்ட கட் பண்ணிட்டானே,ஆட்டோ ஒட்றவன்கூட,மாடு மேய்க்கிரவன் கூட  நிம்மதியா இருக்கான்,
அதே போல் அலுவலகங்களில் நமக்கு கீழ பணிபுரியும் பணியாளர்களையும் நாம் மரியாதையோடு அழைப்பதோ வேலை வாங்குவதோ கிடையாது.ஏய் இங்க வா! இதை கிளீன் பண்ணு!இப்படி ஒருமையில் தான் அவர்களை அழைக்கிறோம்.ஒரு சிலர் தம்மை விட வசதி குறைந்தவர்களை ஒருமையில் பேசுவதுண்டு.
இவர்கள் மட்டுமல்ல  பிரபலங்களும் நம்மிடம் தப்புவதில்லை.நேத்து ஒரு படம் பாத்தேன் அதுல ஹீரோ என்னமா டான்ஸ் ஆடுறான்,செமையா பைட்பண்றான்,இவன எப்படி டீம்ல செலக்ட் பண்ணாங்க,போன சீரிஸ்ல ஒரு மேட்ச்லகூட இவன் ஒழுங்கா விளையாடல,போன எலக்சன்ல ஜெயிச்சவன் நிக்கல இப்ப வேற ஒருத்தன் நிக்கறான்.
நம்மைப்பார்த்து தான் நம் குழந்தைகளும் கற்றுக்கொள்கிறார்கள் நாம் தான் அவர்களுக்கு முன்மாதிரியாய் இருந்து நம்மை விட வயதில் மூத்தவர்களை மரியாதையோடு அழைக்கவும்,பேசவும் கற்றுக்கொடுக்க வேண்டும்.அதுக்காக கவுண்டமணி சொல்றது போல அவர்ர்ர் ,இவுர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு சொல்ல சொல்லுல .நம்ம விட வயசு அதிகமா இருந்தா பெரியவரே ன்னும்,வயசு கம்மியா இருந்தா தம்பின்னோ கூப்பிடுங்கோ.(இது அவர்கள் நேரில் இல்லாத போது அவர்களைப்பற்றி பேசும் போதும்)  


சுருக்கமா நான் என்னை சொல்ல வர்றேன்னா
அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும் வயசுக்கு மரியாதை குடுங்க!!!  
மேலும் வாசிக்க "அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்.........."

Wednesday, July 27, 2011

வேகத்தடையா பயணத்தடையா?????


என்னுடன் பணி புரியும் நண்பர் ஒருவர் திடீரென்று கையில் கட்டுடன் நிறுவனத்துக்கு வந்தார்.என்னங்க நேத்து கூட நல்லாத்தான இருந்தீங்க என வழக்கமான கேள்வியை கேட்டேன்.அதுக்கு அவர் சொன்ன பதில் தான் இந்த பதிவுக்கு மேட்டர்.
வண்டில போய்கிட்டு இருக்கும் போது ஸ்பீட் பிரேக்கர் இருக்கிறது தெரியாமவேகமா போய் ஸ்கிட் ஆகி விழுந்துட்டேன்னார்.ஏங்க நீங்க தினமும் போற ரோடுதான ஸ்பீட் பிரேக்கர் இருக்கறது           தெரியாதா ன்னேன் நான் விவரமா?

அடப்போடா?நான் மதியம் வரும் போது ஸ்பீட் பிரேக்கர் இல்லடா.திரும்பி நைட் போகும்போது ஸ்பீட் பிரேக்கர் போட்டு இருக்காங்கடா னார்.
அப்போது தான் எனக்கு உரைத்தது நம்ம ஊரில் நிறைய வேகத்தடைகள் இருப்பதே தெரிவதில்லை.தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள வேகத்தடைகளில் நீங்கள் பார்த்திருப்பீர்கள் தொலைவில் வரும் போதே தெரிவதற்காக வெள்ளை, மஞ்சள் நிறத்தில்,வேகத்தடை இருப்பது தெரியும்படி அடையாளமிட்டிருப்பார்கள்.அது போக எச்சரிக்கை பலகையும் வைத்திருப்பார்கள்.

ஆனால் பெரும்பாலானமாநகரச்சாலைகளிலும்.ஊரக, கிராமப்புறச்சாலைகளிலும் உள்ள வேகதடைகளில் இது போல இருப்பதில்லை.

தினமும் ஒரே சாலையில் பயணிப்போரே புதிதாய்ப்போட்ட வேகத்தடை தெரியாமல் விபத்துக்குள்ளாகும் போது புதிதாய் அந்த சாலையில் பயணிப்போரின் கதி???
ஹெல்மட்டை போடுங்க,சீட் பெல்ட போடுங்க,ட்ராபிக் ரூல்ஸ பாலோ பண்ணுங்க அப்படின்னுல்லாம் சொல்லுரவங்க,இதெல்லாம் பாலோ பண்ணியும் இப்படி விபத்து ஏற்படாம தடுக்க,எங்க வேகத்தடை போட்டாலும் தொலைவிலிருந்தே தெரியுற மாதிரியும்,இரவு நேரங்களில் ஒளிருவது போலவும் போட்டீங்கன்னா ரொம்ப புண்ணியமாப்போகும்.

நண்பர்களே அவங்க என்னவோ பண்ணிட்டு போறாங்க நான் உங்களுக்கு சொல்லிக்கறது என்னன்னா அளவோட வேகத்துல வண்டிய ஓட்டுங்க’.
வேகத்தடை பயணத்தடையா மாறாம பாத்துக்கங்க!!!
மேலும் வாசிக்க "வேகத்தடையா பயணத்தடையா?????"

Friday, July 22, 2011

ஊருக்குதான் உபதேசம்!!!



அன்று ஒரு பேரணி
நடைபெற்று கொண்டிருந்தது 
ஆர்வ மிகுதியால் எட்டிப்பார்த்தேன்
என்ன பேரணி என்று

குழந்தை தொழிலாளர்
ஒழிப்பு பேரணியாம்


கோஷம் போட்டார்கள்
குழந்தைகள் வருமானம்
நாட்டிற்கு அவமானம்


பிஞ்சுகளை வெம்ப விடாதிர் 
அவை விழுது விட்டு 
வேரூன்ற வேண்டியவை என்று



பேரணி முடிந்து
களைத்து அமர்ந்தவர்களுக்கு
குளிர்பானம் விநியோகித்தான்
கந்தன் என்ற பத்து வயது சிறுவன்!!!



மீள்வு!
புகைப்படம் உதவி-நண்பன் மாதேஷ்



மேலும் வாசிக்க "ஊருக்குதான் உபதேசம்!!!"

Monday, July 18, 2011

முத்தமிட வாரீயளா?

யாருக்கு எப்படியோ
இந்த பழக்கம் எனக்கு
எப்படி வந்தது என்று
எனக்கே தெரியவில்லை

அவளது உதடுகளை உரசாமல்
அன்றைய தினம் எனக்கு
அவ்வளவு இனிப்பாய் இருப்பதில்லை

அது என்னவோ தெரியவில்லை
ஒரு நாள் தவறினால் கூட
ஒரு கை இழந்தது போலிருக்கும்

நான் முத்தமிடும் நேரத்தில்
எனக்கு சொந்தமான அந்த உதடுகள்
எஞ்சிய நேரங்களில் வேறு யாருடனோ  
முத்தமிட்டுக்கொண்டிருக்கும்


இதில் எனக்கு  அவமானமோ வருத்தமோ
இம்மியளவும் இருப்பதில்லை
சொல்லப்போனால் இது எனக்கு
சந்தோசத்தையே தருகிறது

ஏனிப்படி சொல்லுகிறேன் என்றால்
இச்சமூகத்தில் நிலவிய
சாதி பாகுபாட்டை
சிறிதளவு குறித்த பெருமை இவளது
உதடுகளையே சேரும்



சிலநேரம் இவளை முத்தமிடும் தருணங்களில் தான்
பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன
அது அரசியலாகட்டும்
அலுவலகமாகட்டும்
ஆனால் பல நேரங்களில்
இததருணங்கள் இக்கட்டில் போய் முடியும்

ஆனாலும் அவளது உதடுகளை
முத்தமிடாமல் என்னாலிருக்கமுடியாது
என்னால் மட்டுமல்ல என்னைப்போல்
பலரும் அவளது உதட்டு சுவைக்கு
அடிமையாகிக்கிடக்கின்றனர்
அப்படிதானே!
இதோ நீங்களும் முத்தமிடுங்கள்
அவளது உதடுகளில்!!!






மேலும் வாசிக்க "முத்தமிட வாரீயளா?"

Friday, July 15, 2011

கருகிய தளிர்களுக்காக....

      
     

பத்து மாசஞ் சுமந்து
பொத்திப்பொத்தி வளர்த்து
உனக்கு பலி குடுக்கவா
ஊட்டிஊட்டி வளத்தேன்?



பள்ளிக்கூடம் போன புள்ள
படிசிப்புட்டு திரும்புமுனு
பாதயெல்லாங் கண்ணுவச்சு
பாத்திருந்தவ நெனப்பயயெல்லாம்
பொசுக்க்கிப்புட்டுபோயிட்டியே
பொல்லாத நெருப்பே!
கோயில் கோயிலா ஏறி
கும்பிட்டு பெத்த மவ
தவந்தவமா இருந்து
தங்கமாட்டம் பெத்த பய
எனக்கு கொள்ளிபோடுவான்னு
நினைச்சுகிட்டு இருந்தேனே
நெனப்பயயெல்லாம் கருக்கிப்புட்ட
நன்றி கெட்ட நெருப்பே!

பாலூட்டி தேனூட்டி
பசுந்நெய்ய கலந்தூட்டி
பாசத்தோடு வளத்த புள்ள
பாடையில பாக்கையில
பத்திகிட்டு எரியுதே வயிறு
பாவஞ்செஞ்ச நெருப்பே!



கொலைகாரன் கொள்ளகாரன்
கயவர்கள் பலர் இருக்க
மழலை மொழி மாறாத
மலராத மொட்டுக்களை
மூச்சடக்க்க வச்சுட்டியே
மூள கெட்ட நெருப்பே!


அருமப்புள்ள மூஞ்சி கூட
அடையாளம் தெரியலையே


பெத்த வயிறு எரிய சொல்றேன்
போசுங்கிப்போவ நெருப்பே!!
--
சூலை-16.கும்பகோணம் பள்ளி தீ விபத்து ஏழாம் ஆண்டு நினைவு நாள்
மலர்ந்து மொட்டு கூட  விடாமல் கருகிப்போன அந்த தளிர்களின் ஆன்மா
அமைதியில் உலவிடவும்,சோகத்தில் பெரிய சோகம் புத்திர சோகம் என்பார்கள் தம் பிஞ்சுகளை இழந்து வாடும் பெற்றோர்களுக்காகவும்
பிராத்திப்போம் நண்பர்களே!





மேலும் வாசிக்க "கருகிய தளிர்களுக்காக...."

Tuesday, July 12, 2011

அம்மாவே போதும்!

எப்போதும் என்னைப்பற்றி எண்ணியிருப்பாள்
இப்போதாவது நான் அவளைப்பற்றி

ஒன்றுமே இல்லாத எனக்கு
உரு கொடுத்தவள்

ஒன்றும் புரியாமலிருந்த எனக்கு
உலகம் புரிய வைத்தவள்

நான் காயப்பட்டால்
தான் அழுபவள்

வறட்சியை தான் ஏற்றுக்கொண்டு
வசந்தத்தை எனக்கு தருபவள்

புயலை எதிர் கொண்டு தென்றலாய்
என் மீது வீசுபவள்

புறப்படும்போது
புன்னகைத்திருப்பாள்

திரும்பி வரும் வரை
துடித்திருப்பாள்

முள்ளை தாங்கிக்கொண்டு
என் பாதையில் பூ தூவுபவள்

நான் தோல்வியுறும் போது
தோள் கொடுப்பவள்

எனது வெற்றியில்
என்னை விட புளங்காகிதம் கொள்பவள்


இன்னும் என்ன சொன்னாலும் தகும்
உன்னைப்பற்றி என்றால்

அடப்போடா!அம்மா என்று சொல்
அதுவே போதும் என்கிறாய்!



மேலும் வாசிக்க "அம்மாவே போதும்!"

Monday, July 11, 2011

முக்கியச்செய்திகள்

காஷ்மீர் அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார்
பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு

காவிரியில் தண்ணீர் விட முடியாது
கர்நாடக முதல்வர் திட்டவட்டம்!

அறவே ஒழித்து கட்டுவோம் தீவிரவாதத்தை
அமெரிக்க அதிபர் பேட்டி!


இந்தியா வல்லரசாகப்போவது உறுதி
பாராளுமன்றத்தில் பிரதமர் பேச்சு!

நதிநீர் இணைப்பு திட்டம் விரைவில் நிறைவேறும்
உள்துறை அமைச்சர் உறுதி!

மேலும் ஒரு போலிச்சாமியார்
மோசடி வழக்கில் கைது!

நிதி நிறுவன அதிபர் தலைமறைவு
பணம் கட்டியவர்கள் கதறல்!

நாங்கள் நட்பாகத்தான் பழகுகிறோம்
பிரபல நடிகை விளக்கம்!

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மின்வெட்டே இருக்காது
எதிர்க்கட்சித்தலைவர் அறைகூவல்!


நாளை புத்தாண்டு(2050)
தலைவர்கள் வாழ்த்து!!!!



மேலும் வாசிக்க "முக்கியச்செய்திகள்"

Saturday, July 9, 2011

எஸ்.எம்.எஸ்.ஜோக்ஸ்


டீச்சர்-ஆப்பிளுக்கும் ஆரஞ்சுக்கும் என்ன வித்தியாசம்?
நம்மாளு-ஆரஞ்சோட கலர் ஆரஞ்சு ஆனா ஆப்பிலோட
கலர் ஆப்பிள் கிடையாது(என் இனமாடா நீ)
---------------------------------------------------------------------------------------------------------------------

கணவன்-இன்னைக்கு சண்டே,இதை புல்லா என்ஜாய்
பண்ணப்போறேன்,அதுக்கு மூணு சினிமாடிக்கெட்
வாங்கிஇருக்கேன்!
மனைவி-மூணு எதுக்குங்க?
கணவன்-உனக்கும் உங்க அப்பா அம்மாவுக்கும்!!!(நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்)
------------------------------------------------------------------------------------------------
நம்மாளு-ஏன் டாக்டர் நீண்ட நாள் வாழ ஏதாவது மருந்து இருக்கா?
டாக்டர்-கல்யாணம் பண்ணிக்கங்க
நம்மாளு-அது எப்டி உதவும்
டாக்-இல்ல,இது போல யோசிக்க தோணாது(சொந்த செலவில் சூனியம்ங்கறது இது தானா?)
-------------------------------------------------------------------------------------------------

அமெரிக்க கலாசாரம்
மகள்-நேத்து எனக்கு கல்யாணம் ஆய்டுச்சு.
உங்களுக்கு சொல்ல மறந்துட்டேன்.
அப்பா-பரவால்லம்மா அடுத்த தடவை மறந்துடாதே(இதுக்கு ஏன் அமெரிக்கா
நம்மூரிலே பிரபுதேவா,செல்வராகவன்,நயன்தாரா,மற்றும் பலர் இருக்காங்களே)


------------------------------------------------------------------------------------------------------

நண்பன் 1-பட்டாம் பூச்சிக்கு தெரியாது அதன் சிறகின் வண்ணமும்,அழகும்
அது மனிதனின் கண்ணுக்கு மட்டுமே தெரியும்
நண்பன்2-இப்ப என்னடா சொல்ல வர்ற?
நண்பன்1-அதே மாதிரி உன்னைப்பற்றி உனக்கு தெரியாது எனக்கு தான் தெரியும் நீ எவ்வளவு பெரிய டுபாக்கூர்னு!!(ஹா ஹா தொப்பி,தொப்பி)
--------------------------------------------------------------------------------------------------------
மனைவி-எங்க சொர்கத்துல கணவனும் மனைவியும் சேர்ந்து வாழ முடியாதாமே?
கணவன்-அதனாலதாண்டி அது சொர்க்கம்(மனைவி அமைவதெல்லாம் -பாட்ட மாத்துங்கப்பா)
--------------------------------------------------------------------------------------------------------

அனகோண்டாவுக்கும் அலுமினிய குண்டாவுக்கும் என்ன வித்தியாசம்?
தண்ணிக்குள்ள இருந்தா அது அனகோண்டா !
உள்ள தண்ணி இருந்தாஅது அலுமினிய குண்டா(நீ சொன்னத அப்பிடியே தஞ்சாவூர் கல்வெட்டில் எழுதி வை பின்னால வர்ற சந்ததிகள் படிச்சு தெரிஞ்சுக்கட்டும்)
----------------------------------------------------------------------------------------------------------
மேலும் வாசிக்க "எஸ்.எம்.எஸ்.ஜோக்ஸ்"

Tuesday, July 5, 2011

மனிதநேயம்


                                


                பேருந்தில் ஊனமுற்றோர் நின்றிருந்தாலும்
       பார்காததது போல் அமர்ந்திருக்கும் சிலர்
    
       பாதை கடக்க முடியாமல் திணறும்
       பார்வையட்றோரை பார்க்காமல் ஓடும சிலர்

       யாருக்கேனும் விபத்து நேரிட்டால் கூட
       யாருக்கென்ன என ஓடும் சிலர்
    
       பாதாள சாக்கடை திறந்தே கிடந்தாலும்
       பார்த்துக்கொண்டே போகும் சிலர்

       பொருட்கள் விற்க வீடு தேடி வருவோரை
       பொறுமையின்றி பொறிந்து தள்ளும் சிலர்

       பக்கத்துக்கு வீட்டில் கொலை கொள்ளையே நடந்தாலும்
       நமக்கென்ன என டி.வீ .பார்க்கும் சிலர்

       ஆதரவற்றோருக்கு ஆதரவு கேட்டு வரும்
       அன்பு உள்ளங்களை அவமதிக்கும் சிலர்

       ஏழை மக்கள் சிறுக சேமிக்கும் பணத்தையும்
       ஏப்பம் விடும் சிலர்

       என பலர் இவ்வுலகில் உலவிக்கொண்டிருந்தாலும்
       கொஞ்சமேனும் மழை பெய்கிறதென்றால்
                

      அது உலகின்எங்கோ ஓர் மூலையில்
      மனிதநேயம் வாழ்ந்து கொண்டிருப்பதாலே!! 

மேலும் வாசிக்க "மனிதநேயம்"

Friday, July 1, 2011

எஸ்.எம்.எஸ்.ஜோக்ஸ்

ஒரு பேருந்தில்
மனைவி-என்னங்க பின்னாடி இருந்து
ஒருத்தன் என் கால சுரண்டுறாங்க...
கணவன்-அப்படி திரும்பி முகத்தைக்காட்டு
நாதாரி சாகட்டும்.(கடுப்பேத்தரான் மை லார்ட்)
-------------------------------------------------------------------------------------------------------------
நேத்து பஸ்ல போனப்போ ஒருத்தர் என் தோளத்தட்டி
இது ராயப்பேட்டயான்னு கேட்டார் !
இல்ல இது என் தோள்பட்டன்னு சொன்னேன்.
ஆனா அவர் எதுக்கு என்னை மொறைச்சார்னு தான் தெரியல.
யாரோ அவர கோபப்படுத்திட்டாங்க போலிருக்கு!!!!!!!(யாருப்பா அது)
-------------------------------------------------------------------------------------------------------------
பிச்சைக்காரன்-அய்யா! சாப்ட்டு ஒரு வாரம் ஆச்சுயா
நம்மாளு-ஏன்பா ஒரு வாரமா பசிக்கலையா?
பிச்சை-!!!!!!!!!!!!!!(அட பிச்சைக்கு பொறந்த பிச்சை)
-------------------------------------------------------------------------------------------------------------
பாய் ப்ரெண்ட்க்கும் கேர்ள் பிரென்ட்க்கும் என்னை வித்தியாசம்?
நீ ஹாஸ்பிடல்ல இருக்கும் போது உடம்பு எப்டி இருக்குன்னு கேட்கிறவ
கேர்ள் பிரென்ட் !நர்ஸ் எப்டி இருக்கான்னு கேட்குறவன் பாய் ப்ரெண்ட்
(பசங்களா திருந்துங்கப்பா)
-------------------------------------------------------------------------------------------------------------
உங்கள் சுய கட்டுப்பாட்டை(self control)பரிசோதனை செய்ய
ஒரு சவால் !
முதலிரவில் உங்களால் தூங்க முடியுமா?(அடப்பாவி நீயெல்லாம் உருப்படுவியா)
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

மேலும் வாசிக்க "எஸ்.எம்.எஸ்.ஜோக்ஸ்"