Thursday, December 22, 2011

ஒருவேளை கனவு நனவானால்?


நந்தன் நிலெக்கணி (Nandan Nilekani)அவர்களின் கனவான தேசிய 
அடையாள அட்டை நடைமுறைக்கு வந்தால்.............எனக்கு வந்த ஒரு 
மெயிலின் நகைச்சுவை தமிழாக்கம்,

டெலிபோன் ஆபரேட்டர்: வணக்கம் சார் எங்கள் PIZZA HUT –க்கு அழைத்ததற்கு நன்றி,நான் உங்களுக்கு எப்படி ...............?

வாடிக்கையாளர்: ஹல்லோ...நான் ஆர்டர் பண்ண......
டெலிபோன் ஆபரேட்டர்:சார்,நான் உங்க MULTI PURPOSE ID CARD நெம்பர் தெரிஞ்சுக்கலாமா?

வாடிக்கையாளர்: அது வந்து.ம்ம்ம்.,ஒரு நிமிஷம் இருங்க.ஆங்-894859 12594 -1259934 -546.

டெலிபோன் ஆபரேட்டர்: ஹலோ குமார்,நீங்க 18,வது குறுக்குச்சந்து,நாலாவது தெரு,டுபாக்கூர் பேட்டைல இருந்து பேசுறிங்க நீங்க பேசுற நெ.22XXXXX0,நீங்க ஒரு மொபைல் வச்சிருக்கீங்க அதோட நெ.09XXXX XXXX1.

வாடிக்கையாளர்: வாவ்,எப்படிங்க தெரிஞ்சுது,உங்களுக்கு?
டெலிபோன் ஆபரேட்டர்: நாங்க உங்க ID CARD சிஸ்டத்தில இணைஞ்சுருக்கோம் சார்.

வாடிக்கையாளர்: ஓ!பரவாயில்லையே!நல்ல டெக்னாலஜி டெவலப்மெண்ட்,
ஓகே. பீட்சா ஆர்டர் பண்ணத்தான் இப்போ கூப்பிட்டேன்..

டெலிபோன் ஆபரேட்டர்: சொல்லுங்க சார்,என்ன பீட்சா
வாடிக்கையாளர்: ம்.sea food pizza இருக்கா உங்க கிட்ட?

டெலிபோன் ஆபரேட்டர்: இருக்கு சார் ஆனா அதை உங்களுக்கு ஒத்து வராதுசார்.

வாடிக்கையாளர்: (இவன் என்ன நமக்கு ஒத்து வராதுன்னு சொல்றது) ஏங்க நான் ஆர்டர் பண்றத குடுக்க வேண்டியது தான,என்ன குறுக்க குறுக்க பேசிக்கிட்டு.

டெலிபோன் ஆபரேட்டர்: சார்,உங்க மெடிக்கல் ரெக்கார்ட்ஸ் படி உங்களுக்கு high bp, கொலஸ்ட்ரால் எல்லாம் இருக்கு சார் அதனால இது உங்களுக்கு ஒத்து வராது சார்.

வாடிக்கையாளர்: (கொய்யால வாய்க்கு ருசியா பொண்டாட்டிக்கு தெரியாம சாப்பிடலாம்னு பாத்தா இவனே போட்டு குடுத்துடுவான் போல)வேற என்ன ஆர்டர் பண்ண?(நாம சாப்பிடறதுக்கு இவன ஐடியா கேக்க வேண்டியதா போச்சே)

டெலிபோன் ஆபரேட்டர்:  எங்களோட லோ ஃபேட்(LOW FAT PIZZA) பீட்ஸா ட்ரை பண்ணுங்களேன்.அது உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.

வாடிக்கையாளர்: அது எப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க..(இவன் இன்னைக்கு ஒரு முடிவில தான் இருப்பான் போலிருக்கு)

டெலிபோன் ஆபரேட்டர்: போன வாரம் கொழுப்பற்ற உணவுகள் அப்படிங்கற ஒரு புத்தகம் வாங்கியிருக்கீங்க.உங்க கிரடிட் கார்ட் யூஸ் பண்ணி.,

வாடிக்கையாளர்: (என்னடா இவன் போன வாரம் குவார்ட்டர் அடிச்சுட்டு குப்புற கிடந்தத கூட சொல்லுவான் போலிருக்கு..) ஹி ஹி ஆமாங்க மறந்துட்டேன்,அப்ப சரி அதிலையே ஒரு மூணு FAMILY SIZE கொண்டு வந்துடுங்க.,பணம் எவ்வளவு?

டெலிபோன் ஆபரேட்டர்: சரியான தேர்வு. அஞ்சு பேர் இருக்குற உங்க வீட்டுக்கு இது போதுமானது. மொத்தம் RS.500 ஆகுது சார்.

வாடிக்கையாளர்: கிரெடிட் கார்ட்ல PAY பண்ணிடவா?

டெலிபோன் ஆபரேட்டர்: இல்ல சார்,பணமாவே கொடுத்துடுங்க.உங்க கிரடிட் கார்ட் இந்த மாசம் லிமிட் தாண்டிடுச்சு.அது மட்டுமில்லாம,அதுல நீங்க செலுத்த வேண்டிய ஹவுசிங் லோன் இன்னும் பாக்கியிருக்கு.

வாடிக்கையாளர்: (நல்ல சொல்றாங்கையா டீடெயில்லு).சரி அப்படின்னா நான் இப்பவே பக்கத்துல இருக்கற ATM போய் பணம் எடுத்துட்டு வரேன்.

டெலிபோன் ஆபரேட்டர்: அது முடியாது சார்.உங்க அக்கவுண்டோட இன்னைய WITHDRAWAL LIMIT தாண்டியாச்சு.

வாடிக்கையாளர் ; ( அடங்க.,எல்லாப்பக்கமும் அணை கட்டுரானே?) சரி விடுங்க என்கிட்டே பணம் இருக்கு .தரேன்.டெலிவரி ஆக எவ்வளவு நேரம் ஆகும்.

டெலிபோன் ஆபரேட்டர்: 45- நிமிசத்துக்குள்ள வந்து சேந்த்துடும் சார்.உங்களுக்கு வெயிட் பண்ண விருப்பமில்லைன்னா உங்களோட MARUTHI SWIFT எடுத்துக்கிட்டு வந்து வாங்கிக்கலாம் சார்.

வாடிக்கையாளர் : என்னாது?

டெலிபோன் ஆபரேட்டர்:ஆமா சார் .ஏங்க சிஸ்டம் சொல்லுது நீங்க ஒரு MARUTHI SWIFT வைச்சிருக்கீங்க அதோட நெ.TN 00 AA XXX5.`

வாடிக்கையாளர் : (Ssssssssssss ப்பா இனிமே தாங்காதுடா சாமி)
டெலிபோன் ஆபரேட்டர்: வேற ஏதாவது தகவல் வேணுமா சார் ?

வாடிக்கையாளர் : விளம்பரத்துல இருக்கறமாதிரி கோக் free தான?

டெலிபோன் ஆபரேட்டர்: நார்மலா நாங்க கொடுப்போம் சார்,ஆனா உங்க ரெக்கார்ட்ஸ் படி நீங்க டயாபடிக் பேஷண்டா  
இருக்கதறதுனால..........

வாடிக்கையாளர் : போடாங்..*&^%$%Ω$#*@β&%$**&^%¥α....


டெலிபோன் ஆபரேட்டர்: பாத்து பேசுங்க சார்.போன வருஷம் நவம்பர் மாசம்,பத்தாம் தேதி பக்கத்து வீட்டுக்காரரை இது மாதிரி கெட்ட 
வார்த்தையில் திட்டியதாக லோக்கல் ஸ்டேசன்ல உங்க மேல ஒரு கம்ப்ளைன்ட் இருக்கு.

வாடிக்கையாளர் : (போங்கடாங்கொய்யாங்கோ.இவனுக்கு போன் போட்டதுக்கு பதிலா வீட்டுல தேவையில்லாத ஆணிய எல்லாம் புடுங்கியிருக்கலாம் போல.)

டெலிபோன் ஆபரேட்டர்: சார்,நீங்க இப்ப மனசுல என்ன நினைக்கிறீங்கன்னா......
வாடிக்கையாளர்: ..................................................????அவரு மயங்கி விழுந்ததை நான் சொல்லித்தான் தெரியனுமா?---நந்தன் நிலெக்கணி பற்றிய தகவலுக்கு கிளிக்கவும்.

37 comments:

கணேஷ் said... Reply to comment

கொலவெறிக் கற்பனையா இருக்கே கோகுல்... நடந்தாலும் நடக்கலாமோன்னு பயப்பட வெச்சுடுச்சு. அதே சமயம் வாய்விட்டுச் சிரிக்கவும் வெச்சுடுச்சு. நன்றி.

தமிழ்வாசி பிரகாஷ் said... Reply to comment

நகைச்சுவையா இருந்தாலும், அடையாள அட்டை வந்தால் இப்படி நடந்தாலும் நடக்க வாய்ப்பு உள்ளது...


வாசிக்க:
முல்லைப்பெரியாருக்கு ஆதரவாக மதுரையில் கடைகள் முழுஅடைப்பு, ஆட்டோக்கள் ஓடவில்லை.

மதுரன் said... Reply to comment

அவ்வ்.. நல்லா யோசிக்கிறாய்ங்கய்யா...

வெளங்காதவன் said... Reply to comment

ஹா ஹா ஹா!!!!!

:-)

Online Works For All said... Reply to comment

World No.1 Money Making Site. 100% Without Investment Job.

Visit Here: http://bit.ly/vqP0GV

விக்கியுலகம் said... Reply to comment

எலெய் மாப்ள இப்படி நடக்கறதா நெனச்சி பாத்தாலே பயங்கரமா இருக்குய்யா..!

K.s.s.Rajh said... Reply to comment

நல்லாத்தான் யோசிக்கிறாங்க பாஸ் அருமை

எங்கள் நாட்டில் அடையாள அட்டை நடைமுறையில் இருக்கு பாஸ் இங்கே தேசிய அடையாள அட்டை மிக முக்கியமான ஒன்று.

நண்டு @நொரண்டு -ஈரோடு said... Reply to comment

அருமை...அருமை...

கவிதை வீதி... // சௌந்தர் // said... Reply to comment

நல்ல நையாண்டி கோகுல்..

உண்மையில் நம்மை பேச விடமாட்டாங்க....

ஒவ்வோறு புது கண்டுபிடிப்பும் நமக்கு பல சாதக பாதகங்களை கொண்டு வருகிறது

Lakshmanan17 said... Reply to comment

கொடுமையான கற்பனை. அஃப் கோர்ஸ் ஆங்கிலப் பதிவின் தமிழாக்கம் என்று சொன்னீர்கள். ஒரு கேர்மமாத்தான் சிந்திக்கிறாய்ங்க சிரிச்சு சிரிச்சு ...............

ஹைதர் அலி said... Reply to comment

வருங்காலத்தை நினைத்தால் பயமாக இருக்கு ராசா பேரப் புள்ளைகள் சேத்தாய்ங்கே தொலைஞ்சாய்ங்கே

MANO நாஞ்சில் மனோ said... Reply to comment

எலேய் மக்கா சிபி'யின் கில்மா லீலைகள் எல்லாம் வெளியே வர நல்ல வாய்ப்பா இருக்கும், சீக்கிரமா அமல்படுத்துங்கப்பா புண்ணியமா போகும்...!!!

தனிமரம் said... Reply to comment

வணக்கம் கோகுல்!
நலமா தொடர்ந்து வரமுடியாவிட்டாலும் பதிவுகளைப் படிக்கின்றேன்!
தொலைபேசி ஆப்ரேட்டர் பதிவுடன் நகைச்சுவையாக எதிர்காலத்தில் நிஜமாகக் கூடியவிடயத்தை ரசித்துத் சிரித்தேன்! என்ன கொலைவெறி கோகுலுக்கு பீஸா மீது!
 

மாய உலகம் said... Reply to comment

ஹா ஹா கலக்கல் கோகுல்.... வடிவேல் அட்டெண்ட் செய்து பேசியது போல இருக்கு நடை... அருமை...

புலவர் சா இராமாநுசம் said... Reply to comment

மிகவும் அருமையான நகைச்சுவை!
இப்பவும் சிரிச்சுகிட்டே
இருக்கிறேன்
புலவர் சா இராமாநுசம்

Rathnavel said... Reply to comment

அருமை.

எஸ்.பி.ஜெ.கேதரன் said... Reply to comment

@மாய உலகம்///

ஹா ஹா கலக்கல் கோகுல்.... வடிவேல் அட்டெண்ட் செய்து பேசியது போல இருக்கு நடை... அருமை...
.

ம்ம்ம்.....

எனக்கு பிடித்தவை said... Reply to comment

ஹா ஹா நடந்தாலும் நடக்கும்

Yoga.S.FR said... Reply to comment

வணக்கம்,கோகுல்!இது எங்கேயோ படித்தது போல் இருக்கிறதே,மீள்பதிவா??????

!* வேடந்தாங்கல் - கருன் *! said... Reply to comment

என்னடா இவன் போன வாரம் குவார்ட்டர் அடிச்சுட்டு குப்புற கிடந்தத கூட சொல்லுவான் போலிருக்கு..)//

மாப்ள .. இன்னும் நினைச்சு சிரிச்சிட்டே இருக்கேன், நகைச்சுவையாக இருந்தாலும்,ஒரு விழிப்புணர்வு இருக்கிறது..

"என் ராஜபாட்டை"- ராஜா said... Reply to comment

ஓவர் கற்பனை

"என் ராஜபாட்டை"- ராஜா said... Reply to comment

படித்து கருத்துகளை சொல்லுங்கள்


2011 ஆண்டில் மிக சிறந்த தமிழ் திரைப்படம் எது ?

Abdul Basith said... Reply to comment

ஹாஹாஹா... நல்ல நகைச்சுவை. அதே நேரம் அதில் உள்ள பாதகங்களை பற்றியும் சிந்திக்க வைத்தது.

guna thamizh said... Reply to comment

நடந்தாலும் வியப்பதற்கில்லை..

சிந்திக்கும்விதமாக சொன்னீர்கள் நண்பா..

ரசிகன் said... Reply to comment

ஹா ஹா... நல்லா வளருது தொழில்நுட்பம்... ரசிக்கும் படியான பதிவு.

ரஹீம் கஸாலி said... Reply to comment

ஹா...ஹா....ஹா... நல்ல கற்பனை. எதிர்காலத்தில் இப்படியும் நடக்குமோ

சென்னை பித்தன் said... Reply to comment

ஹா,ஹா,ஹா.கலக்கிட்டீங்க கோகுல்!

ராஜா MVS said... Reply to comment

கலக்கல்... நண்பா...

ரமேஷ் வெங்கடபதி said... Reply to comment

SUPERB!

M.R said... Reply to comment

நல்ல கற்பனை நண்பா

துஷ்யந்தன் said... Reply to comment

கோகுல் முடியல்ல..... அவ்வ்வ்வவ்வ்வ்வவ் ...
செமையா கலாய்க்கிறீங்கப்பா.. ஹீ ஹீ

மகேந்திரன் said... Reply to comment

நண்பரே,
சிரிப்பாக இருந்தாலும்
மறுமுனையில்
சிந்திக்க வைக்கிறது...

veedu said... Reply to comment

நகைச்சுவையாக இருந்தாலும் நடக்கும்...கோகுல்....

இன்று என் வலையில் படிக்க

2011ல் வெளிவந்த சிறந்த திரைப்படங்கள்

அம்பலத்தார் said... Reply to comment

தனிமனித விபரப்பாதுகாப்பு எவ்வளவு தூரத்திற்கு கேள்விக்குறியாகிவிட்டது என்பதை சுவாரசியமாகப் பதிவிட்டிருக்கிறீர்கள்

திண்டுக்கல் தனபாலன் said... Reply to comment

மிகவும் அருமை Gokul!
பகிர்விற்கு நன்றி!
சிந்திக்க :
"உங்களின் மந்திரச் சொல் என்ன?"

cheena (சீனா) said... Reply to comment

அன்பின் கோகுல் - அருமை அருமை - நகைச்சுவையின் உச்சம் - நடக்குமா - ஏன் நடக்காது - நம்மைப் பற்ரிஅய் அனைத்துத் தகவல்களும் கிடைத்து விட்டால் ...... என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் .. கற்பனை நன்று - நல்வாழ்த்துகள் கோகுல் - நட்புடன் சீனா

Anonymous said... Reply to comment

karpanai madathanamaa irukku. Unique ID doesnt mean free for all distribution of information.